பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் எஸ்.ஜி.சூர்யா. ஆமாம், அவன்தான். தோழர் சு.வெங்கடேசன் மீது அவதூறு பரப்பி கைது செய்யப்பட்டவன். அவதூறு பரப்பும் வேறு சிலர் சகல சௌகர்யங்களோடு பாதுகாப்போடு இருக்கிறார்கள். நான் தெய்வக்குழந்தையை சொல்கிறேன்.
அவன் தன் ட்விட்டர் பக்கத்தில் ஏதோ மிகப் பெரிய கருத்தை சொல்லி விட்டதாக பீற்றிக் கொண்டிருக்கிறான்.
இதுதான் விஷயம். இதை ஏதோ பிரம்மாண்டமான அரசியல் நிகழ்வு போல பில்ட் அப் செய்வதெல்லாம் சங்கிகளின் கீழ்த்தர உத்தி. இவர்களே ஒரு கருத்தை உருவாக்கி பொதுப்புத்தியில் படிய வைப்பது. ஆட்டுக்காரனை பற்றி, அபூர்வ பிறவி பற்றி, வேலூரில் ஏ.சி.எஸ்தான் ஜெயிப்பார் போன்ற மாய பிம்பங்களை உருவாக்குகிறார்கள்.
சூர்யா கொடுத்த பில்ட் அப்பில் இன்னொரு அபத்தமும் உள்ளது.
50 ஆண்டுகளில் முதல் முறையாக கை சின்னத்துக்கு வாக்களிக்க முடியாமல் பரிதவித்ததாக சொல்லியுள்ளதுதான் உடான்ஸ்.
1977 பொதுத்தேர்தல் வரை இந்திரா காங்கிரஸ் கட்சியின் சின்னம் "பசுவும் கன்றும்" அத்தேர்தலில் தோற்று 1978 ல் கர்னாடக மாநிலம் சிக்மகளூர் தொகுதியில் இந்திரா அம்மையார் போட்டியிட்ட போதுதான் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக "கை" சின்னத்தில் போட்டியிட்டது. அப்போது நடந்த தஞ்சாவூர் இடைத்தேர்தலின் போது எம்.ஜி.ஆர் பாடலான "இது நாட்டைக்காக்கும் கை" பாடல்தான் அப்போது நான் படித்த ஊரான திருக்காட்டுப்பள்ளியில் சாலைகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
சோனியா காந்தி முதல் முறையாக 1980 பொதுத்தேர்தலில்தான் கைச்சின்னத்தில் வாக்களித்திருப்பார். அப்படிப்பார்த்தால் 44 வருடங்கள்தான்.
50 என்பது தாக்கம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பொய்.
இப்படி சொல்லப்படும் பொய்களை சிலர் நம்பவும் செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.
இவனுக்கெல்லாம் எந்த பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்தது என்று தெரியவில்லை. கூசாமல் எப்படி பொய் சொல்வது என்று ஆராய்ச்சி செய்து டாகடரேட் வாங்கியிருப்பானோ? விபரம் தெரிந்தால் வேறு சில பொய்யர்கள் கூட டாக்டராகி விடுவார்கள்.
No comments:
Post a Comment