பராசக்தி அருள் என்றே
பாரதியும் பாடினால் கூட
பாட்டாளிகளின் எழுச்சியால்தான்
நிகழ்ந்ததந்த யுகப் புரட்சி.
சர்வாதிகார காரிருளைக்
கிழித்து
மின்னலென ஒளி வெள்ளம் பாய்ச்சி
உலகிற்கு வழி காட்டியது
ரஷ்யாவின் நவம்பர் புரட்சி.
எல்லாரும் எல்லாமும்
பெறுவது சாத்தியமென்று
மார்க்ஸின் பாதையில்
பயணம் செய்து
சாதித்தது அப்புரட்சி.
உணவுக்கும் உடைகளுக்கும்
உறைவிடத்திற்கும்
உத்தரவாதம் தந்தது
உலகைக் குலுக்கிய அப்புரட்சி.
வறுமையை பகிர்ந்து கொண்ட
மக்களுக்கு வளர்ச்சியை
பகிர்ந்து கொடுத்தது
போல்ஷ்விக் புரட்சி.
மனித குலம் முடித்திட
வெறி கொண்டலைந்த
ஹிட்லரை, முசோலினியை
முறியடித்து செங்குருதியில்
உலகம் காத்த தியாகிகளை
உருவாக்கியது அப்புரட்சி.
சோஷலிச சோவியத்தை
சிறுமதியாளர் சிலர்
சிதைத்தாலும் கூட
மாற்றம் சாத்தியமே
என சரித்திரம் படைத்திட்ட
நவம்பர் புரட்சியை
நினைவில் கொள்வோம்.
உழைக்கும் மக்கள்வசம்
நாளை உலகம் வரும்
என்று பயணிப்போம்
நம்பிக்கையை மனதில் தேக்கி.
--நவம்பர் புரட்சியை
ReplyDeleteநினைவில் கொள்வோம்.
உழைக்கும் மக்கள்வசம்
நாளை உலகம் வரும்
என்று பயணிப்போம்
நம்பிக்கையை மனதில் தேக்கி///
நம்பிக்கையை மனதில் தேக்சிப் பயணிப்போம்