தூய்மைத் திட்டம் : செயல் விளக்கக் குறிப்பு
தேவை
புதுத் துடைப்பம் - 4
புதுக்கூடை -4
புது கையுறை தேவையான அளவு
கூடை நிறைய சருகுகள் மற்றும் காகிதக் குப்பைகள்
வீடியோ கேமிரா எவ்வளவு முடியுமோ அந்த அளவு
கேமிராவும் அதே போல்
செய்முறை :
முதல் நாளே நகரசுத்தி தொழிலாளர்களைத் திரட்டி அந்தப்பகுதியை வழக்கம் போல் பெருக்கிடவேண்டும் ;முடிந்தால் கழுவியும் சுத்தம் செய்துவிடச் சொல்ல வேண்டும்
புதுத் துடைப்பம் பெருக்கும் என்பது ஆண்கள் எழுதிய / அல்லது ஆதிக்கவாதிகள் எழுதிய பழமொழி என்பதை நினைவில் கொள்க ; ஏனெனில் சில நாட்கள் பழகும் வரை புதுத் துடைப்பம் பெருக்காது என்பதே உண்மை . ஆகவே புதுத் துடைப்பத்தால் பெருக்குவதுபோல் போஸ் கொடுக்க வேண்டுமே தவிர பெருக்க முயலக்கூடாது ; பதிரிகையாளர் கேட்டுக் கொண்டால் அதற்கு ஏற்ப போஸ் கொடுக்கலாம்
எக்காரணம் கொண்டும் கேமிரா / வீடியோ இல்லாமல் போஸ் கொடுக்கக் கூடாது
குப்பைகளை முதலிலேயே கொட்டினால் பறந்து எங்கும் சிதறிவிடும் - போஸ் கொடுப்பதும் சிரமம் எனவே போஸ் கொடுக்கத் தயாரானதும் துடைப்பத்தின் முன் கொட்டவேண்டும்
முதலில் அங்கே நகரசுத்தித் தொழிலாளர்கள் பெருக்கியதும் புகைப்படம் / வீடியோ எடுத்து வைத்துக் கொண்டால் எடிட்டிங் / போட்டோ ஷாப் மூலம் ஜோடனை செய்து நமக்கொப்ப காட்சியை மறுவரிசைப் படுத்திக் கொள்ளலாம்
மிகுந்த எச்சரிக்கை வழக்கமாக சுத்தப்படுத்தும் தெருக்களை மட்டுமே தேர்வு செய்யவேண்டும் ; தவறியும் குப்பை குவிந்து நாறும் இடம் , சாக்கடை தேங்கி நாறும் இடம் இவற்றை தேர்வு செய்துவிடக்கூடாது .
கருத்து : வாயால் வடை சுடுவது
நன்றி தோழர் சு.பொ.அகத்தியலிங்கம்

No comments:
Post a Comment