தேர்தல் அறிவிப்பு வந்த காலத்தில் இருந்து ஆட்டுத்தாடி ரெவியின் சத்தம் கேட்கவேயில்லை. நீ ஏதாவது கன்னாபின்னா என்று பேசினால் இருக்கும் அல்ப ஓட்டு கூட விழாது என்று ரெவியின் கையைப் பிடித்துக் கொண்டு இதை காலாக நினைத்துக் கொள் என்று கெஞ்சியிருப்பார் என்று நினைத்திருந்தேன்.
அப்படியெல்லாம் நான் காணாமல் போகவில்லை. சக சங்கிக்காக வர வேண்டிய நேரத்தில சரியா வருவேன் என்பது போல "நானா ஆட்டுக்காரன் மேல வழக்கு தொடுக்க அனுமதி கொடுப்பேன்" என்று பதறிப் போய் அறிக்கை கொடுத்து விட்டார்.
ஆமாம், யாரு இந்த ஆட்டுக்காரன்?
முதல்வரா? மந்திரியா? எம்.பி யா? எம்.எல்.ஏ வா? கவுன்சிலரா?
ஒரு எழவும் கிடையாது.
ஐ.பிஎஸ் பதவியை பாதியில் ராஜினா செய்து விட்டு ஓடி வந்த கிரிமினல்.
இந்தாள் மீது வழக்கு பதிவு செய்ய எதுக்கு கவர்னர் அனுமதி கொடுக்கனும்? அவசியமே கிடையாதே! உங்க அதிகாரிகளில் காவி ஊடுறவல் நடந்துள்ளது. அதனால்தான் இப்படி செய்திகளை வெளியிட்டு கோமாவில் இருந்த சப்ஜெக்டை எழுப்பி விட்டுட்டாங்க.
இப்படித்தான் கோமாவில் பல சப்ஜெக்டுங்க நாட்டில் கிடக்குது. தப்பான நேரத்துலதான் அதுக்கெல்லாம் உணர்வு வரும், முழிப்பு வரும். அதையெல்லாம் எதுக்கு நான் என் வாயால சொல்லிக்கிட்டு.
No comments:
Post a Comment