நேற்று திருவண்ணாமலை வழியாக விழுப்புரம் சென்ற போது
கண்ணில் பட்ட காட்சி அது.
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் அக்ரி கிருஷ்ண
மூர்த்தி பங்கேற்ற ஏதோ ஒரு விழா. அம்மாவின் பேனர்களோடும் இரட்டை இலை தோரணங்களோடும்
கொடிகளோடும் அந்த வேங்கிக்கால் பகுதி நிரம்பியிருந்தது.
கொடிகள்தான் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
வழக்கமான கறுப்பு சிவப்பு நடுவில் அண்ணா
என்பதற்கு பதிலாக இவ்வாறு
கறுப்பு, வெள்ளை, சிவப்பு என்று இருந்தது.
ஏன் இப்படி?
ஏன் அண்ணாவின் படத்தை எடுத்து விட்டார்கள்?
எப்போதிலிருந்து?
யாராவது ரத்தத்தின் ரத்தங்கள் கொஞ்சம் பதில்
சொல்லுங்களேன்.
No comments:
Post a Comment