இன்று என்ன கொண்டாட்டம்
என கேட்டான் ஒருவன்.
குடியரசு தினமன்றோ
என நான் பதிலுரைத்தேன்.
குடியரசு தினமென்றால்
என்னதென்று மீண்டும் கேட்டான்.
அரசியல் சாசனத்தை
நாம் ஏற்ற நாளென்று
நானும் பதில் சொன்னேன்.
என்னதான் சொல்கிறது நம்
அரசியல் சாசனமென்று
சளைக்காமல் கேட்டான் அவன்.
ஜனநாயக, சோஷலிச,
மதச்சார்பற்ற, இறையான்மை கொண்ட
நாடாகிய இந்தியாவில்
எல்லோருக்கும் எல்லா உரிமைகளும்
உண்டென்று சொல்கிறது
அரசியல் சாசனமென்று
விரிவாக விளக்கினேன் நான்.
அப்படியா, நிஜமாகவா?
நிஜத்தில் அப்படித்தான்
இருக்கிறதா என்றொரு
கேள்வி வெடித்துச் சிதற
மௌனத்தை பதிலாக்கி
வெட்கத்தில் தலை குனிந்தேன்.
ரத்தமின்றி யுத்தமின்றி
இந்தியாவைக் கைப்பற்றிய
ஒபாமாவிற்குச் சொல்வோம்,
குடியரசு தின வாழ்த்துக்கள்
.
தமிழில் சொன்னால் -கையறு நிலை என்பார்கள். நம்பிக்கையின்மையும் இயலாத நிலையம் தான் வெளிப்படுகிறது. pessimism personified
ReplyDelete