"அழகென்ற சொல்லுக்கு முருகா" என்று பாடப்பட்ட முருகனை இப்படி விகாரமான சிலையாக அமைத்து விட்டார்களே என்பதுதான் இரண்டு நாட்களாக தமிழர்களின் ஆதங்கமாக இருந்தது.
அந்த சிலையை நன்றாக கவனித்த போதுதான் விகாரத்திற்கான காரணம் புரிந்தது.
தாமரை மேல் நிற்கவைத்ததால் முருகன் முகம் கோணி உடல் இளைத்து நோஞ்சானாகி விட்டார்.
இந்த சிலையை மாற்றப் போகிறார்களாம். தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் மட்டுமல்ல தமிழ்க்கடவுள் முருகனுக்கும் தாமரை தேவையில்லை. தாமரையை அகற்றுங்கள், சிலையிலிருந்தும் இந்திய நாட்டிலிருந்தும்.
No comments:
Post a Comment