Wednesday, January 28, 2015

ஒபாமா இப்படி பேசிட்டாரே, மோடிஜி?

 http://s2.firstpost.in/wp-content/uploads/2014/09/Obama-Modi.jpg

ஒபாமா மனம் குளிர மோடி என்னவெல்லாமோ செய்தார்? டீ போட்டுக் கொடுத்தாரு, அமெரிக்க முதலாளிகள் விருப்பப்பட்டது எல்லாவற்றுக்கும் தலையாட்டினார். இந்திய மக்களின் நலனை விட அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளின் நலம்தான் முக்கியம் என்று சூடம் அடித்து சத்தியம் செய்தார்.

இருந்த போதிலும் கூட கடைசியாக நடந்த கூட்டத்தில் இந்தியாவின் அரசியல் சாசனப் பிரிவு 25 ன் படி  மத உரிமை இந்தியர்களுக்கு உண்டு. அதை பாதுகாத்தால்தான் இந்தியா ஒற்றுமையாக இருக்கும் என்று சொல்லி சங் பரிவாரின் ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சார செயல் திட்டத்திற்கு எதிராக பேசி விட்டார்.

இதைச் சொல்வதற்கு ஒபாமாவிற்கு உரிமையோ. அருகதையோ  கிடையாது. 

ஏனென்றால்   கலப்பினத்தில் பிறந்த ஒபாமா  ஜனாதிபதியானாலும் கருப்பின மக்கள் இன்னும் அமெரிக்காவில் அநீதிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்திய கலவரங்களே அதற்கு சாட்சி.

அப்படிப்பட்ட நாட்டிலிருந்து வந்த ஒபாமா இங்கே இப்படி பேசுமளவிற்கு மோடியின் ஆட்சி மாற்று மதத்தவருக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்பதுதான் யதார்த்தம். 

ஆனாலும் பாரதியின் வரிகள் படி

"ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி?
ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர், நாம் சண்டையிட்டாலும் சகோதரர் அன்றோ?

என்றுதான் ஒபாமாவிற்குச் சொல்ல வேண்டும். ஒபாமா போன்றவர்கள் பேசுவதற்கு இடம் தராதே என்று மோடிக்கும் சொல்ல வேண்டும்.

நீங்கள் என்னதான் உபசாரம் செய்தாலும் உங்களை தங்களுடைய நலன்களுக்காக ஏகாதிபத்தியம் பயன்படுத்துமே தவிர  உங்களை தலையில் தட்டித்தான் வைக்கும் என்பதை இப்போதாவது மோடி உணர்ந்து கொண்டால் சரி

 
 

No comments:

Post a Comment