Friday, November 14, 2014

மோடிக்கு வாக்களித்தவர்களுக்கு சமர்ப்பணம்

பெட் ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது என்று சொல்லி மோடி நாமம்  பாடியவர்களுக்கு இச்செய்தி சமர்ப்பணம். சர்வதேச விலை குறைந்த அளவிற்கு இங்கே விலை குறையவில்லை என்பது ஒரு விஷய்ம். 

இப்போது உற்பத்தி வரியை உயர்த்தியுள்ளது மோடி ஸ்பெஷல் அல்வா.

என்சாய்

 

புதுதில்லி, நவ. 13-
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.1.50 அதிகரித்து, மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதனால் ரூ.13,000 கோடி கூடுதல் வருவாய் (அதாவது மக்கள் மீது சுமை )ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது.பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால், இதே அளவு சில்லறை விற்பனை விலையிலும் ஏற்றம் ஏற்படும். இதன் விளைவாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.50 அதிகரிக்கிறது.சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை சரிவு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை பெட்ரோல் விலை 6 முறை லேசாக குறைக்கப்பட்டது. டீசல் விலை மூன்று முறை குறைக்கப்பட்டது. 

எனினும், மொத்தம் உயர்த்தப்பட்ட விலையுடன் ஒப்பிடும் போது இந்த குறைப்பு என்பது வெறும் கண்துடைப்பாகவே இருந்தது.இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வரும் சனிக்கிழமை பெட்ரோல், டீசல் விலையை மறுஆய்வு செய்யும் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலையில் நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை மேலும் சற்று குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அந்த வாய்ப்பை ஒழித்துக்கட்டும் விதமாக திடீரென பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.1.50 அதிகரித்து மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு எடுத்துள்ள முடிவால் இந்த வாரக் கடைசியில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை.

விலை உயர்வு நிலவரம்
பிராண்டட் அல்லாத சாதாரண பெட்ரோல் மீதான வரி, லிட்டருக்கு ரூ.1.20-ல் இருந்து ரூ.2.70 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிராண்டட் பெட்ரோல் மீதான வரி, லிட்டருக்கு ரூ.2.35-ல் இருந்து ரூ.3.85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.சாதாரண டீசல் மீதான வரி ரூ.1.46-ல் இருந்து ரூ.2.96 ஆகவும், பிராண்டட் டீசல் மீதான விலை ரூ. 3.75-ல் இருந்து ரூ. 5.25-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இதே அளவுக்கு விலைகள் உயர்த்தப்படுகின்றன.

2 comments:

  1. இது பெரிய அநியாயம். இது வரை அமெரிக்காவில் சில்லறை விலை 25% வரை குறைந்திருக்கிறது. எது எதற்கோ அமெரிக்காவை உதாரணமாக எடுத்துக் கொள்பவர்கள் இந்த ஒரு விஷயத்திற்காவது உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்!

    ReplyDelete
  2. MODI'S SLOGAN IS ACHA DIN AAGAYA. ACHADIN FOR AMBANI, ADANI AND FOREIGN INVESTORS.
    NOT FOR THE WORKING CLASS OF INDIA. MR MODI FIRST CLEAN THE RAILWAYS. MOST OF THE
    TRAINS ARE FILTHY AND FOOD SERVED IN PANTRY CAR IS NOT PALATABLE. AS AN ECONOMIC
    MEASURE MR MODI, PLEASE TRAVEL BY TRAIN AND DRINK THE TEA SERVED IN TRAIN. YOU ARE
    THE BETTER PERSON TO TELL THE QUALITY OF THE TEA SERVED IN TRAIN...

    ReplyDelete