Wednesday, January 14, 2015

கலைஞரின் கள்ள மௌனம் ஏனோ?



http://tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_4376947880.jpg

இலக்கிய வெளியில் பெருந்தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ஒரு எழுத்தாளன் தான் இறந்து விட்டதாக மனம் வெதும்பி அறிக்கை அளிக்கும் வண்ணம் மோசமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கட்டப் பஞ்சாயத்து நடத்தி ஒரு எழுத்தாளனை ஊரை விட்டே ஒதுக்கி வைக்கும் நாட்டாமையாக மாறியிருக்கின்றனர். கலை, இலக்கிய அமைப்புக்களும் இடதுசாரி இயக்கங்களும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். சென்னை புத்தகத் திருவிழாவே போர்க்களமாக மாறியது. காக்கிச்சட்டைகளின் ஆணவமும் அதிகாரமும் இன்னொரு முறை அம்பலப்பட்டது.

ஆனாலும்

தமிழினத் தலைவர் என்றும் மூத்த இலக்கிய கர்த்தாவும் புரட்சிகர கருத்துக்களை முன்னொரு காலத்தில் தனது படைப்புக்களில் பதிவு செய்தவருமான முத்தமிழ் வித்தகர், சமூக நீதிக் காவலர், பாசத் தலைவர் டாக்டர் கலைஞர் ஏன் இன்னும் அமைதியாகவே இருக்கிறார்? சாதிய, மத வெறி அமைப்புக்களைச் சாட அவரது பேனா ஏன் தயங்குகிறது? பேனாவிற்கு மை போடக் கூட முடியாத வறுமையால் பீடிக்கப் பட்டுள்ளாரா?

ஏன் இப்படி கள்ள மவுனம் சாதிக்கிறீர்கள் கலைஞரே?

எதிர்காலத்தில் பாஜக வுடன்  கூட்டணி வைப்பதில் இதன் மூலம் சிக்கல் வரக்கூடாது என்ற தொலை நோக்குப் பார்வையா?

இல்லை

தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள மகனோடு நடத்திய போராட்டம் ஏற்படுத்திய களைப்பா?

உங்கள் பரம வைரியான அதிமுகவின் பினாமி அரசு சாதிய, மதவெறி சக்திகளுக்கு ஆதரவான நிலை எடுத்தும் கூட நீங்கள் வாய் திறக்காமல் இருப்பது புரியாத புதிராகத்தான் உள்ளது. எனக்குத் தோன்றியது இரண்டு காரணங்கள். இன்னும் எத்தனை காரணங்களை மற்றவர்கள் அடுக்கப் போகிறார்களோ?

7 comments:

  1. just poke him well

    ReplyDelete
  2. 2016 elections and namakkal kounder votes. Now there is no Rajapakse so no ealam politics.
    so better not to open mouth and support the author who has antognised the Kounders who run
    plus two schools like factories and amassed wealth in tiruchengodu. .

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்

      Delete
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்..

    மு.க. விடம் நல்லா இந்த கள்ள மௌனம் பற்றி கேள்வி கேட்டீங்க! அவர் இஅதற்கு பதில் சொல்ல மாட்டார் என்பது தெரிந்ததே!

    நிற்க...இதே "இந்த கள்ள மௌனம்" பற்றி கேள்வியை மற்ற எல்லா தலைவர்களிடம் கேட்பீர்களா? கேட்பபீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு--

    அதானால், மற்ற எல்லா கட்சி தலைவர்களிடமும் (லெட்டர் பேட் கட்சிகள் உள்பட] இந்த கேள்வியைக் கேளுங்கள்!

    ReplyDelete
  5. அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    மு.க. வின் கள்ள மவுனம் ஏன் என்று தெரியாதா. ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கொங்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடியின் வலியே அவருக்கு இன்னும் போயிருக்காது, அப்படி இருக்கையில் இப்போது தவறிப்போய் கூட இந்த விவகாரத்தில் வாய் திறப்பாரா.

    எல்லா விவகாரத்திலும் சுயநலம் அடுத்து குடும்ப நலமே பார்க்கும் நபரிடம் இதற்க்கு நீங்கள் கருத்து எதிர் பார்க்கலாமா.

    ReplyDelete
  6. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete