Monday, November 3, 2014

சத்திய மூர்த்தி பவன் இனி யாருக்கு சொந்தம்?



http://media.newindianexpress.com/Congress.jpg/2014/03/13/article2106159.ece/alternates/w620/Congress.jpg

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மீண்டும் வெற்றிகரமாக பிளவுபட்டு விட்டது. அப்பா ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் ஜோதியில் ஐக்கியமாக்கிய வாசன் சைக்கிளுக்கு மீண்டும் பங்க்சர் ஒட்டி ஓட்டத் தொடங்கி விட்டார். அது போணியாகுமா இல்லை மீண்டும் காங்கிரசோடே பிணைத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எனக்கு சத்தியமூர்த்தி பவன் பற்றி சில கேள்விகள் தோன்றியது.

என்னுடைய நினைவு சரியாக இருக்குமானால்

காங்கிரஸ் கட்சி இந்திரா காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸ் என்று இரண்டாக பிளவுபட்டபோது சத்திய மூர்த்தி பவன் ஸ்தாபன காங்கிரஸ் வசமே இருந்தது.

பின்பு ஸ்தாபன காங்கிரசை விட்டு மூப்பனார் இந்திரா காங்கிரசிற்கு தாவினாலும் பா.ராமசந்திரன் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் செயல்பட்டு அவர் பொறுப்பிலேயே சத்திய மூர்த்தி பவன் இருந்தது. பிறகு அவர் ஜனதாவில் இணைந்த போதும் அதே நிலை.

பின்பு ஜனதா கட்சி 1979 ல் உடைந்த போது பா.ராமசந்திரன் இந்திரா காங்கிரசில் ஐக்கியமாகி சத்திய மூர்த்தி பவனை ஒப்படைத்து விட்டு கேரள மாநில ஆளுனர் பதவியைப் பெற்றார்.

பின்பு 1996 ல் காங்கிரஸ் கட்சி அதிமுகவோடு கூட்டணி வைத்தபோது நரசிம்ம ராவ் கட் அவுட்டிற்கு சத்திய மூர்த்தி பவனில் நடந்த செருப்படி வைபவத்தை பெரும்பாலானவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் பிரிந்த போது சத்தியமூர்த்தி பவன் மூப்பனார் வசம் சென்றது.

வாசன் காங்கிரசிற்கு திரும்பி வந்த போது சத்திய மூர்த்தி பவனோடுதான் திரும்பி வந்தார்.

இப்போது யாருக்கு செல்லப் போகிறது?

1 comment: