காஷ்மீரில்
வாக்குப் பதிவு 28 % லிருந்து 34 % ஆக உயர்ந்திருப்பது அங்கே அரசியல் சாசனப் பிரிவு
370 நீக்கப்பட்டதற்கு கிடைத்த அங்கீகாரம் என்று பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளில்
இளைய கூட்டாளியான அமித்ஷா கூறியுள்ளார்.
என்னமோ
வாக்குப்பதிவு 100 % வந்து விட்டது போல அமித்ஷா
சீன் போடுகிறார். வெறும் ஆறு சதவிகித உயர்வு, அதுவும் நாற்பது சதவிகிதத்தைக்
கூட எட்டவில்லை.
அதிக
வாக்குப்பதிவு தங்கள் ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என்று அமித் சொல்லும் போது எனக்கு
வேறு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. எண்பதுகளின் இறுதியி;ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்
நீண்ட காலத்திற்குப் பிறகு தேர்தல் நடக்கிறது. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுப்
போய் தேசிய மாநாட்டுக் கட்சி ஜெயித்தது.
காங்கிரஸ்
என் வெற்றிபெறவில்லை என்று அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த கருப்பையா
மூப்பனாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்கிறார். “யார் சொன்னது காங்கிரஸ் வெற்றி பெறவில்லை
என்று? தீவிரவாதப் பிரச்சினை உள்ள காஷ்மீரில் தேர்தலை நடத்தியதே காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றிதான் தெரியுமா?”
என்று திருப்பிக் கேட்டார்.
அதே
வஜனத்தைத்தான் அமித்து பட்டி டிங்கரிங் பார்த்து பேசியுள்ளார். காஷ்மீர் மக்கள்
370 பிரிவு நீக்கப்பட்டத்தை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் இப்போது தெரியாது.
இன்னும் சொல்லப் போனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நின்றால் மக்கள் தோற்கடித்து
விடுவார்கள் என்று அஞ்சி பாஜக அங்கே போட்டியிடவே இல்லை.
ஜம்மு
பகுதியில் பாஜக நிற்பதை கணக்கில் கொள்ள முடியாது.
பாஜக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நின்று வெற்றி பெற்றிருந்தால் காஷ்மீர்
மக்கள் 370 நீக்கத்தை ஆதரிக்கிறார்கள் என்று சொல்ல முடியும். அவர்கள் அங்கே போட்டியிட பயந்து நடுங்கி ஓடியதே
அம்மக்கள் 370 பிரிவு நீக்கத்தை எதிர்க்கிறார்கள் என்பதை பாஜக உணர்ந்து கொண்டதால்தான்
. . .
ஆக
அமித்து காப்பியடித்த வஜனம் கூட ஜூம்லாதான் . . .
No comments:
Post a Comment