Tuesday, May 7, 2024

சீன அடிமை யார்?

 


சில தினங்கள் முன்பாக இந்து ஆங்கில நாளிதழில் பார்த்த செய்தி கீழே உள்ளது.

 


கடந்த 15 வருடங்களில் சீனாவிலிருந்து செய்ய்ப்படும் இறக்குமதி 2.3 மடங்கு அதிகமாகி உள்ளது. அதிலும் கடந்த ஐந்து வருடங்களில் மிகவும் அதிகமான அளவில் இறக்குமதி நடந்துள்ளது.

 2018-19 ல் ஐந்து லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூறு கோடி ரூபாயாக இருந்த இறக்குமதி 2023-24 ல் எட்டு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்தி முன்னூற்றி ஐம்பது கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 இறக்குமதிக்கு ஏற்றார்போல சீனாவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதா?

 சாரி.

 அது ஐந்து வருடங்களாக ஒரு லட்சத்து முப்பத்தி மூன்றாயிரத்து அறுநூறு கோடியாக மாற்றமின்றி தேக்க நிலையில் உள்ளது.

 மின்னணு பொருட்கள் மட்டும்தான் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம் என்று நினைக்க வேண்டாம். சகலத்தையும் அங்கிருந்து இறக்குமதி செய்கிறோம்.

 அந்த விபரங்களும் இங்கே இருக்கிறது.

 இந்தியா இறக்குமதி செய்வதில் சீனாவின் பங்கு எவ்வளவு?

 மின்னணுப் பொருட்கள் (ELECTRONICS)     43.9 %

இயந்திரங்கள்                                                   39.7%

ஆடைகள், துணிகள்,                                       38.2%

ரசாயனங்கள்                                                      26.8%

மோட்டார் வாகனங்கள்                                  26 %

 ஆக இந்திய முதலாளிகளுக்கு சீனப் பொருட்கள் தேவையாக இருக்கிறது. இந்திய முதலாளிகள் இறக்குமதி செய்ய இந்திய அரசு உதவுகிறது. இறக்குமதியை குறைக்கவோ கட்டுப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதனால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் கூட.

 சீனப் பொருட்களை இந்திய சந்தைக்கு திறந்து விட்ட மகானுபாவன் வாஜ்பாய். அது மோடி காலத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளது.

 இந்திய முதலாளிகளின் லாபத்தை பாதுகாக்க, இந்திய அரசு அரசியல்ரீதியாகக் கூட சீனாவை எதிர்ப்பதில்லை. அருணாச்சலப் பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு செய்தால் கூட 56 இஞ்ச் மார்பு கொண்ட மோடி சீனா என்று உச்சரிக்கக்கூட நடுங்குகிறார்.

 இந்த லட்சணத்தில்

 சமூக வலைத்தளங்களில் குறிப்பாக மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் மோடி ஆட்சி பற்றி ஏதாவது பின்னூட்டம் போட்டால் உடனடியாக என்னை சீன அடிமை என்று வசை பாடுவார்கள். அப்போது நமக்கு ஆதரவாக அங்கே இருக்கிற “நல்லவர்கள் என்று நாம் நம்பியவர்கள்” யாரும்  வர மாட்டார்கள். சங்கிகள் என்றல்ல, யார் நம்மை தாக்கினாலும் யாரும் வர மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். யார் வீட்டு எழவோ என்று ஒதுங்கிப் போவார்கள், சொல்லப்போனால் சிலர் மனதில் மகிழ்ச்சி கூட அடைவார்கள். அதனால்தான் “யாரை நம்பி நான் பிறந்தேன்” என்று மன நிலையில் என் போரை நானே நடத்துவது என்று முடிவெடுத்து விட்டேன்..

 

No comments:

Post a Comment