தெய்வக்குழந்தை
மைசூரில் ரேடிஸன் ப்ளூ எனும் ஐந்து நட்சத்திர
விடுதியில் தன் பரிவாரத்துடன் தங்கியதற்கான
தொகையை செலுத்தவில்லை. அந்த பாக்கி ஒன்றும்
பெரிய தொகையில்லை.
ஜஸ்ட் எண்பது லட்ச, ரூபாய்தான். அந்த தொகையை கட்டச்சொல்லி ஹோட்டல்
நிர்வாகம்,
அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்த
வனத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
என்ன
தைரியம் அந்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு?
தங்கியது
என்ன மனிதப் பிறவியா?
ஒரு
அவதாரம் தன்னுடைய ஹோட்டலில் தங்கியதற்கு பெருமிதப்பட்டு அந்த அறையை அப்படியே கோயிலாக
மாற்றி அந்த பிறவியின் சிலையை பிராண பிரதிஷ்டான்
செய்து முட்டாள் சங்கிகளை தரிசனம் செய்ய வைத்திருந்தால் எண்பது லட்சத்தை விட பல மடங்கு
ரூபாய் கல்லா கட்டியிருக்கலாம்! அதை விடுத்து பணம் செலுத்த சொல்லி கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதனால்
என்ன ஆகும் தெரியுமா?
மனிதப்
பிறவியாக இருந்திருந்தால் அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை, சி.பி.ஐ ஆகியவற்றை அனுப்பியிருப்பார்.
இவருக்கு ஆதரவாக மொட்டைச் சாமியார் யோகியார் புல்டோசரை அனுப்பியிருப்பார்.
தெய்வப்பிறவி
என்பதால்
திருவிளையாடல்
படத்து சிவாஜி போல அவர் கை அசைத்தால் . . . .
ஹோட்டல்
மீது புயல் வரும், நில நடுக்கம் வரும், இடி
மின்னல் தாக்கும், ஏன் கடலே இல்லாத மைசூரில் ஹோட்டலை மட்டும் சுனாமி வந்து தாக்கும்.
தப்பு
பண்ணிட்டாங்களே, இனிமே என்ன ஆகப்போகுதோ?
No comments:
Post a Comment