Thursday, November 13, 2014

கடன்கார மந்திரி, காணாமல் போன மந்திரி, கிரிமினல் மந்திரி

அடடா. அடடா, யாருக்கய்யா கிடைக்கும் இந்த பெருமை!

உலக அரசியல் வரலாற்றிலேயே இப்படி பொறுக்கியெடுத்த முத்துக்களை அமைச்சர்களாக்கி அழகு பார்க்கும் பெருமை நம்ம மோடிஜியைத் தவிர வேறு யாருக்கு உண்டு,

 

வங்கிகளில் கடன் வாங்கி திருப்பித் தராத மோசடிப் பேர்வழிகளின் பட்டியலில் உள்ள திரு வொய்.எஸ்.சவுத்ரி என்பவரை தனது அமைச்சர்களின் பட்டியலில் இணைக்கும் தைரியம் மோடியைத் தவிர உலகில் வேறு யாருக்காவது உண்டா? வெறும் 316 கோடி ரூபாய்தான் ஜெண்டில்மேன், அவ்வளவு கம்மியான தொகையைத்தான் நம்ம கடன்கார திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார். அவரிடம் அந்தப் பணம் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும். வங்கியில் போட்டால் திருடர்கள் கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்றுதானே விளக்கம் சொல்லப் போகிறீர்கள்.

காணாமல் போன மந்திரிக்கு இன்னொரு பெயரும் உண்டு. கற்பழிப்பு மந்திரி. ஆமாம் ராஜஸ்தான் மாநிலம் தந்த பொக்கிஷம் நிகால்சந்த் மேஹ்வால். இவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பும். அவரைப் பிடித்துத் தரச் சொல்லி போலீசுக்கு சம்மன் அனுப்பும். தார் பாலைவனம் வரை தேடி விட்டு அவரைக் காணோம் என்று ராஜஸ்தான் போலீஸ் கோர்ட்டுக்கும் சொல்லி விடும். அவரு எப்படி கிடைப்பாரு? அவர்தான் மோடி அண்ணன் பக்கத்துலயே பத்திரமா இருக்காரே.

அடுத்தவர் .ராம்பால் கேதாரியா. இவர் மீது இருபத்தி ஒன்று கிரிமினல் வழக்குகள்தான் இருக்கு. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என எல்லாமே உண்டு. இப்படி ஒரு வீர தீர சூரனை மந்திரியாக்காவிட்டால் எப்படினு இப்பத்தான் அமைச்சர் பதவி கொடுத்து அவரது வீரத்துக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார் மோடிஜி. திறமைகளை வேற எப்படிய்யா கௌரவிக்க முடியும்.

உங்களையும் என்னையும் பாகிஸ்தானுக்கு போகச் சொன்ன கிரிராஜ்சிங் அண்ணனுக்கும் இப்பத்தான் மந்திரி யோகம் கிடைச்சது. 
 

ஏற்கனவே பழம் தின்னு கொட்டை போட்ட மந்திரிங்க வி.கே.சிங், உமா பாரதி, நிதின் கட்காரி என்ற பெரிய பட்டியல் இருக்கு. 

இருக்கிற மந்திரிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் கிரிமினல் என்ற சிறப்பு மோடிஜிக்கு மட்டுமே உண்டு. சகாக்கள் கிரிமினல் என்றால் மோடி ? அவர்தாங்க பாஸ்.


2 comments:

  1. Wow. Really Super Efficient Team....

    Keep Going...

    Seshan / Dubai

    ReplyDelete
  2. MODI'S GOVT DOESNOT SETTLE THE BANK EMPLOYEES WAGE SETTLEMENT CITING PROFITABILITY
    OF THE BANKS. BANKS WERE PROVIDING FOR THE NON PERFORMING ASSETS CREATED BY
    POLITICAL BORROWERS LIKE THE MINISTERS WHO ARE INDUCTED NOW, WHICH IN TURN REDUCES
    THE NET PROFIT OF THE BANKS. IS BANK EMPLOYEES ARE RESPONSIBLE FOR THIS? CONGRESS IS
    BETTER THAN BJP THAT IS THE IMPRESSION OF LAKHS OF BANK EMPLOYEES NOW. TRADE UNIONISM
    IS GOING TO FACE TOUGHEST STRUGGLE IN THIS REGIME.

    ReplyDelete