மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டதிலேயே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்ட பிரிவு 370 ஐ அகற்றுவது பற்றி விவாதித்தோம் என்று ஒரு குட்டி மந்திரி மூலம் சொல்ல வைத்து பின்பு பல்டி அடித்த மோடி வித்தை நினைவில் உள்ளதல்லவா?
அரசியல் சட்ட பிரிவு 370 ஐ அகற்றுவது என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய செயல் திட்டங்களில் ஒன்று. பாஜகவின் விருப்பமும் அதுவே. அரசியல் சட்ட பிரிவு 370 ஐ அகற்றுவது என்பது கிட்டத்தட்ட செத்த பாம்பை அடிப்பதற்க்கு சமம். ஏனென்றால் மற்ற மாநிலத்து ஆட்கள் காஷ்மீரில் நிலம் வாங்கக் கூடாது என்பதைத் தவிர வேறு எந்த பலனும் இல்லை.
காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மோடி, ஏன் 370 ஐ அகற்றுவது பற்றி வாய் திறக்கவே இல்லை. வீராதி வீரர், சூராதி சூரர், புஜபல பராக்கிரம தைரியசாலியான மோடி எதற்காக அங்கே மௌனம் அனுஷ்டிக்கிறார்? 370 ஐ அகற்றுவேன் என்று சொல்ல வேண்டியதுதானே? தேர்தல் கூட்டங்களில் அறிவிக்க வேண்டியதுதானே?
சொல்லுங்க மோடி சொல்லுங்க்
Dear Pl wait. definately they will take this issue after the election. now they will keep quit only never say yes/no.
ReplyDeletebut i am sure 370 act will be removed by this government.
Seshan/Dubai
அதை காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்ல தைரியமில்லாத கோழைதானே மோடி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா திரு சேஷன்? அப்படி அப்பிரிவை நீக்கினால் அது காஷ்மீர் மக்களை இன்னும் இந்தியாவிடமிருந்து அன்னியப்படுத்தி விடும்
ReplyDelete