கற்பனைக்கு வடிவம் தந்து
கருவியை உற்பத்தி செய்தால்
அதற்குப் பெயர் அறிவியல்.
கற்பனைதான் அறிவியல்
என்று சாதித்தால்
அதற்கு என்ன பெயர்?
அனைத்தும் அறிந்தவர்
அனைத்தையும் படைத்தவர்
ஆற்றல் மிக்க முன்னோர்
என்று கதைப்போரே,
ஏட்டில் உள்ளதாக
நீங்கள் சொல்லும் எதுவுமே
எங்கும் ஏன் காணவில்லை?
படைத்தவரே அழித்தாரா?
படைக்காமல் அழிந்தாரா?
அதற்கொரு கற்பனைக்கதை
என்று படைப்பீர் நீங்கள்?
அறிவியல் கதைவுகளில்
புனைவு இருக்கலாம்.
புனைவுக் கதைகளையே
அறிவியல் ஆக்காதீர்.
நாங்கள் ஒன்றும்
கேணையர்கள் அல்ல,
கேழ்வரகில் நெய்
வடியும் கதைகளை நம்ப.
அண்டப் புளுகர்கள்,
ஆகாயப் புளுகர்கள்
மட்டுமல்ல அவர்கள்.
ஆட்சியில்அமர்ந்து கொண்டு
அறிவியல் போர்வையில் உளரும்
ஆன்மீகப் புளுகர்கள்.
ReplyDelete-----------கற்பனைக்கு வடிவம் தந்து
கருவியை உற்பத்தி செய்தால்
அதற்குப் பெயர் அறிவியல்.
கற்பனைதான் அறிவியல்
என்று சாதித்தால்
அதற்கு என்ன பெயர்?------
-----------------
கற்பனைகளின்றி அறிவியல் இல்லை. ஆனால் அறிவியல் கற்பனை இல்லை. மிகச் சரியான கருத்து. பாராட்டுகிறேன்.
///கற்பனைதான் அறிவியல்
ReplyDeleteஎன்று சாதித்தால்//
இவர்கள் இக்கால மனிதர்களே அல்ல