Wednesday, January 14, 2015

ஒரு எழுத்தாளனை வேண்டுமானால் முடக்கலாம்

 ஒரு மனிதனை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருந்தால் இப்படி வலியும் வேதனையும் விரக்தியுமாக ஒரு அறிக்கை வரும்? 

ஒரு எழுத்தாளனை வேண்டுமானால் பிற்போக்கு சக்திகளால் முடக்கி விட முடியும். ஆனால் அவர்களின் அராஜகங்களுக்கு எதிராக ஆயிரம் ஆயிரமாய் படைப்பாளிகள்  வருவார்கள். அநீதிகளை சுட்டெரிப்பார்கள்.





குறிப்பு:
நண்பர்களே, கீழ்வரும் அறிக்கை இரண்டு நாட்களுக்கு இந்த முகநூலில் இருக்கும். அதன்பின் சமூக வலைத்தளச் செயல்பாடுகளில் இருந்து பெருமாள்முருகன் விலகிவிடுவான். சமூக வலைத்தளங்களில் அவனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
---------------

எழுத்தாளர் பெருமாள்முருகன் என்பவனுக்காக பெ.முருகன் அறிக்கை
எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.

பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்.
‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:

1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.

2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.

3. பெருமாள்முருகன் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.

4. இனி எந்த இலக்கிய நிகழ்வுக்குப் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.

5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.

அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி.
பெ.முருகன்
பெருமாள்முருகன் என்பவனுக்காக

5 comments:

  1. Commrate

    Why you are not think about affected ladies in that story. it is equal to how Islam (mohd) is criticized by cartoon in Paris magazine. before reading / seeing the text / cartoon i also felt bad on writers / cartoonist but if you seen the other side both crossed the limits. they have to pay penalty. ( you may not believe karma - but it will re-bounce about your action)

    Seshan / Dubai

    ReplyDelete
  2. WHY THERE WAS NO PROTEST WHEN THE NOVEL WAS PUBLISHED IN 2010? AFTER ALMOST FOUR YEARS
    WHY THIS KOLAIVERI?
    WHO INSTIGATED THIS, SOME FRINGE OUTFITS WHO DONOT DISPLAY EVEN THEIR NAMES IN THE POSTERS THREATEN THE AUTHOR WHO HAS WRITTEN A LEXICON FOR KONGU TAMIL WORDS AND A
    INTELLECTUAL LIKED BY THE LITERARY FIGURES IN TAMILNADU. A BIG LOBBY WITH BJP IN THE BACKGROUND?

    ReplyDelete
  3. I want to know only one TRUTH that whether the practice of sex told in his book was/is true or not. Do we have any evidence that it was practiced in the past or is being practiced recently? If any one give me correct/unbiased answer, then it will be good to decide who is correct.

    ReplyDelete
  4. நூலின் மீது விமர்சனம் வைக்கவும் கண்டனங்களை தெரிவிக்கவும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் எந்த வழியில் என்பதுதான் கேள்வி. பெண்களை இழிவு படுத்தியதாய் இன்று கதறுபவர்கள் முதலில் எரிக்க வேண்டிய நூல் மகாபாரதம். வியாசரை நாடு கடத்தி விட்டு பெருமாள் முருகனிடம் வரட்டும்

    ReplyDelete
  5. The Reason for the later response is simple , now only the book was red by a sensible - thinking person so for it is not reached the affected person. if the P. Murugon narrated the story about his family who cares. now i can criticize the person from near namakkal places, who is your real father (since it is claiming the real story ).

    most of comment people like you are not reading the book and comment only. even i also did the same mistake until last week. after red the book, mr p.murugan is answerable for that vulnerable writing.

    i remembering the year 2000 New year issue - New Indian Express carried a page 1 covery story about islam and mohd birth and was quoted from some other leading book. but poor Islamist burn the Hindu News paper van in the same week( near south tamilnadu).
    funny matter they got information from their majith - one leading English news paper carried bad news about mohd.

    this small example you can understand the people thinking/acting on the issue without realizing the real issue.

    Seshan / Dubai


    ReplyDelete