இலங்கைத் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளிக்கிறது. வெறியாட்டம் ஆடி தமிழ் மக்களைக் கொன்று குவித்த ராஜபக்சே தோற்றுப் போயிருப்பது நல்ல விஷயம். இன வெறியை தக்கவைத்து வெற்றி பெறலாம் என்று மனப்பால் குடித்து இரண்டாண்டுகள் முன்பாக தேர்தல் நடத்திய ராஜ பக்சேவின் கணக்கு தப்புக்கணக்காகி விட்டது. இரண்டாண்டுகள் முன்பாகவே வீட்டிற்கு போக வேண்டியிருக்கும் என்று அந்த மனிதன் நினைத்திருக்க மாட்டான்.
மோடியும் சுப்ரமணிய சாமியும் இப்போது மனமுடைந்து போயிருப்பார்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. ஆனால் வெட்கம் கெட்ட அந்த மனிதர்கள் புதிய ஜனாதிபதியோடும் டீல் போடுவார்கள் என்பது யதார்த்தம்.
புதிதாக வெற்றி பெற்ற மைத்ரி பால சிறி சேனாவிற்கு வாழ்த்து சொல்லும் அளவிற்கு நம்பிக்கையாக எந்த ஒரு வாக்குறுதியும் அவர் அளிக்கவில்லை. தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவேன் என்று சொல்லாமல் இருப்பதில் எச்சரிக்கையாக இருந்தவர்.
ஆனாலும் இத்தேர்தலில் அவர் கற்றுக் கொள்வதற்கான பாடம் இருக்கிறது. எல்லா சர்வாதிகாரிகளையும் போலவே தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற இறுமாப்போடு இருந்த ராஜபக்சே தோற்றுப் போனதற்கு முக்கியக் காரணம் தமிழர்களின் வாக்குகள்தான். படுகொலைகளை நிகழ்த்திய பாதகனை தமிழர்கள் தங்கள் வாக்குகள் மூலம் பழி வாங்கி விட்டனர் என்பதுதான் நிதர்ஸனமான உண்மை.
தமிழர்களுக்கு எதிரான ராஜபக்சேவின் அணுகுமுறையையே சிறிசேனாவும் கடை பிடித்தால் அவருக்கும் அதே கதி ஏற்படும் என்பதை அவர் உண்ர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். செயல்படுவார் என்று நம்புவோம். அப்படிப்பட்ட நிர்ப்பந்தத்தை உருவாக்கிய இலங்கைத் தமிழர்களுக்குப் பாராட்டுக்கள்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் இனிமேலாகினும் நிம்மதி பிறக்கட்டும்
ReplyDeleteCan you send your lesson to him?
ReplyDeleteWhy Not Mr Anonymous. Good Idea. I will send him a mail to him in my name itself. Not as an Anonymous like you
Deleteநல்லதே நடக்கும் என்று நம்புவோம்!
ReplyDelete//எல்லா சர்வாதிகாரிகளையும் போலவே தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற இறுமாப்போடு இருந்த ராஜபக்சே தோற்றுப் போனதற்கு முக்கியக் காரணம் தமிழர்களின் வாக்குகள்தான். படுகொலைகளை நிகழ்த்திய பாதகனை தமிழர்கள் தங்கள் வாக்குகள் மூலம் பழி வாங்கி விட்டனர் என்பதுதான் நிதர்ஸனமான உண்மை.//
ReplyDeleteஅப்படியா நம்புறிங்க!!! அப்படியானால் 2010 இந்த ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடந்திச்சு. இதே தமிழர் கட்சி இப்போ மாதிரியே எதிர் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்கள் ஆனா ராஜபக்சே வெற்றி பெற்றிருந்தாரே?
ஜனநாயக நாடுகளின் தேர்தல்களில் நீண்டகால ஆட்சியில் இருப்ப்பவர்களுக்கு எதிராக மக்கள் மனநிலை எப்போதுமே மாறியேவந்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் தமிழகத்தில் மிக பெரிய வெற்றி பெற்றதாக சொல்லபடும் அதிமுக பெற்ற வாக்குகள் 44 விகிதம். இலங்கையில் தோல்வி அடைந்த ராஜபக்சே பெற்றது 47விகிதம்.கவனியுங்க.