அதிமுக ஆட்சிக் காலத்தில் ஓரளவாவது மக்களிடமிருந்து
பாராட்டு பெற்ற விஷயம் என்று ஏதாவது இருந்தால் அது
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நில அபகரிப்பு செய்யப்
பட்ட திமுக காரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான்.
நில அபகரிப்பாளர்கள் திமுகவினராக இருந்தால் மட்டும்தான்
ஜெ அரசு நடவடிக்கை எடுக்கும் போல. அதிமுக வைச்
சேர்ந்த மாபியா கும்பல்கள் செய்தால் அப்படிப்பட்ட
ஆளும்கட்சி குண்டர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு
அளிக்கிறது. யார் புகார் தருகின்றார்கள் என்று குற்றவாளிகளுக்கு
தகவல் அளிக்கிறது.
நில அபகரிப்பு செய்த அதிமுக வினருக்கு எதிராக புகார் செய்த
காரணத்தால் திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட்
கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் வீரபத்ரன் மீது
கொலை வெறித் தாக்குதல் நடந்துள்ளது.
முழமையான தகவலை இதோ தீக்கதிர் நாளிதழில்
படியுங்கள்.
சிபிஎம் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் வீரபத்திரனை கொலை செய்ய முயற்சி
ஜி.ராமகிருஷ்ணன் கடும் கண்டனம்
சென்னை, மே 23 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வண்ணாமலை மாவட்டச் செயலாளர் வீரபத் திரனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. அவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் எம்.வீரபத்திரன் 22.5.2012 அன்று இரவு 9.15 மணியளவில் வீட் டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, திரு வண்ணாமலை நகர்மன்ற உறுப்பினர் வெங்க டேசன், அவரது சகோதரர் செல்வம், மைத்து னர் துரைமுருகன் ஆகியோர் வீரபத்திரனின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித் துள்ளனர். இந்த கொலைவெறிச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. திருவண்ணாமலையில் வைரக்குன்று என்னும் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை நகர்மன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் அவரது சகோதரர் செல்வம் ஆகியோர் அபகரித்தது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் புகார் அடிப்படையில், அரசு நிர்வாகம் ஆக்கிர மிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டது. இத னால் வெங்கடேசன், செல்வம் ஆகியோர் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலை வரும், கட்சியின் மாவட்டத்தலைவர்களில் ஒருவரான பலராமனை பிப்ரவரி 5, 2012 அன்று தாக்கியுள்ளனர். இது குறித்து அவர்கள் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால், காவல்துறை சட்டரீதி யாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெங்கடேசன் மீது 2 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர் கள்ளச்சாராய வியாபாரத்தோடு தொடர் புடையவர். இத்தகைய சமூக விரோத குற்றச் செயல் பின்னணி கொண்ட வெங்கடேசனை கைது செய்து காவல்துறை சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்தே மேற்கண்ட நேற்றைய(22.5.2012) கொலைவெறிச் சம்பவம் நடந்துள்ளது. எனவே, கட்சியின் மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டத் தலைவர்களில் ஒருவரான பலராமன் ஆகியோரைத் தாக்கி கொலைசெய்ய முயன்ற சமூக விரோதிகளான நகர்மன்ற உறுப் பினர் வெங்கடேசன் அவரது சகோதரர் செல் வம், மைத்துனர் துரைமுருகன் ஆகியோர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கண்டன ஆர்ப்பாட்டம்
இத்தாக்குதலை கண்டித்து புதனன்று போளூர், கலசப்பாக்கம், செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். கலசப்பாக்கத்தில் மாநிலக்குழு உறுப்பி னர் கே.சாமுவேல் ராஜ் பங்கேற்றார். முன்ன தாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள வீரபத்திரனை சந்தித்து நலம் விசா ரித்தார்.
நில அபகரிப்பை அனுமதிக்க மாட்டோம் என்று வீர வசனம் பேசிய
ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார் ?
திமுகவினர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதும் என்று
இருந்து விடப் போகின்றாரா? இல்லை சட்டம் ஒழுங்கைப்
பாதுகாக்கப் போகின்றாரா?
No comments:
Post a Comment