கோயில் கோயிலாய் கும்பிட்டார்,
மசூதி, சர்ச், புத்த விஹாரம்
என மாறி மாறி வழிபட்டார்.
எல்லா மதங்களின்
எல்லாக் கடவுள்களுக்கும்
தங்கமும் வைரமுமாய்
கோடிகளில் காணிக்கையளிப்பதாய்
வேண்டிக் கொண்டார்.
ஆயிரக்கணக்கான தமிழர்களின்
ரத்தம் ஒழுகும் வாயோடு
தெரிந்த பிசாசு நானென்று
ஒப்புதல் வாக்குமூலமும்
கொடுத்துக் கொண்டார்.
கொலைகளும் பாலியல் வல்லுறுவுகளும்
காணாமல் போன இளைஞர்களும்
அறுந்து தொங்கிய தாலிகளும்
அகதிகள் முகாம் கொடுமைகளும்
இன்ன பிற அக்கிரமங்களும்
கடவுளின் கருணையில்
புனிதமென மாறிப்போகுமென்ற
சிந்தனைக்கு வேட்டு வைத்தார்கள்.
கொடியவனை மக்கள்
ஓட ஓட துரத்தினர்.
இங்கேயும் கூட
கடந்த கால கறைகளை
பெருமிதமாக சுமக்கும்
ஒரு பொய் மனிதனிடம்
கொஞ்சம் நினைவு படுத்துங்கள்,
கடவுளை விட
மனிதர்கள் விவரமானவர்கள் என்று.
மும்முரமாய் தேடச் சொல்லுங்கள்.
ஐந்தாண்டுகளுக்குப் பின்பு
ஒளிந்து கொள்ள
ஒரு புகலிடத்தை
கடவுளை விட
ReplyDeleteமனிதர்கள் விவரமானவர்கள்தான்