சி.ஐ.டி.யு சங்கத்தின் அகில இந்திய மாநாடு கேரளாவில்
நடைபெற்றது. அந்த மாநாட்டில் வியட்னாம் நாட்டு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர். அமெரிக்காவின் முற்றுகையை வியட்னாம் முறியடித்த காலத்தில் நடந்தது அந்த
மாநாடு. வியட்னாமிலிருந்து வந்த அந்த பிரதிநிதிகள் ஒரு நினைவுப் பரிசை சி.ஐ.டி.யு
வின் அப்போதையப் பொதுச்செயலாளர் தோழர் பி.ராமமூர்த்திக்கு அளித்தார்கள்.
உலக உருண்டையின் மீது ஒரு எருது முட்டிக்
கொண்டிருப்பது போன்ற படம் ஒரு உலோகத்தில் பொறிக்கப்பட்டதுதான் அந்த நினைவுப்
பரிசு. அந்த பரிசை அளித்த அந்த வியட்னாம் பிரதிநிதிகள் சொன்னார்கள்
“இந்த நினைவுப் பரிசு எந்த உலோகத்தில் செய்யப்பட்டது
தெரியுமா? அமெரிக்க போர் விமானங்கள் பறந்து வருவதைப் பார்த்தால் வயல்வெளிகளின்
வேலை செய்யும் எங்கள் கிராமத்துப் பெண்களே அதை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி
விடுவார்கள். அப்படி வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்களை உருக்கிய
உலோகத்திலிருந்துதான் இந்த நினைவுப் பரிசு தயாரிக்கப் பட்டது”
இன்று வேலூரில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தினக்
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர்
டி.லட்சுமணன் பேசியதிலிருந்து.
பின் குறிப்பு : மேலே உள்ளது அமெரிக்காவின் தாக்குதலில் இறந்து போன மக்களுக்காக வியட்னாமில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னம்.
வீரத்தின் அடையாளம் வியட்நாம்
ReplyDeleteயோ சி மின் போற்றுதலுக்கு உரியவர்