Tuesday, May 22, 2012

சபாஷ் முருகன், சபாஷ் பேரரறிவாளன், வாழ்த்துக்கள்



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி தூக்கு தண்டனையை
எதிர் நோக்கும் முருகன் மற்றும் பேரரறிவாளன் ஆகியோர்
பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் மிகச் சிறப்பான 
மதிப்பெண்களோடு  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முருகன் 983 மதிப்பெண்களும் பேரரறிவாளன் 1096 
மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இதிலே முருகன் காமர்ஸ்
பாடத்தில் இருநூறுக்கு இருநூறு. பேரரறிவாளன் எல்லா
பாடங்களிலும் தொன்னூறு சதவிகிதத்திற்கு மேலும்
பெற்றுள்ளார்.

பள்ளிகளின்  தொடர்  பயிற்சி, தொடர் தேர்வுகள்,
பெற்றோரின் கவனம், முழுமையான வசதிகள்,
நிம்மதியான சூழல், ட்யூஷன் வசதிகள் இதுவெல்லாம்
இருந்தும் கூட எல்லா மாணவர்களும் எதிர்பார்க்கும்
மதிப்பெண்கள் பெறுவதில்லை.

இருபது வருட சிறை வாசம், இறப்பை உறுதி செய்துள்ள
தூக்கு தண்டனை, முடிவு என்னாகுமோ என்று தெரியாத
மேல் முறையீடு, பெற்றோர், உறவினரின் கண்ணீர்,
இதற்கு மத்தியில் இவர்கள் இருவரும் பெற்றுள்ள
மதிப்பெண்கள், மாநிலத்தின்  முதல் மாணவராக
தேர்ச்சி பெற்றதற்கு சமமாகும். 

சபாஷ் முருகன், சபாஷ் பேரரறிவாளன். 

வாழ்த்துக்கள். இது உங்களுக்குக் கிடைத்த
முதல் வெற்றி.

மரண தண்டனைக்கு எதிரான உங்களது 
போராட்டமும் வெற்றி பெறட்டும்.

 

4 comments:

  1. என்ன சி.பி.எம் ஆளுங்க, புலிகளுக்கெல்லாம் வாழ்த்து சொல்றீங்க/

    ReplyDelete
  2. தமிழக சட்டசபையில் மூவரது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஒரு மனதாக (காங்கிரஸ் கட்சி நீங்கலாக ) நிறைவேற்றப்பட்ட
    தீர்மானத்திற்கு சி.பி.எம் ஆதரவளித்தது என்பதை திரு அனானிக்கு நினைவு படுத்துகின்றேன். இன்றைய கல்விச் சூழலில் இவர்கள் பெற்ற மதிப்பெண்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  3. சிறு பிரச்சனை இருந்தால் கூட பலருக்கு படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. இவர்கள் இருவரும் பலருக்கும் உதாரணம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. moovarukkum en manamaarndha vaazhththukkal
    surendran

    ReplyDelete