நேற்று முகநூலில்
ஏராளமானவர்கள் இந்த தங்க மனிதனின் படத்தைப் போட்டு திருப்பதி லட்டு காண்ட்ராக்டர்
என்றும் இந்த தங்க நகையை அவரது மகள் என்றும் அந்தப் பெண்ணின் திருமண விழா என்றும்
ஸ்டேட்டஸ் போட்டிருந்தனர்.
சில மாதங்களுக்கு
முன்பே இந்த தங்க மனிதனின் புகைப்படம் முகநூலில் உலவியது. கர்னாடகத்தைச் சேர்ந்த
ரியல் எஸ்டேட்காரர் என்று அப்போது எழுதியிருந்தார்கள்.
அதே போல் இந்தப் பெண்
கேரளா முத்தூட் பைனான்ஸ் உரிமையாளர் பெண் என்று ஒரு வருடத்திற்கு முன்பே முக
நூலில் உலவியது.
இரண்டு படத்தையும்
ஒன்றாக்கி திருப்பதி லட்டு காண்ட்ராக்டர், அவரது மகள் என்று புதிதாக ஒரு கதையை
பரவச் செய்த நம்மாட்களின் கற்பனை சக்தி அபாரம். நமது தமிழ் திரைப்படக்காரர்கள்
இந்த சக்தியை வளர்த்துக் கொண்டால் காப்பியடிக்கப்பட்ட கதை என்ற பிரச்சினையே வராது.
மொத்தத்தில் திருப்பதி
லட்டை வைத்து கொடுக்கப்பட்ட அக்மார்க் அல்வா.
பின் குறிப்பு : திருப்பதி லட்டு மற்றும் திருப்பதி கோயில் பற்றிய ஒரு சீரியஸான பதிவு நாளை பகிர்கிறேன்
அட! இப்படியெல்லாம் ஏமாத்தறாங்களா?
ReplyDeleteஅண்ணா! இணையத்தில் "இந்தியாவில் மட்டும்" எனும் தலைப்புடன் பல படங்கள் லாவும், சுவாரசியமாகவும் இருக்கும், அந்த வரிசையில் வரக்கூடிய படங்கள்.
ReplyDeleteஆனால் இவர்கள் நல்ல மனநல மருத்துவரை நாடவேண்டியவர்களோ!!! என என் சிந்தனை செல்கிறது.
சாதாரண மனநிலையில் இதைச் செய்யமுடியாது
ஆம் திரு யோகன், நீங்கள் சொல்வது போல மன நல மருத்துவரிடம் போக வேண்டியவர்கள்தான். செல்வச் செருக்கை இப்படி வெளிப்படுத்துவது கூட ஒரு வித மன நோய்தான்
ReplyDelete