டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா இம்முறை பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது.
சொல்லப்பட்ட காரணம்:
அவர் போதை மருந்து சோதனைக்கு மாதிரி கொடுக்க மறுத்து விட்டார்.
உண்மை என்ன?
போதை மருந்து சோதனைக்காக கொண்டு வந்த உபகரணங்கள் காலாவதி ஆனதால் அவை கொண்டு சோதிக்க மறுத்து விட்டார். இது போல காலாவதி ஆன உபகரணங்களை முன்பும் ஒரு முறை கொண்டு வந்துள்ளனர்.
நோக்கம் என்ன?
காலாவதியான உபகரணங்கள் கொண்டு சோதித்து பஜ்ரங் புனியா போதைப் பொருள் உட்கொண்டதாக அவதூறு செய்து தகுதி அற்றவராக மாற்றுவது.
இறுதி வெற்றி யாருக்கு?
போதைப் பொருள் உட்கொண்டார் என்று அவதூறு பரப்பும் முயற்சியை முறியடித்ததால் பஜ்ரங் புனியாவுக்கு வெற்றி.
பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர் போட்டிக்கே செல்லாததால் இந்தியாவுக்கு தோல்வி. இந்திய விளையாட்டுத்துறைக்கு தோல்வி.
ஏன் இந்த கேவலமான முயற்சி?
பாலியல் ஜனதா கட்சியின் பாலியல் குற்றவாளி பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடியதற்காக அந்திமக் காலத்திலும் மோடி செய்த அயோக்கியத்தனம்.
அயோக்கியர்கள் தங்களுக்கு எதிராக போராடுபவர்களை அவதூறு செய்ய நினைப்பார்கள், பழி வாங்க நினைப்பார்கள், எந்த அளவிற்கும் கீழிறங்குவார்கள். அதற்காக யாருடன் வேண்டுமானாலும் கூட்டு வைத்துக் கொள்வார்கள். யாரை வேண்டுமானாலும் பொய்யாக பேசி ஏமாற்றுவார்கள். அவர்களும் கூட அதனை முட்டாள்தனமாக நம்புவார்கள்.
ஆனால் இறுதியில் அவர்கள் நிச்சயம் தோற்று[ப் போவார்கள்.
ஜூன் 4 இந்த உண்மையை சொல்லும்.
No comments:
Post a Comment