Tuesday, May 29, 2012

பெட்ரோல்: திசை திருப்பப்படும் கோபம்

 பெட்ரோல்  விலை உயர்வின் பின்னணியில் உள்ள
அரசியல் மோசடிகளை அம்பலப்படுத்தும் அற்புதக்
கட்டுரை. நீங்களும் படியுங்கள். எதிர்ப்பியக்கத்தில்
இணையுங்கள். ......



 

இ.எம். ஜோசப்,
முன்னாள்  துணைத்தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு


அண்மைக்கால வரலாற்றில் பெட் ரோல் விலை இந்த அளவிற்கு (தமிழகத் தில் லிட்டருக்கு ரூ. 7.98) ஏற்றப்பட்ட தில்லை. இது மக்களின் கோபத்தினைக் கிளறியிருப்பது இயல்பானது. விலை உயர்வினை எதிர்த்து இடதுசாரிக் கட்சி கள் களமிறங்கியிருக்கின்றன. அதுவும் இயல்பானது. ஆனால், தனது ஆட்சிக் காலத்தில் இதற்கு கொள்கை அடிப்படை யில் வழிவகுத்துத் துவக்கி வைத்த பி.ஜே.பி. இந்த விலையேற்றத்தினை எதிர்த்துக் களம் இறங்கியிருக்கிறது. 


கோபத்தைத் திசை மாற்றி


இந்தக் கொள்கையினைப் பொறுத்த ளவில் காங்கிரசுக்கும், பி.ஜே.பிக்கும் எவ் வித முரண்பாடும் கிடையாது. ஆனாலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது மட்டும், விலையேற்றத்தினை எதிர்ப்பது மக்களை ஏமாற்றுவதற்கான அவர்களது தந்திரமாக மாறியுள்ளது. “ஏன் என்னை கலந்தா லோசிக்கவில்லை?” என்று கோபப் படும் மம்தா. “கொஞ்சமாவது குறைக்கக் கூடாதா? என்று கெஞ்சுகின்ற கருணா நிதி. அமைச்சரவையில் முடிவுகளுக்கு கை தூக்கிவிட்டு, தெருவில் முஷ்டி உயர்த்தும் பெரிய மனிதர்கள் இவர்கள். விலையேற்றத்தினைத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்திருப்பது இதில் கூடுதல் வேடிக்கை. அரசியலில் தார்மீகக் கூச்சங்களைக் கைவிடுவதின் அடுத்தக் கட்ட வளர்ச்சி போலும் இது! மொத்தத்தில், இந்த விலையேற்றத் தின் பின்னணியில் இருக்கும் நவீன தாராளவாதக் கொள்கைகளின் மீதும், அந்தக் கொள்கைகளைத் தூக்கிப் பிடித் திருக்கும் கட்சிகள் அவை ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந் தாலும் அவர்கள் மீதும் வரவேண்டிய நிரந் தரமான கோபத்தினை, அன்றைய அர சாங்கத்தின் மீதான தற்காலிக கோபமாக மாற்றும் முயற்சியே இது. உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள முதலாளித்துவக் கட் சிகளின் பொதுவான சாதுரியம் மட்டு மல்ல இது; அவர்களுக்கு இடையிலான எழுதப்படாத ஒப்பந்தமும் கூட. 


தோட்டத்தில் பாதி கிணறு!


ஒவ்வொரு முறையும் விலையேற்றத் தின் போதும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வினைக் காரணமாகக் கூறும் அரசாங்கம், இம் முறை அதைக் கூற முடியவில்லை. கார ணம், சர்வதேசச் சந்தையில் பீப்பாயின் விலை 124 டாலரிலிருந்து 117 டாலராகக் குறைந்திருக்கிறது. ஆனால் அதற்காக விலையை ஏற்றாமல் விட முடியுமா? ரூபாயின் மதிப்பு டாலருக்கு 55.37 எனக் குறைந்து விட்டது. எனவே எண்ணெய் விற்பனைக் கம்பெனிகள் நஷ்டமடைகின் றன. இது இன்று சொல்லப்படும் காரணம். கச்சா எண்ணெய் விலையேற்றம் அல்லது ரூபாயின் மதிப்பு குறைவு, இப்படி எதுவாக இருந்தாலும், பெட்ரோல் விலையில் வரிகளின் பங்கு கணிசமாக இருக்கிறதே, இது நியாயமா? தமிழகத்தில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.54. இதில் வரியின் பங்கு ரூ.34.97 என்றால், அது 45 சத வீதத்திற்குச் சற்று அதிகம். இது சரியா? கச்சா எண்ணெய் விலையேற்றம், ரூபாய் மதிப்புக் குறைவு - நம்மைப் பொறுத்த வரை, இவை இரண்டுமே நெருக்கடியின் வடிவங்களே. ஆனால், இந்த இரண்டு நெருக்கடிகளையும் அரசு தனது வரு மானத்தினைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பாகத்தானே பார்க்கிறது? இது சரியா? இவையெல்லாம் நாம் எழுப்பும் கேள்விகள். 


உண்மையில் நஷ்டமா?


எண்ணெய்க் கம்பெனிகள் நஷ்ட மடைகின்றன என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்களே, அது உண்மையா? சரி யாகச் சொல்லப் போனால், ஆங்கில ஏடு களில் நஷ்டம் (டுடிளள) என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுவதில்லை. அது ‘குறை வசூல்’ (ருனேநச சுநஉடிஎநசல) என்றே அழைக் கப்படுகிறது. (தமிழ் ஊடகங்களில் பயன் படுத்தப்படும் ‘நஷ்டம்’ என்ற சொல், அத னுடைய தவறான அல்லது உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பு எனக் கருத இடமுண்டு.) அந்தக் ‘குறை வசூல்’ குறித் துப் பேசுவதற்கு முன்பாக, இங்கு ஒன் றைத் தெளிவுபடுத்த வேண்டும். நாம் பெட்ரோல், டீசல், கெரசின் போன்ற வற்றை இறக்குமதி செய்வதில்லை. கச்சா எண்ணெய்யினை மட்டுமே இறக்கு மதி செய்கிறோம். அதைச் சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின் இன்னும் பிற பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்து, உள்நாட்டில் விற்றது போக ஏற்று மதியும் செய்கிறோம். நமது நாட்டின் இறக் குமதியில் கச்சா எண்ணெய் முதலிடத் தினை வகிக்கிறது என்பது அனைவருக் கும் தெரியும். ஆனால், பெட்ரோலியப் பொருட்கள்தான் ஏற்றுமதியிலும் முத லிடம் வகிக்கின்றன என்பது பலருக்குத் தெரியாது. அது மட்டுமல்லாமல், உள் நாட்டு விலைகளுக்குத்தான் கட்டுப்பாடு, ஏற்றுமதி விலைகளுக்கு அதுவெல்லாம் இல்லை. நமது இறக்குமதிச் செலவு சென்ற ஆண்டு 141 பில்லியன் டாலர்; அதே வேளையில் ஏற்றுமதி வருமானம் 58 பில்லியன் டாலர். சுத்திகரிப்புத் தொழிலில் இந்தியா விற்கு இருக்கும் அனுகூலங்கள் குறித் தும் சற்றுக் கூறுவது அவசியம். நமது நாட் டின் சுத்திகரிப்பு ஆலைகள் மிகவும் திறம் படைத்தவை; நவீனமானவை. அமெ ரிக்கா, ஐரோப்பா நாடுகளின் ஆலை களை விட பெரியவை, நவீனமானவை. ஏனெனில், இவற்றில் பெரும்பான்மை ஆலைகள் 1990களுக்குப் பின்னர் உரு வானவை. உயர் கந்தகம் கொண்ட, அதே போன்று சலித்துப் போன கச்சா எண் ணெய்யைக் (ளுயஎடிரச ஊசரனந) கூட சுத்தி கரிக்கும் திறன் கொண்டவை. உள்நாட் டுத் தேவையின் அளவுகளுக்கு அதிக மாகவே, அதாவது சுமார் 215 மில்லியன் டன் சுத்திகரிக்கும் அளவிற்கு அத் தொழில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இது இன்று மேலும் வளர்ச்சி பெற்று வரு கிறது. எனவே, உலகத் தரத்தில் தொழில் திறமையும் குறைவான உற்பத்திச் செல வும் இருப்பதனால், இத்தொழில் லாபகர மாக இயங்கி வருகிறது. குறிப்பாக ஏற்று மதியில் பெருமளவு லாபத்தினை ஈட்டி வருகிறது. சிங்கப்பூர், ராட்டர்டாம் (நெதர் லாந்து) ஆலைகளின் தரத்தில் இவைகள் இயங்குகின்றன. இன்றைக்கு அமெரிக் காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இங்கிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே இயல்பாகவே எண்ணெய்க் கம் பெனிகள் இந்நாட்டில் நஷ்டமடைவ தில்லை. மாறாக நல்ல லாபம் அடை கின்றன. அப்படியென்றால் குறை வசூல் குறித்து அதிகம் பேசப்படுகிறதே, ஏன்? 


இழப்பு கற்பனையே!


ஏற்கனவே குறிப்பிட்டபடி, பெட்ரோ லையும் டீசலையும் நாம் நேரடியாக இறக் குமதி செய்வதில்லை. ஆனால், இந்த எண்ணெய் விற்பனைக் கம்பெனிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், தாங்கள் அதை இறக்குமதி செய்யாவிட்டாலும் கூட, அதை இறக்குமதி செய்ததாகப் பாவித்து அதன் விலையினை நிர்ண யிக்க வேண்டும் எனக் கோருகிறார்கள். அதாவது சர்வதேசச் சந்தையில் வாங்கா விட்டாலும் அதை அந்த விலையில் வாங்கியதாகக் கொள்ள வேண்டும். அதைக் கப்பலில் ஏற்றிக் கொண்டு வருவதாகப் பாவிக்க வேண்டும். இங்கு இறக்குமதி செய்வதற்கு எதுவெல்லாம் தேவையோ, அதையெல்லாம் செய்யா விட்டாலும் கூட, அதையெல்லாம் செய்த தாகக் கருதி அதற்கான அனைத்துச் செல வுகளையும் உள்ளடக்கிய ஒரு விலையில், அதாவது சர்வதேச வர்த்தக விலைக்குச் சமமான விலையில் (கூசயனந ஞயசவைல ஞசiஉந) விற்க அனுமதிக்க வேண்டும். என்ன தலை சுற்றுகிறதா? இதுதான் அவர்களது கோரிக்கை. ஆனால், இங்கு அதை விடக் குறைந்த விலையில் விற்க வேண்டியுள் ளது. இப்படி தாங்கள் கோரும் கற்பனை விலைக்கும், அனுமதிக்கப் பட்டிருக்கும் விலைக்கும் இடையிலான இடைவெளி தான் குறை வசூல் அல்லது நஷ்டம் என்று ஒப்பாரி வைக்கப் படுகிறது.


அவர்களின் ஆதங்கம்!


இந்த எண்ணெய்க் கம்பெனிகளுக் கும் ஒரு ஆதங்கம் உண்டு. அது கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் கம்பெனிக ளுடன் செய்யும் ஒப்பீட்டால் உருவானது. நமது கச்சா எண்ணெய்த் தேவையில் 30 சதவீதம் நம் நாட்டிலேயே உற்பத்தி செய் கிறோம் அல்லவா, அந்த உற்பத்தியாளர் கள் குறித்த அதாவது ஓ.என்.ஜி.சி, ரிலை யன்ஸ், எஸ்ஸார், கெயிர்ன்ஸ் குரூப் போன்ற இந்திய மற்றும் வெளிநாட்டுக் கம் பெனிகள் குறித்த விஷயம் இது. உற்பத்தி நடப்பது இந்தியாவில்தான் எனினும், இவர்களுக்குக் கிடைப்பது சர்வ தேச விலை. உற்பத்திச் செலவுகளில் எந்த உயர்வும் இல்லாத போதும், சர்வ தேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டால், இவர்களுக்கும் அந்த விலை தானாகவே கைக்கு வந்து விடும். ஒரு சிறிய உதாரணம்: ராஜஸ் தானில் இயங்கும் பிரிட்டிஷ் நிறுவனமான கெயிர்ன்ஸ் குரூப்பிற்கு சென்ற 2010-2011முதல் காலாண்டில் கிடைத்த லாபம் ரூ.245 கோடி, 2011-2012 முதல் காலாண் டில் கிடைத்த லாபம் ரூ.2457 கோடி. அதா வது ஒரே ஆண்டில் 10 மடங்கு அல்லது 1000 சதவீத லாபம். ரிலையன்ஸ் கம்பெனி யின் எண்ணெய் வருமானம் இந்திய நாட் டின் ஜிடிபி மதிப்பில் 3.5 சதவீதம். இந்திய தேசத்திற்குச் சொந்தமான எண்ணெய் வளம் இன்று இவ்வாறு உள்நாட்டு, வெளி நாட்டு முதலாளிகளுக்கு கொழுத்த லாப மாக மாறி வருகிறது. தொலைத் தொடர்பு அலைக்கற்றை, கனிமச் சுரங்கங்கள் என நாட்டின் இயற்கை வளங்கள் தனியாருக் குத் தாரை வார்க்கப்படும் நவீன தாராள வாதக் கொள்கைகளின் பகுதியான ஒரு அம்சமே இது. அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டிய இந்தச் சுரண்டல், இன்று சுரண்டுபவர்களுக்கு இடையி லான போட்டி பொறாமையாகவும், அர சாங்கம் சிலருக்கு அதீத ஆதரவு காட்டும் சலுகை சார் முதலாளித்துவமாகவும் மாறி நிற்கிறது. எரிவாயு விலைப் பிரச்சனை யில் இன்றைக்கு ரிலையன்ஸ் கம்பெனிக் குக் காட்டப்படுவது அத்தகைய சலுகை யேயாகும். 


கறவைப் பசு!


உண்மையில் இவர்களுக்கு நஷ்டம் எங்கே வந்தது? பெட்ரோல், டீசல் விலை களில் கச்சா எண்ணெய் விலையின் பங்கு 90 சதவீதம், சுத்திகரிப்புச் செலவு கள் உள்ளிட்ட செலவுகளின் பங்கு 10 சத வீதம் மட்டுமே எனும்போது நஷ்டம் எப் படி வரும்? இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை எடுத்துக் கொள்வோம். அந்தப் பொதுத்துறை நிறுவனம் மார்ச் 2008ல் தொடங்கி மார்ச் 2011ல் முடிந்த நான்கு ஆண்டுகளில் ஈட்டிய லாபம் முறையே, ரூ.6962 கோடி, ரூ.2949 கோடி, ரூ.10,220 கோடி, ரூ. 7445 கோடி. 2010-11ல் குறை வசூல் ரூ.72,000 கோடி என உரத்துப் பேசும் பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, மறுபுறத்தில் அவ்வாண்டு மத்திய அரசுக்கு ரூ.92,000 கோடி, மாநில அரசுகளுக்கு ரூ.78,000 கோடி என்று அரசாங்கங்களுக்குக் கிடைத்த வரி வருமானம் குறித்து மௌ னம் காக்கிறார். 2011வரையிலான நான்கு ஆண்டுகளில் அரசாங்கங்களுக்குக் கிடைத்த வரி வருமானம் மத்திய அர சுக்கு ரூ.4,10,842, மாநில அரசுகளுக்கு ரூ.2,63, 766 கோடி. ஆனால் இவ்வாண்டு களில் மத்திய அரசு மானியமாகக் கொடுத்தது ரூ.23,220 கோடி மட்டுமே. வெல்லத்தை பிள்ளையாராகப் பிடித்து வைத்துக் கொண்டு, அதன் பின்னர் அந்த வெல்லப் பிள்ளையாரையே கொஞ்சம் சுரண்டி அவருக்கு நைவேத்தியம் செய்யும் பக்தனுக்கும், மத்திய அரசின் மானியம் குறித்த நடவடிக்கைக்கும் என்ன வேற்பாடு? மத்திய அரசின் வரி வருமானத்தில் 40 சதவீதத்திற்கு மேல் எண்ணெய் உற்பத் தித் துறையிலிருந்து எனும் போது, இங்கு கறவைப் பசுக்களாக பயன்படுபவர்கள் சாமானிய மக்களே. உண்மை இவ்வாறு இருக்கும் போது, அதை மறைத்து அரசும், எண்ணெய்க் கம்பெனிகளும் பல மாய் மாலங்களில் ஈடுபட்டு வருகின்றன. நஷ் டம் என்று நம்ப வைப்பதில், இவர்களுக்கு ஊடகங்கள் செய்யும் உதவியும் கொஞ்ச நஞ்சமல்ல. 


குறியிலக்கை நோக்கி …


ஐ.மு.கூட்டணி அரசு தனது பதவிக் காலத்தில் இது வரை 39 முறை பெட் ரோல்- டீசல் விலையினை உயர்த்தியி ருக்கிறது. இடது சாரிக் கட்சிகளின் ஆதர வில் இருந்த காலம் வரை இது கணிச மாகக் கட்டுப்பட்டிருந்தது. அதன் பின்னர் தட்டிக் கேட்க ஆளில்லாத நிலையில், ஐ.மு.கூட்டணியின் சண்டப்பிரசண்டம் உச்சத்திற்குச் சென்று விட்டது. பெட்ரோ லில் தொடங்கி அடுத்த கட்டத்தில் டீச லுக்கும் கெரசினுக்கும் செல்லும் காலம் நெருங்கி விட்டது. தமிழ்நாடு உட்பட மாநி லங்களுக்கான கெரசின் ஒதுக்கீடு தற் போது பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டது. மின் கட்டணங்களைக் கூட சர்வ தேச அளவிற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு சிந்தித்து வருகிறது. மின் சக்திக்கான எரிபொருட்களின் சர்வ தேசச் சந்தை விலை உயர்ந்து விட்டால் மின் கட்டணம் உயரும் என்பது அதன் பொருள். மின்சக்தி உற்பத்தியில் நிலக்கரி, பெட்ரோல், டீசல், யுரேனியம் என எதுவும் எரிபொருளாக இருக்க முடியும். இவற்றின் சர்வதேசச் சந்தை விலை உயரும் போதெல்லாம் மின் கட்டணம் உயரும் என்றால் என்ன ஆகும் என்பது குறித்து சிந்திப்பது அவசியம். எனவே பெட்ரோல் விலையேற்றத்தினை ஐ.மு.கூட்டணி அரசின் ஒரு தவறான நடவடிக்கையாக மட்டும் பார்க்காமல், தொடரும் நவீன தாராளவாதக் கொள்கைகளைக் குறி இலக்காக வைத்து அவற்றிற்கு எதிரான மக்களின் கோபமாக, போராட்டமாக இதை மாற்ற வேண்டும். நமது போராட் டத்தின் குறி இலக்கு மாறி விட்டால், இந்த விலையேற்றம் அரசின் மற்றுமொரு மாமுல் நடவடிக்கைக்கு எதிரான போராட் டமாக மட்டுமே இருக்க முடியும். மே 31 எதிர்ப்பு நாள் இந்த உணர்வினை உயர்த் திப் பிடிக்க வேண்டும்.

நன்றி - தீக்கதிர் நாளிதழ்    29/05/2012
 

1 comment:

  1. அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நஷ்டம், நஷ்டம் என்கிறார்கள். நேற்றைய செய்தி, BPCL declared Rs.11/.. dividend for a share of Rs.10/.. & Bonus Share 1:1 i.e., 1 share bonus for 1 share - அரசாங்கமும், எண்ணெய்க்கம்பெனிகளும் சேர்ந்து மக்கள் வயிற்றில் மண்ணடிக்கிறார்கள். இதில் தனியார் நன்கு கொள்ளையடிக்கிறார்கள். நினைத்தால் பெட்ரோல் பம்புகளை ஓட்டுகிறார்கள். இன்றேல் மூடி விடுகிறார்கள். மக்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கு சினிமாவும், சாராயமும் போதும். வேதனை தான்.

    ReplyDelete