Monday, May 14, 2012

குஜராத்தில் கலவரமே நடக்கவில்லை. எலலா முஸ்லீம்களும் தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார்கள்

























குஜராத் கலவரம் பற்றிய சி.பி.ஐ யின் சிறப்பு புலனாய்வுக் குழு
அறிக்கை அயோக்கியத்தனமானது என்று கூறினால் அது
தவறே கிடையாது.

நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் கொடுப்பது மட்டுமே அதன்
நோக்கமாக இருக்கிறது. அதே போல் முஸ்லீம்கள்தான் தவறு
செய்தார்கள் என்று சொல்வது அதன் இன்னொரு நோக்கம்.

காவல்துறையிலும் புலனாய்வுத்துறையிலும் எவ்வளவு 
தூரம் காவிப்படை ஊடுருவி உள்ளது என்பதற்கு இந்த 
அறிக்கை ஒரு சான்று.

குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடிதான் காரணம் 
என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். கலவரக்காரர்களை
மோடி எப்படியெல்லாம் ஊக்குவித்தார் என்பதை டெஹல்கா
ஏற்கனவே நிரூபித்து விட்டது. விசாரணைக் கமிஷன் 
நீதிபதிகள் பற்றி மோடியின் சகாக்கள் காமெரா பதிவு
செய்வது  பற்றி அறியாமலே ஒப்புதல் வாக்குமூலம்
கொடுத்த பின்னரும் கூட எஸ்.ஐ.டி நரேந்திர மோடி
யோக்கியர் என்றே அறிக்கை கொடுத்துள்ளது.

அது மட்டுமா, இந்துக்கள் தங்கள் கோபத்தை நன்றாக
வெளிப்படுத்தட்டும், காவல்துறை தற்போதைக்கு வேடிக்கை
பார்த்தால் போதும் என்று நரேந்திர மோடி சொன்னதை
அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி கூறியதை எஸ்.ஐ.டி
பொருட்படுத்தவேயில்லை. இதை விட கொடுமை என்ன
தெரியுமா?

அப்படி நரேந்திர மோடி சொல்லியிருந்தாலும் கூட அது
ஒரு குற்றமேயில்லை எனச்சொல்கிறது எஸ்.ஐ.டி. 

இந்திராகாந்தி இறந்த போது சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
ஆலமரம் விழும் போது பூமியில் அதிர்வுகள் ஏற்படத்தான்
செய்யும் என்று ராஜீவ் காந்தி சொன்னது எவ்வளவு பெரிய
அராஜகமோ அது போலத்தான் இந்த எஸ்.ஐ.டி யின் கூற்றும்.

அதே போல் எஸ்.ஐ.டி செய்துள்ள இன்னொரு அயோக்கியத்தனம்
குல்பர்கா சொசைட்டி படுகொலைகள் பற்றிய கருத்து. 

அங்கே எழுபது முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள், அதிலே
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி இஷான் ஜாஃப்ரீ 
ஒருவர்.அவர் இருந்த வீட்டை ஆயிரக்கணக்கானவர்கள்
தாக்குகின்றனர். நரேந்திர மோடி உள்ளிட்டு ஏராளமான
ஆட்களுக்கு தொலைபேசியில் உதவி செய்யுமாறு கதறுகின்றார்.
அரசு நிர்வாகம் அசையவில்லை. அங்கிருந்தவர்கள் உயிரோடு
கொளுத்தப்படுகின்றனர்.


இது பற்றி எஸ்.ஐ.டி என்ன சொல்லியுள்ளது தெரியுமா?


பத்தாயிரம் பேர் கும்பலாய் தாக்கிய போது தற்காப்பிற்காக
அவர் வானில் துப்பாக்கியில் சுட்டார் என்று முதலில் சொன்ன
எஸ்.ஐ.டி பிறகு அப்படியே பல்டி அடித்து விட்டது.

அவர் துப்பாக்கியால் வானில் சுட்டதால் கோபமான கும்பல்
அத்தனை பேரையும் உயிரோடும் கொளுத்தி விட்டதாம்.

பத்தாயிரம் பேர் சூழ்ந்து கொண்டு கல்லால் எறிவார்களாம்,
காவல்துறை கண்டு கொள்ளாதாம். முதல்வர் ரசித்துக்
கொண்டிருப்பாராம். தற்காப்பிற்காக அவர் வானில் 
சுடாவிட்டாலும் அக்கும்பல் நிச்சயம் அவரை கொலை
செய்திருக்கும். 

காவல்துறை ஏன் உதவிக்கு வரவில்லை, அதன் பின் 
நடந்த சதி என்ன என்றெல்லாம் பேசாத எஸ்.ஐ.டி 
இறந்து போன மனிதனையே குற்றவாளியாக்கி விட்டது.

இதை விட எஸ்.ஐ.டி வேறு ஒன்று செய்திருக்கலாம்.

 குஜராத்தில் கலவரமே நடக்கவில்லை. எலலா முஸ்லீம்களும் தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார்கள்  என்று
அறிக்கை கொடுத்து விட்டு மோடியிடம் இன்னும் சில
எலும்புத்துண்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கலாம்.




23 comments:

  1. unmai......neer manithan

    ReplyDelete
  2. Godhra train burning was also a suicide? If Modi did it, I would support it. Every action has equal and opposite reaction.

    Oh then ask about the babri masjid demolition.
    You want to know how many temples are destroyed every year in Malaysia, a quasi-muslim country?

    Talk about human rights to fanatically facist muslims.

    ReplyDelete
  3. நீங்கள் போட்டிருக்கும் படத்தில் இருப்பது கோத்ரா ரயிலில் தற்கொலை செய்துகொண்ட இந்து தீவிரவாதிகளின் படம் போல் இருக்கிறது.

    ReplyDelete
  4. நடுநிலையுடன் உண்மைகளை வெளிகொண்டு வரும் உங்களைப்போன்ற நல்லுள்ளங்களுக்கு கண்ணீருடன் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

    ReplyDelete
  5. //குஜராத்தில் கலவரமே நடக்கவில்லை. எலலா முஸ்லீம்களும் தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார்கள் என்று
    அறிக்கை கொடுத்து விட்டு மோடியிடம் இன்னும் சில
    எலும்புத்துண்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கலாம்.//

    சிந்திக்க வைத்த வார்த்தைகள்.

    ReplyDelete
  6. ஸலாம் சகோ.ராமன்,
    //எஸ்.ஐ.டி பிறகு அப்படியே பல்டி அடித்து விட்டது.//---உண்மை சகோ..! முதலில் சொன்ன விஷயங்கள் வேறு. இப்போது சொல்வது வேறு. அடித்த பல்டி அநீதி..! இடையில் என்ன நடந்திருக்கும் என்று சிறு குழந்தையும் ஊகிக்கும்..! உண்மையை பதிவிட்டு உரக்க உரைத்தமைக்கு மிக்க நன்றி சகோ.ராமன்..!

    ReplyDelete
  7. குஜராத் முஸ்லீம்களுக்கு அழும் உங்கள் சிபிஎம் எருமைகள் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட ஆதரவை இந்திய அரசுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் தொடர்ந்து வழங்குவதேன்?

    ReplyDelete
  8. //// இதை விட எஸ்.ஐ.டி வேறு ஒன்று செய்திருக்கலாம்.

    குஜராத்தில் கலவரமே நடக்கவில்லை. எலலா முஸ்லீம்களும் தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார்கள் என்று
    அறிக்கை கொடுத்து விட்டு மோடியிடம் இன்னும் சில
    எலும்புத்துண்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கலாம்.
    /////

    it is a India. We are all Indians. Vekkakkedu

    M.Syed

    ReplyDelete
  9. கோத்ராவில் என்ன சமரச சமபந்தியா நடைபெற்றது?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. வருங்கால இந்தியாவை கட்டமைக்க இவரைப் போல இரும்பு மனிதரால் தான் இயலும் என்று இந்துத்துவ பாஸிஸ சக்திகள் உரத்து பொய்மைகளை தனது ஊடகங்களில் பரப்பி வரும் வேளையில், நீங்கள் மோடியை சாடியிருப்பது இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இன்னமும் நம்பிக்கையும் தெம்பையும் வழங்கும். இரண்டாயிரம் இந்திய முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்த நரேந்திர மோதியின் செயலை நாம் எளிதாக கடந்து சென்று விட்டால், இந்த நாட்டில் நீதி என்று ஒன்று இருக்குதா?? என்று எண்ண தோன்றும். பத்து வருடமாக வழக்கு இழுத்துக்கொண்டு தான் செல்கிறது. இசான் ஜாப்ரியின் மனைவியும் மூப்பின் காரணமாக சோர்ந்து விட்டார். மோடி தண்டிக்கப்படாவிடில் இந்த நாட்டில் , மத வெறியுணர்வை தூண்டி விட்டு லட்சோபலட்ச மக்களை தன் வசம் கொண்டிருப்பவர்கள் எதையும் செய்யலாம் என்ற நிலை உருவாகிவிடும்.

    நீங்கள் தலைப்பிட்டதைப் போல், இன்னும் சில வருடங்களில் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் பள்ளிகளில் "குஜராத்தில் கலவரமே நடக்கவில்லை, எல்லா முஸ்லிம்களும் தற்கொலை செய்து கொண்டு தான் செத்தார்கள்" என்று வரலாற்றை எழுதுவார்கள்.

    ReplyDelete
  11. I find my comment missing. So you wont accept contrary views? Fantastic. If you find my comment offensive just because it was not supportive of your views, your blog itself is as offensive as mine. Shame on you man.

    ReplyDelete
  12. அருமையான பதிவு சார். அருமையாக முடித்திருக்கிறீர்கள். இது போன்ற தீர்ப்புகளால் சிறுபான்மையினர்களுக்கு இந்திய சட்டம் நீதியின் மீது உள்ள நம்பிக்கை போய்க்கொண்டே இருக்கிறது. இது போன்ற தீர்ப்புகள் தான் சிலர் வேறு எதுவும் செய்வதறியாது தீவரவாதத்தை கயிலெடுப்பதர்க்கு காரணாமகிவிடுகிறது. மனிதர்களின் நீதி பொய்த்தாலும் இறைவனின் நீது மீது நம்பிக்கை உள்ளது. அவன் நின்று தீர்ப்பு அழிப்பான்.

    உங்கள் பதிவிற்கு நன்றிகள்.!

    ReplyDelete
  13. ரயிலில் சென்று கொண்டிருந்த கரசேவகர்கள் எப்படி இறந்தார்கள்? அதை மட்டும் வசதியாக மறந்து விடுங்கள்.

    ReplyDelete
  14. பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி.
    கோத்ராவில் நடந்தது தவறு. அதைச்செய்தவர்கள்
    யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமே தவிர, அந்த இனமே அழிக்கப்பட வேண்டும் என்று கருதுவது பாசிஸம். சங் பரிவாரக் கும்பல் பாசிஸ்க் கும்பல், சகிப்புத்தன்மை அற்றது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றீர்கள்.

    கோத்ரா சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பியுள்ள பானர்ஜி கமிஷன் அறிக்கை பற்றி பரிவாரங்கள் பேசுவதே இல்லையே ஏன்?

    பதட்டத்தை உருவாக்க இந்துக் கோயில்களை அசிங்கப்படுத்தும் வேலையை ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் இப்போதும் செய்து கொண்டுதானே இருக்கின்றன!

    இலங்கைப் பிரச்சினையில் சி.பி.எம். நிலை தெளிவானது. அங்கேயுள்ள தமிழர்கள் மறு வாழ்வு பெற வேண்டும், அவர்கள் சம உரிமை பெற வேண்டும் என்பதுதான்.

    மற்ற கட்சிகள் பச்சோந்திகளாய் இருப்பது பற்றி
    அனானியின் வாய் திறக்காதா?

    மேலும் நேற்று தொழிற்சங்கப் பணிக்காக பண்ருட்டி
    போய் விட்டு, அதிகாலை 2 மணிக்கு வந்தேன். ஆகவே அனைத்து பின்னூட்டங்களையும் இப்போதுதான் வெளியிட்டேன்.

    அனானி, கம்யூனிஸ்டுகள் ஜனநாயகத்தை, மாற்றுக் கருத்தை மதிப்பவர்கள். மாற்றுக் கருத்தை இருட்டடிப்ப செய்யும் இழி குணம் எங்களுக்குக் கிடையாது. ஆனால் நீங்கள் நாகரீகத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

    நிறைவாக, இந்தியாவிற்கு இழிவைத் தேடித் தந்தது குஜராத் கலவரம். அதற்குக் காரணமானவர்கள்
    கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  15. //
    @ dondu(#11168674346665545885)

    கோத்ராவில் என்ன சமரச சமபந்தியா நடைபெற்றது?

    @ M.Mani

    ரயிலில் சென்று கொண்டிருந்த கரசேவகர்கள் எப்படி இறந்தார்கள்? அதை மட்டும் வசதியாக மறந்து விடுங்கள்.
    //

    கோத்ரா சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை அப்புறம் ஆராயலாம். ஆனால், அரசு என்பது பயங்கரவாதத்தை தடுக்க வேண்டுமா அல்லது தூண்டவேண்டுமா? மோடி என்ற அந்த முதலமைச்சர் குஜராத்தில் உள்ள ஹிந்து, முஸ்லிம், ஜைனர், சீக்கியர் மற்றும் அனைவருக்கும் சமமான முதலமைச்சர் தானா அல்லது ஒரு குறிப்பிட்ட ஹிந்துக்களுக்கு மட்டும் முதலமைச்சரா? அந்த கலவரத்தை முளையிலேயே கிள்ளியிருக்க வேண்டாமா? மாநில உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது, கோத்ரா ரயில் எரிப்பை தடுத்திருக்க வேண்டாமா? நாட்டிலேயே மிகப்பெரும் கலவரம் நடக்கவிருப்பதை கண்டறிய முடியாத கையாலாகாத அரசாங்கமா அல்லது கண்டறிந்தும் செயல்படமுடியாத முடமான அரசாங்கமா அல்லது ரயில் எரித்து அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றுகுவிக்க திட்டமிட்டதே அரசாங்கமா?

    ReplyDelete
  16. தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் முஸ்லிம் மத வெறியர்களின் கொட்டம் அடங்கும்.
    குஜராத் கலவரம் நடக்காமல் இருந்திருந்தால் இன்னுமும் பல கோத்ர சம்பவங்கள் நடந்து இருக்கும். ஏன் கடந்த 10 வருடங்களில் கோத்ர போன்ற ஒரு சம்பவம் குஜராத்தில் நடக்க வில்லை. ஏன் என்றல் பயம். மறுபடியும் ஹிந்து மேல் கை வைத்தால், மோடி அடிக்கும் அடி பலமாக இருக்கும் என்ற பயம்.
    இனிமேல் ஏதாவது ஒரு முஸ்லிம் மத வெறி பிடித்த முஸ்லிம் தீவரவாதிக்கு உதவி பண்ணுவான் ? கண்டிப்பாய் பண்ண மாட்டான், அந்த பயம் குஜராத்தில் விதைக்க பட்டு உள்ளது.

    ReplyDelete
  17. அன்பின் சகோதரர் ராமன்,
    இந்த நாட்டில் வாழுகின்ற பெரும்பாலான இஸ்லாமியர்களின் எண்ணவோட்டங்களை பிரதிபலிக்கும் ஒரு பதிவை வெளியிட்டமைக்காக உங்களை வாழ்த்துகிறேன் சகோதரரே. இங்கே பதிவிற்கு எதிராக கேள்வி கேட்டவர்கள் (பெரியவர் டோண்டு உட்பட) கோத்ரா இரயில் எரிப்பின் எதிர்வினை தான் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைகள் என்று சொல்லுகின்றனர். அவர்கள் தங்கள் கருத்தில் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்.

    கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்களால் செய்யப்படவில்லை என்று பானர்ஜி கமிஷன் தெளிவுபடுத்தியது.அதை ஏன் வசதியாக மறைக்கிறீர்கள் டோண்டு சார்? அது மட்டுமில்லாது தெஹல்கா புலனாய்வு வீடியோவும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் யாரால் நிகழ்த்தப்பட்டது என்பதை கோடிட்டு காட்டியது. (ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தங்களின் அலுவலகத்திற்கு தாங்களே வெடிகுண்டு வைத்து கொள்ள கூடிய கொடூர மனப்பான்மை கொண்டவர்கள் என்பதை தென்காசி இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு சம்பவத்தின் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளலாம்).

    ReplyDelete
  18. கோவை குண்டுவெடிப்பு சம்பவம் எதனுடைய எதிர்வினை என்று இங்கே பின்னூட்டம் போட்ட டோண்டு உட்பட அனைவருக்கும் தெரியுமே? கோவையில் நவம்பரில் 18 முஸ்லிம்கள் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டதன் எதிர்வினை என்று தானே கோவை குண்டு வெடிப்பின் முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் சரியான ஒன்று இவர்கள் சொல்வார்களா? ஆனால் ஒரு முஸ்லிமும் கோவை குண்டுவெடிப்பை ஆதரிக்கவில்லையே. இந்த இந்துத்துவாக்கள் போன்று கொடூர மனம் கொண்டவர்களாக நாங்கள் இல்லையே. குண்டுவெடிப்பு எதிர்வினை என்றாலும் தவறு என்று தானே சொன்னோம். அதற்காக நீதிமன்றம் வழங்கிய தண்டனையை குற்றவாளிகள் அனுபவிக்க வேண்டும் என்று தானே சொல்கிறோம்.

    மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் எதனுடைய எதிர்வினை தெரியுமா சகோதரர்களே? பாபர் மஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து முஸ்லிம்கள் மீது பம்பாயில் இந்துத்துவாக்கள் நிகழ்த்திய கலவரத்திற்கு எதிர்வினை தானே. இந்த குண்டுவெடிப்பையும் எதிர்வினை என்பதற்காக நாங்கள் ஆதரிக்கவில்லையே. குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அனைவரும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தானே சொன்னோம் நாங்கள்.

    ReplyDelete
  19. ஆனால் இவ்விரண்டு குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் தண்டனையை வழங்கி விட்டது. ஆனால் இவ்விரண்டு குண்டுவெடிப்புகளுக்கும் காரணமாக அமைந்த கோவை நவம்பர் கலவரத்தில் ஈடுபட்ட இந்துத்துவாக்களுக்கு எந்த ஒரு தண்டனையும் வழங்கவில்லையே இந்த நீதிமன்றங்கள்? மும்பையின் தெருக்களில் முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டிய சிவசேனா குண்டர்களுக்கும் அதற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர் என்று ஸ்ரீகிருஷ்ணா கமிசனால் குற்றம் சாட்டப்பட்ட பால்தாக்கரேவிற்கும் என்ன தண்டனையை இந்த நீதிமன்றங்கள் வழங்கியது? ஆக முஸ்லிம்களின் உயிரை பறித்தால் அது நீதிமன்றங்களின் பார்வையில் தவறே இல்லை என்று தானே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.

    எனவே இந்துத்துவாக்கள் போன்று கொடூர மனம் படைத்தவர்களாக இல்லாமலும், நீதி மறுக்கப்பட்ட போதும் மறுமையில் அவர்களுக்கான தண்டனைகள் படைத்த இறைவனிடம் உண்டு என்று நம்பி வாழும் எங்களுக்கு உங்களை போன்றவர்களின் இந்த மாதிரியான பதிவுகள் சிறு ஆறுதலை தரக்கூடியதாக இருக்கிறது சகோதரரே. பொய்கள் ஆட்சி செய்யும் தேசத்தில் உண்மையை உரக்க சொல்வது கூட புரட்சி தான்.

    ReplyDelete
  20. ஆனால் இவ்விரண்டு குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் தண்டனையை வழங்கி விட்டது. ஆனால் இவ்விரண்டு குண்டுவெடிப்புகளுக்கும் காரணமாக அமைந்த கோவை நவம்பர் கலவரத்தில் ஈடுபட்ட இந்துத்துவாக்களுக்கு எந்த ஒரு தண்டனையும் வழங்கவில்லையே இந்த நீதிமன்றங்கள்? மும்பையின் தெருக்களில் முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டிய சிவசேனா குண்டர்களுக்கும் அதற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர் என்று ஸ்ரீகிருஷ்ணா கமிசனால் குற்றம் சாட்டப்பட்ட பால்தாக்கரேவிற்கும் என்ன தண்டனையை இந்த நீதிமன்றங்கள் வழங்கியது? ஆக முஸ்லிம்களின் உயிரை பறித்தால் அது நீதிமன்றங்களின் பார்வையில் தவறே இல்லை என்று தானே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.

    எனவே இந்துத்துவாக்கள் போன்று கொடூர மனம் படைத்தவர்களாக இல்லாமலும், நீதி மறுக்கப்பட்ட போதும் மறுமையில் அவர்களுக்கான தண்டனைகள் படைத்த இறைவனிடம் உண்டு என்று நம்பி வாழும் எங்களுக்கு உங்களை போன்றவர்களின் இந்த மாதிரியான பதிவுகள் சிறு ஆறுதலை தரக்கூடியதாக இருக்கிறது சகோதரரே. பொய்கள் ஆட்சி செய்யும் தேசத்தில் உண்மையை உரக்க சொல்வது கூட புரட்சி தான்.

    ReplyDelete
  21. இந்தக் கலவரம் ஒரு துன்பமான சம்பவம். சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கோத்ராவில் சம்பந்தப்பட்டவர்களும் சரி, அதற்கு பின் தொடர்ந்த கலவரங்களானாலும் சரி.

    இது ஒரு ரிப்போர்ட். அதை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். ஆனால், மோடி குற்றவாளி என்று வரும் ஒரு ரிப்போர்ட்டைத் தவிர வேறு எதையும் நம்ப மாட்டேன் என்று அடம் பிடிக்கும் போலி மதச்சார்பின்மைக் கும்பல்களின் குட்டு வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கு.

    சும்மா கிலுகிலுப்பை காட்டும் வாதங்கள் இவை. எத்தனையோ வருடங்கள் இது போன்ற பல புரளிகளை, பொய்களை சமாளித்து வந்திருப்பவர் மோடி. ஒரே பொய்யை ஆயிரம் தடவை சொன்னால் அது உண்மையாகாது. தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

    இந்துக்களை உயிரோடு கொளுத்திய கொடுமையான நிகழ்வை ஒட்டி நிகழ்ந்த இவ்வளவு பெரிய கலவரத்தை, மூன்றே நாட்களில் கலவரத்தை அடக்கினேன் என்கிறார் மோடி. எந்தக் கலவரம் அரை மணிநேரத்தில் சகஜ நிலைக்குத் திரும்பும் ? சீக்கியர்கள் படுகொலைகள் எத்தனை நாட்கள் நீடித்தன என்பதை சொல்ல முடியுமா ?

    ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் கொடுக்கும் எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு, என் ஜி ஓ க்கள் செய்யும் செட் அப் இவை என்பதை சிறு குழந்தைகள் கூட சொல்லும்.

    மோடி அவர்கள் பிரதமர் பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் என்பது என் கருத்து.

    ReplyDelete
  22. /இலங்கைப் பிரச்சினையில் சி.பி.எம். நிலை தெளிவானது. அங்கேயுள்ள தமிழர்கள் மறு வாழ்வு பெற வேண்டும், அவர்கள் சம உரிமை பெற வேண்டும் என்பதுதான்./

    எப்போதாவது கோஷங்களுக்கு அப்பால், மூளையைப் பயன்படுத்துங்கள். மேலே எழுதியிருப்பது சரிதான். அதற்கான உங்கள் வழிமுறையென்ன? அங்கே எதுவுமே நடைபெறவில்லை என்பதுபோல, ராஜபக்ச அரசினைத் தாங்கிப்பிடிக்கும் வகையிலே வரதராஜன் அண்மையில் விட்ட அறிக்கை என்ன? இந்து ராம் ஸ்ரீலங்கா அரசின் ஊதுகுழலாகத் தொழிற்படுவதென்ன? இதைப் பற்றி எப்போதாவது எழுதியிருக்கின்றீர்களா?

    மற்றைய கட்சிகள் என்ன செய்தன என்பதைக் கேட்பதாலே மட்டும் சிபிஎம் செய்ததென ஆகிவிடுமா?

    ReplyDelete
  23. Peace be upon you brother.

    A neutral analysis. Thanks for sharing. Whether we believe reports or hearsays, we need to put believe in all the mediums that speak about it. If we believe one commission's report and invalidate the other, that showcases our inability to accept the truth, nothing else. And truth will prevail as and always. Thanks for sharing your vies on this regards.

    Peace.

    ReplyDelete