Friday, November 28, 2014

கோபி மிளகு பிரெட் - ஆணின் சமையல் குறிப்பு

கொஞ்சம் பெரிய இடைவெளிக்குப் பின்பு மீண்டும் சமையல் குறிப்போடு.

தோழர் சங்கர் ஓகேயா?

வழக்கமான பிரெட் உப்புமாதான். ஆனால் வழக்கமான முறையல்ல, முற்றிலும் மாறு பட்ட தயாரிப்பு முறை, மாறு பட்ட சுவையோடு.

சின்ன வெங்காயத்தை உரித்து வைத்துக் கொள்ளவும். காலி ப்ளவரை கொஞ்ச நேரம் சுடு தண்ணீரில் ஊற வைக்கவும். பிரெட்டை சின்ன துண்டங்களாக வெட்டி வைக்கவும். கொஞ்சம் மிளகை பொடியாக்கிக் கொள்ளவும். 


என்ன எல்லாம் தயாரா? 

சரி நாம் சமையலைத் துவக்குவோம். 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காயும் வரை காத்திருக்கவும். முதலில் சின்ன வெங்காயத்தை நன்றாக வதக்கவும். பிறகு ஊற வைத்த காலிப்ளவரை வதக்கவும். இப்போதே உப்பையும் மிளகு பொடியையும் சேர்க்கவும். 

பிறகு பிரெட் துண்டுகளையும் சேர்த்து நன்றாக ரோஸ்ட் ஆகும் வரை  வதக்கி கொஞ்சம் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.



சூப்பரா இருந்தது - இது என் மகனின் கமெண்ட்.
வேறென்ன வேண்டும் எனக்கு.........

2 comments:

  1. ஆஹா! பார்க்கவே ஆசையாயிருக்கு, செய்ய வேண்டியது தான். பிரெட்டில் செய்யும் உணவுகள் சுவை மட்டுமல்ல ரொம்ப வசதி.

    ReplyDelete
  2. மகனே பாராட்டிவிட்டால் அல்லவா
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete