Monday, November 17, 2014

கறுப்பு வெள்ளை கமலஹாசன்

கமலஹாசனின் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு எனது பார்வையில் அவரது சிறப்பான பத்து காட்சிகளை பகிர்ந்திருந்தேன். 

பாடல்களையும் போடலாமே என்று ஒரு ஆலோசனை வந்தது. யார் அந்த ஆலோசனையை அளித்தது என்பதை கடைசி பதிவில் சொல்கிறேன். பத்து பாடல்கள் என்று குறுக்குவது சிரமம் என்று தோன்றியதால் அறுபது பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளேன். பத்து பத்து பாடல்களாக ஆறு நாட்கள் இந்த பதிவு தொடரும். 

கறுப்பு வெள்ளை காலத்தோடு தொடங்கலாம்.
 http://www.extramirchi.com/wp-content/uploads/2009/08/kamal-hassan-in-Kalathur-Kannamma.jpg


கதாநாயகனுக்கு முந்தைய காலகட்டம் வில்லனாக ஆர்ப்பாட்டம், ஆரவாரத்தோடு மைக் பிடித்து  ஆடுவதைப் பாருங்கள்.

அதிசய ராகத்தை ஆனந்தமாக   பாருங்கள்.

பல குரலில் பாடுபவர்களுக்கு இப்பாடல்   ஒரு நல்ல பயிற்சி.

பாடகரும் இவர்தான், பொம்மையும்  இவர்தான்.

வசந்த கால நதிகளிலே  என இனிமையாய் தொடங்கி கொடூரமாய் முடியும்.

இலக்கணம் மாறினாலும்  இப்பாடலின் இனிமை என்றும் மாறாது.

சொந்தக்குரலில் அர்த்தம் மிக்க  ஒரு பாடல்.

எங்கிருந்தாலும் வாழ்க என்று இங்கேயும் ஒரு காதலன் பாடுகிறான்

நல்ல பாட்டுதான். ஆனாலும்   கதைப்படி இவர்கள் அதைக் கேட்க முடியாது.

முடிந்தால் நாளை இன்னொரு பத்து பாடல்களுடன் சந்திப்போம்.






4 comments:

  1. இனிமையான பாடல்கள் நண்பரே நன்றி

    ReplyDelete
  2. ஐயையோ இது கள்ள ஆட்டம். நான் தனிப்பட்ட முறையில் சேகரித்து வைத்திருந்த பாடல்களை இவரு களவாண்டுட்டாருங்கோ. எனக்கு பிடித்த பாடல்களை எல்லாம் அவர் வரிசையிலே சேக்கராருங்க.

    ReplyDelete
  3. நன்றி நண்பர் ஜெயகுமார் அவர்களே

    ReplyDelete
  4. சாய் ஜெயராமன் தோழர், இந்த களவும் அராஜகமும் இன்னும் தொடரும். வேணும்னா போலீஸ்ல போய் புகார் கொடுங்க

    ReplyDelete