சியல்லோ கார்களை எல்லாம் பள்ளத்தாக்கில் கவிழ்த்து அழிப்பதுதான் பிரம்மாண்டம் என்று நினைத்து கே.டி.குஞ்சுமோனை கடனாளியாக்கி திரை உலகத்திலிருந்து துரத்திய பிரவீண் காந்த் என்ற இயக்குனர் பேசிய ஒரு காணொளியையும் கவுண்டன்பாளையம் என்ற படத்தின் ட்ரெய்லரையும் பார்க்க நேரிட்டது.
இத்தனை ஆண்டுகளில் தமிழ் சினிமா ரொம்பவும் சூப்பரா சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக, மக்களின் பிரச்சினைகள பேசி விவாதித்தது போலவும் வெற்றி மாறன், பா.ரஞ்சித் ஆகியோர் படமெடுக்க ஆரம்பித்த பின்புதான் தமிழ் சினிமா அழிந்து கொண்டிருப்பதாக அந்த மனிதனின் பேச்சு அமைந்திருந்தது.
விஜயினுடைய மொக்கைப்படங்களாக பலரும் சுறா, வில்லு, குருவி என்று சொல்வார்கள். என்னைப் பொருத்தவரை அப்படங்களை விட மிகவும் மொக்கையான படங்கள் திருப்பாச்சியும் சிவகாசியும். அதே மாதிரி அஜித்தின் திருப்பதி இன்னொரு கொடுமை. இந்த படங்களை எல்லாம் எடுத்த பேரரசு இயக்கிய கவுண்டன் பாளையம் படம் தொடர்பான நிகழ்ச்சியில்தான் பிரவீன் காந்தி பேசியுள்ளார்.
அப்போ அந்த படம் என்ன தமிழ் சினிமாவை அழிவிலிருந்து காப்பாற்ற வந்த அபூர்வ தேவதையா?
மருத்துவர் ஐயாக்களின் அபாண்டமான குற்றச்சாட்டுக்களுக்கான நாடகக் காதல் என்பதை மொக்கையாக சொல்கிறது ட்ரெய்லர். ஓசிகே கட்சி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வம்புக்கு இழுக்கிறது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை காம வெறியர்களாக சித்தரித்து பாலியல் வன்புணர்ச்சி செய்பவர்களாக காண்பிக்கிறது.
இரண்டு நிமிட ட்ரெய்லரிலேயே இரண்டு லாரி விஷத்தை கக்குகிறார்கள். அப்பட்டமாக தலித் மக்கள் மீது மற்றவர்கள் வெறுப்படைவது போல ஆதிக்க ஜாதி வெறியை ஊட்டுகிறார்கள்.
பேரரசு ஒரு பாஜக உறுப்பினர். பிரவீன் காந்த் ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் அதன் கொபசெ ஆகியிருப்பார். இத்திரைப்படத்தில் நடிக்கும் ரஞ்சித் வாயைத் திறந்தாலே பிற்போக்குத்தனத்தை வாந்தி எடுப்பார்.
இவர்கள் யாரை குறை சொல்லுகிறார்கள்?
பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஆண்டைகளையும் வெண்மணி தீயில் விவசாயத்தொழிலாளர்களை கொளுத்திய பண்ணையார்களையும் இருக்கும் சொற்ப நிலத்தையும் பறிக்க துடிக்கும் எஜமானர்களை அசுரன் என்ற அற்புதமான படத்தில் அம்பலப்படுத்திய வெற்றிமாறனை. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை திரையில் வெளிப்படுத்துவர்களை.
இது இவர்களின் குரல் மட்டுமல்ல. ஒட்டு மொத்த சங்கிகளின் குரல், சனாதனவாதிகளின் குரல், ஜாதிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்த வெறி கொண்டலையும் ஆதிக்க சக்திகளின் குரல். பொது வெளியில் உரக்க ஒலிக்கும் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் திரையில் ஒலிக்க்க் கூடாது என்று விரும்புகிற பிற்போக்குத்தனமாவர்கள்.
தமிழ் சினிமா இது போன்ற கூட்டணிகளால்தான் நாளை நிச்சயம் அழிவும். ஆனால் இந்த கூட்டணியும் கட்டாயம் அழிந்து போகும், இந்த கூட்டணி மட்டுமல்ல எல்லா கிரிமினல் கூட்டங்களும் கூட்டுக் களவாணிகளும் நிச்சயம் அழிந்து போவார்கள்.
No comments:
Post a Comment