அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்த இரு விபத்துக்கள்,
கோயில் தேர் திருவிழாக்களில் நடந்த விபத்துக்கள்
அதிர்ச்சியை அளிக்கிறது. இப்படி ஒரு அலட்சியமா
என்று ஆத்திரமும் வருகிறது.
நான்கு நாட்கள் முன்பாக ஆரணியில் நடைபெற்ற
கோயில் தேர் திருவிழாவில் சக்கரம் உடைந்து போய்
தேர் கவிழ்ந்து ஐந்து பக்தர்கள் அங்கேயே இறந்து
போனார்கள்.
வெயிலிலும் மழையிலும் பராமரிப்பு இல்லாமல்
தேரின் மரங்கள் உளுத்துப் போனதும் மோசமான
சாலையில் அந்த தேர் பவனி போனதும்தான்
விபத்திற்குக் காரணம்.
ஆரணி விபத்து நடந்த மறுநாளே குடியாத்தம் தேர்
திருவிழா விபத்து. உயர் மின் அழுத்த கம்பியில்
தேரின் கோபுரக்கலசம் உரச மின்சாரம் தாக்கி
ஐவர் அங்கேயே பலி. பலரும் சிகிச்சையில்
உள்ளனர்.
தேர் செல்லும் பாதையில் மின் கம்பி உள்ளதா
என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை விட
உயரமாக தேரை வடிவமைத்ததும் தேரை
இழுத்துச் செல்ல இரும்புச் சங்கிலிகளை
பயன் படுத்தியதும்தான் இங்கே விபத்திற்குக்
காரணம்.
இரண்டு விபத்துக்களுமே தவிர்க்கப் பட்டிருக்கலாம்,
அலட்சியம் தவிர்க்கப்பட்டிருந்தால் .....
திருவிழா நடத்துபவர்களில் பெரும்பாலானவர்கள்
இன்று எவ்வளவு வசூல் செய்து எவ்வளவு
சுருட்டுவது என்பதில் காண்பிக்கும் கவனம் மற்ற
விஷயங்களில் காண்பிப்பதில்லை.
அது சில சந்தர்ப்பங்களில் மோசமான விபத்தாக
உயிர்களைக் குடித்து விடுகின்றது.
திருவிழா நடத்துபவர்களில் பெரும்பாலானவர்கள்
ReplyDeleteஇன்று எவ்வளவு வசூல் செய்து எவ்வளவு
சுருட்டுவது என்பதில் காண்பிக்கும் கவனம் மற்ற
விஷயங்களில் காண்பிப்பதில்லை.
மிகவும் சரியான உண்மை உணருபவர்கள் தான் இல்லை .