Sunday, May 27, 2012

மன்மோகன்சிங் - ஒரிஜினல் ரத்தக்காட்டேரி



வேலூர் மாவட்டத்தில்  இரண்டு மாதங்களாக உலாவிக் 
கொண்டிருக்கும் வதந்தி ரத்தக்காட்டேரி  பற்றியது. 

இரவுகளில் ரத்தக்காட்டேரி வருவதாகவும் கன்னிப் பெண்,
தலைச்சன் பிள்ளை ஆகியோரை அடித்து ரத்தத்தை 
குடித்து செல்வதாக வதந்தி பரவியது. உடனடியாக 
அதற்கு பரிகாரம் செய்ய ஜோசியர்களும் புறப்பட்டனர்.

கோழியைஅறுத்து  ரத்தத்தை  தெளித்து விட்டு, வீட்டுக்
கதவில் இன்று போய் நாளை வா என சிவப்பு பெயிண்டால்
எழுதினால் ரத்தக் காட்டேரி போய் விடும் என்ற நம்பிக்கையில்
அங்கங்கே வீடுகள் ராமாயணத்தின் பிரபல டயலாக்கான 
" இன்று போய் நாளை வா" வை இன்னும் பிரபலப் படுத்தி
வருகின்றன.


ரத்தக்காட்டேரி இதுவரை யாருடைய ரத்தத்தை குடித்து
பார்த்த சாட்சி கிடையாது. 


ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நம் ரத்தத்தை, உழைப்பை,
வியர்வையை ஒவ்வொரு நாளும் மத்தியரசு உறிஞ்சிக் 
கொண்டிருக்கிறது. 


கொஞ்சம் கொஞ்சமாக எதற்கு, ஒரேயடியாக மனிதன்
உடலில் உள்ள அத்தனை ரத்ததையும் குடிக்கும்  முயற்சிதான்
சமீபத்திய பெட்ரோல்  விலை உயர்வு.

எனக்கென்னமோ மன்மோகன்சிங்தான் ஒரிஜினல்
ரத்தக்காட்டேரியாக தெரிகின்றார். 

இந்த ரத்தக் காட்டேரிக்கு நாம் எழுதி வைக்க வேண்டிய
வாசகம்

இன்று போ, என்றும்  வராதே

5 comments:

  1. சோனியா பொம்பளை காட்டேரியா ?

    ReplyDelete
  2. மற்ற அமைச்சர்கள் குட்டி பிசாசுகள்லா ?

    ReplyDelete
  3. aiyya, keralavil kolaivery pecchai kettirgala. rattham kudikkum kaatteri yaar enbadhai, thangalin adutha padhivil ethiparkiraen.

    ReplyDelete
  4. ஆம் தோழரே, கேரளாவில் காங்கிரஸ் கட்சி பத்து நாட்களுக்கு முன்பு பந்த நடத்திய போது எர்ணாகுளம் கோடடம் வடக்கு பாரூர் அலுவலகத்தை மூடச் சொல்லி அடாவடி செய்ததையும், அலுவலகத்திற்குள் ஊழியர்கள் இருக்கும் போதே கதவுகளை மூடியதையும் நமது தோழர்கள் மார்ட்டின், ராஜன் ஆகியோர் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் எழுதியிருக்க வேண்டும். தவறுதான். அங்கே நம் தோழர்கள் மீது நடந்த கொலை வெறித் தாக்குதல் பற்றி கண்டிப்பாக எழுதுகிறேன்

    ReplyDelete
  5. nettapakkathukku vazhi ketta kottappaakku
    ettana engireergalaey. arajagatthil, mamta arajagam,marxist arajagam,congress arajagam appadeennu edhuvam kidaiyaathu. ella adavadiyum
    ondrudhan.

    adhusari adhu enna paarur aluvalaga kadhai?

    ReplyDelete