Thursday, January 1, 2015

தியாகிகளை மறக்கவில்லை. தலைவரை நினைக்கவில்லை




நேற்று திருவள்ளூர் சென்றிருந்தேன். மாலை ஆறு மணிக்கெல்லாம் அங்கிருந்து புறப்பட்டு வேலூர் வரும் வழியில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவகம் சென்றேன்.

அந்த வழியில் எத்தனையோ முறை பயணம் செய்தாலும் அந்த நினைவகம் அமைக்கப்பட்ட பின்பு நேற்றுதான் முதல் முறையாக உள்ளே சென்றேன். மிகவும் பிரம்மாண்டமான பச்சை பசேல் புல்வெளியில் ஏழு பிரம்மாண்ட தூண்கள் ராஜீவ் உடல் கண்டெடுக்கப்பட்ட இட்த்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த இட்த்தில் கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் ஓவியமும் உள்ளது.

ராஜீவின் புகழ் பாடும் கல்வெட்டுக்கள் அங்க்ங்கே உள்ளது. மாமல்லபுரம் சிற்ப பாணியில் “ராஜீவின் கனவுகள் என்று ஒரு நாற்பது அடி நீளத்தில் ஒரு பெரிய சிற்பம் உள்ளது.

ராஜீவ் காந்தி நினைவகத்தை பார்த்துக் கொண்டிருக்கி போது மனதில் இன்னொரு சிந்தனையும் ஓடிக் கொண்டே இருந்த்து.

ஒரு நான்கைந்து வருடங்களாவது ராஜீவ் காந்தி நினைவு நாளன்று ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை சென்று திரும்பியுள்ளேன். சோனியா காந்தி, பிரியங்கா, ராகுல் ஆகியோர் வருவதாக இருந்தால் காலை வேளையில் பரபரப்பாக இருக்கும் அந்த இடம் மதியத்திற்கு மேல் கொஞ்சம் வெறிச்சோடி விடும். பல்லாயிரக்கணக்கான மக்கள், காங்கிரஸ் தொண்டர்கள் வருகை என்பதெல்லாம் அவ்வளவாக இருக்காது.

ஆனால் அதே நேரம் நில உடமையாளர்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட நாற்பத்தி நான்கு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் வெண்மணிக்கு வருவதை பார்க்க முடிகிறது. இறந்து போனவர்கள் ஒன்றும் தலைவர்கள் கிடையாது. ஆனாலும் அவர்கள் தியாகிகள். அவர்களது தியாகத்தை மக்கள் மறக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக, பிரதமராக இருந்தபோதும் வெண்மணி தியாகிகளை நினைவுகூர்வது போல ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப் படுகிறதா? தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்ள சிலர் சுவரொட்டிக்களை அச்சிடுவதை பார்க்க முடிகிறது. அது கூட சோனியாவும் ராகுலும் அதிகார பீட்த்தில் தொடரும் வரையில்தான்.

என்ன காரணம்?

வெண்மணி தியாகிகள் உழைப்பாளி மக்களைச் சேர்ந்தவர்கள். அவ்வளவுதான்.

நினைவகத்தை சுற்றி வருகையில் நான் கவனித்த மற்றொரு முரண்பாடு பற்றி நாளை எழுதுகிறேன்.

1 comment:

  1. தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்ள சிலர் சுவரொட்டிக்களை அச்சிடுவதை பார்க்க முடிகிறது. அது கூட சோனியாவும் ராகுலும் அதிகார பீட்த்தில் தொடரும் வரையில்தான்.

    Very simple Logic -

    if Dosildar dog dies, entire office will visiting his house, if dosildar dies no one turned up...

    Seshan /Dubai

    ReplyDelete