கர்னாடகாவில்
உள்ள குக்கே என்ற இடத்தில் உள்ள சுப்ரமணியா
கோவிலில் (இந்திய வங்கிகளை ஏமாற்றி விட்டு லண்டன் ஓடிப் போன விஜய் மல்லய்யா
இந்த கோவில் கருவறைக்கு 12 வருடத்திற்கு முன்பு 80 லட்சம் ரூபாய் செலவில் தங்கக்கதவுகள்
செய்து அளித்தான் என்பது ஒரு உபரித்தகவல்) ஒரு வினோதமான, பிற்போக்குத்தனமான, அநாகரீகமான
பழக்கம் ஒன்று உண்டு. மேட்டுக்குடி ஜாதியினர் சாப்பிட்ட பின்பு அந்த எச்சிலைகள் மீது
மற்ற ஜாதியினர் படுத்து உருளுவார்களாம். சரும நோய்கள், குழந்தைப் பேறின்மை ஆகியவை விலகுமாம்.
நீண்ட
நெடிய போராட்டத்திற்குப் பின்பு அந்த வழக்கத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இப்போது
தமிழ்நாட்டில் அதே பழக்கத்தை கொண்டு வரப்பார்க்கிறார்கள். கரூர் பக்கத்தில் உள்ள நேரூர் என்ற ஒரு
ஊரில் சதாசில பிரம்மேந்திரர் ஆஸ்ரமத்தில் இதே எச்சிலைஉருளல் சடங்கை கொண்டு வர, பிரச்சினை
உயர் நீதிமன்றம் செல்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதியானாலும் தன் பூர்வாசிரமான ஆர்.எஸ்.எஸ்
அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்கும் அந்த நீதிபதி எச்சிலை உருளலை அனுமதித்துள்ளார்.
உயர்
நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் பெஞ்ச், உச்ச நீதிமன்றம் ஆசியோர் வழங்கிய தீர்ப்புக்களுக்கு
எதிராக அமைந்துள்ளது இத்தீர்ப்பு. காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கங்களை எல்லாம்
மாற்ற முயற்சிக்கக் கூடாது என்ற உபதேசத்தையும்
அளித்துள்ளார்.
தீர்ப்பளித்ததோடு
நிறுத்திக் கொள்ளாமல் அவரே முதல் ஆளாக எச்சிலையில் உருள வேண்டும்.
செய்வாரா?
பந்தியில்
உட்கார்ந்து சாப்பிட வேண்டுமானால் செல்வார், மற்றவர்கள் அவர் சாப்பிட்ட எச்சில் இலையில்
உருள . . .
No comments:
Post a Comment