Sunday, May 6, 2012

ஹிட்லராகும் மம்தா பானர்ஜி - அறிவிஜீவிகள் என்ன் செய்யப் போகின்றனர் ?



 மேற்கு வங்கத்தின் செய்திகள் சொல்லும் செய்தி!
எஸ்.கண்ணன்


 

செய்தி 1 : மேற்கு வங்க நூலகங்களில், வங்க மொழிப் பத்திரிகைகளில் சில மட்டுமே வாங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதில் இரண்டு, திரிணா முல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு உரியது. மற்றவை நேரடி யாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மம் தாவை வானளாவ புகழ்கிற பத்திரிகை கள். தடை செய்யப்பட்டவற்றில் அனைத்து ஆங்கிலப் பத்திரிகைகளுடன் சேர்ந்து கணசக்தி, ஆனந்த பஜார் ஆகிய வங்க மொழிப் பத்திரிக்கைகளும் அடங்கும். விமர்சனங்களை சகிக்க முடியாத ஆணவ மனப்பான்மையில் இருந்து வெளியிடப் பட்ட உத்தரவு.


செய்தி 2 : ஏப்ரல் 21 அன்று, மேற்கு வங்க மாநில அரசே நேரடியாக தொலைக்காட்சி சேனல் ஒன்றினையும், அச்சு ஊடகம் ஒன்றினையும், வெளியிட உள்ளது. நல்ல வேளையாக “இனி மேற்கு வங்க மக்கள் இவைகளை மட்டுமே படிக்கவும், பார்க்கவும் வேண்டும்” என்ற உத்தரவு மேற்படிச் செய்தியுடன் இல் லை. மற்ற பத்திரிகைகளைத் தடை செய் கிறோம் என்ற செய்தி இனி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 


செய்தி 3 : திரிணாமுல் காங்கிரஸைச் சார்ந்த ஜோதிப் பிரியா முல்லிக் என்ற மேற்குவங்க மாநில அமைச்சர், இனி மேற்குவங்கத்தில் யாரும் மார்க்சிஸ்ட் கட்சியினர் குடும்பத்தில் திருமண உறவு கொள்ள வேண்டாம் என அறிவித்தார். இது ஆரிய இனத் தூய்மை குறித்தும், அதற்காக இனக்கலப்பு இல்லாத திருமண உறவு குறித்தும் கவலை கொண்ட நாஜிக் கட்சியின் பாசிச ‘ஹிட் லர் மற்றும் கிராமத்து பண்ணையார் களின் கொள் கையை முன் நிறுத்தும் அணுகுமுறை.


செய்தி 4 : நுண் உயிரியல் விஞ்ஞானி பார்த்தோ சாரதி ராய், கொல்கத்தா நகரத் தில் நானோதுங்கா பகுதியில் இருந்த குடிசைப் பகுதிகளை அகற்றியதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். இதை உலக அளவில் புகழ் பெற்ற நோம்சோம்ஸ்கி உள்ளிட்ட பலர் கண்டித்துள்ளனர். இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கும் கடிதம் எழுதியுள் ளனர். 


செய்தி 5 : ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய மகள், தந்தை தாக்கப்படும் போது தடுத்த காரணத்திற்காக, பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார். இது ஏப்ரல் 17 அன்று ‘கொல்கத்தா செய்தி’ எனும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினரிடம் விசா ரித்த பத்திரிகையாளர்களிடம், தாக்கி யவர்கள் குறித்து புலனாய்வு நடத்திக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.


செய்தி 6 : மேற்கு வங்க தொழில் துறை அமைச்சர் பார்த்தோ சட்டர்ஜி, பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திற்கு தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். மத்திய அரசின் சட்டத்தின்படி லாபம் ஈட்டும் துறை ஒன்றிற்கு தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதி தலைவராக இருக்க முடியாது. ஆனால் மாநில மம்தா அரசு இந்த நியமனத்திற்காக சட்டத் திருத்தம் செய்திருப்பதாக தெரிவித்துள் ளார். இப்போது பொது மக்களின் கேள்வி, மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசு எப்படி திருத்தம் செய்ய முடியும் என்ப தாகும். 


செய்தி 7 : முகமூடி அணிந்து செயல் படும் மாவோயிஸ்டுகளுக்கு பொதுமக் கள் துணைபோக வேண்டாம் என்ற மம்தாவின் வேண்டுகோள், கடந்த ஆண்டு இடது முன்னணி ஆட்சியை அகற்ற மாவோயிஸ்டுகளுடன் கரம் கோர்த்திருந்த மம்தாவின் வேண்டு கோள், இது. மாவோயிஸ்டுகளின் தலைவர்கள் தில்லியிலும், கொல்கத்தா விலும், மம்தாவுடன் பயணித்ததை மார்க்சிஸ்ட் கட்சி பலமுறை அம்பலப் படுத்தியுள்ளது. ஆனால் இப்போது ஞானோதயம் கொண்டு நடிப்பதை மக்கள் எப்படி சகித்துக்கொள்வார்கள்.


செய்தி 8 : மாவோயிஸ்டு ஆதர வாளரான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கபிர் சுமன், மம்தாவின் இத்தகைய செயல்களை விமர்சனம் செய்து, பாடல் இயற்றியுள்ளார். மேலும் தான் உள்ளிட்டு கடந்த காலத்தில் மம்தாவை ஆதரித்தது பெரும் தவறு என்பதை ஒப்புக் கொண் டுள்ளார். இது செய்தி 7ன் படி இல்லாமல், மம்தாவிற்கும் மாவோயிஸ்டுகளுக்கு மான அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.


செய்தி 9 : மாநில முதல்வர் மம்தாவை விமர்சிக்கும் கார்ட்டூனை ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா வெளியிட்டார் என்ற காரணத் திற்காக கைது செய்யப்பட்டார். மேற்படி 8 செய்திகளில் தன்னை அக்கால துக் ளக் தர்பாருக்கு இணையாக சித்தரிக்கிற போது, அம்பிகேஷ் மகாபத்ரா வரைந்த கார்ட்டூன் வெளி வந்தது. இந்த செய்தி களின் பின்னணியில் தான் மம்தா அர சினை பலரும் விமர்சித்து வருகின்றனர். “பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்”, என்ற பாரதியின் கூற்று மேற்கு வங்க மாநிலத்தில் மெய்யாகிக் கொண்டிருக்கிறது. கேலிச் சித்திரங்கள் கூடாது, என்று சட்டங்கள் இயற்றி னாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. 

எளிமையானவர், பதவி ஏற்ற பின், ரைட் டர்ஸ் பில்டிங் என்ற மேற்கு வங்க தலை மைச் செயலகத்திற்கு நடந்தே சென்றார், என அதிசயிக்கத்தக்கப் பிறவி போல் மம்தா இந்திய ஊடகங்களால் சித்தரிக் கப்பட்டார். ஆனால் இன்று திரும்பும் திசையெல்லாம் ஊடகங்களாலும், அறிவு ஜீவிகளாலும் விமர்சிக்கப்படு கிறார். மேலும் அறிவு ஜீவிகள் தாங்கள் தவறிழைத்து விட்டதாக வருந்தும் அள விற்கு, ஜனநாயகத்தை அமலாக்கிக் கொண்டிருக்கிறார்.இந்திய ஊடகங்கள் இடது முன்ன ணிக்கு எதிராக, மம்தாவிற்கு பச்சைக் கொடி காட்டியது, முழுக்க முழுக்க தனது ஆளும் வர்க்கப் பாசத்தை வெளிப் படுத்துவதற்கான தன்மையில் ஊடகங் கள் செயல்பட்டது. 


ஆனால் அறிவு ஜீவிகள் ஏன் மம்தாவை ஆதரித்தனர். குறிப்பாக திரை உலகத்தைச் சேர்ந்தோர், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மேற்கு வங்க இடது முன்னணிக்கு எதிராக, மம்தா விற்கு ஆதரவாக வரிந்து கட்டி செயலாற் றியது அறிவாளித்தனத்தின் வெளிப்பாடு அல்ல. மாறாக அறிவாளிகள் ஆளும் வர்க் கத்திற்கு துணை போனதன் வெளிப்பாடு. மேற்கு வங்க இடது முன்னணிக்கு எதி ரான பிரச்சாரத்தில் மகாஸ்வேதா தேவி போன்ற எழுத்தாளர்கள், மம்தாவின் குணநலன்கள் தெரியாததனால் ஈடுபட வில்லை, தெரிந்தே ஈடுபட்டார் என்பதே உண்மை. 

 திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் கர்ப்பப் பையில் இருந்து உரு வானது என்பதை மறுக்க முடியாது. 1975 கால கட்டத்தில், அவசரகால சட்டங்கள் மூலம் ஜனநாயகத்தை புதைக்க முயற்சி செய்ததை அறிவார்கள். மேற்குவங்கத் தில் சித்தார்த்த சங்கர் ரேயின் ஆட்சி அன்று அமலில் இருந்தது. அக்காலத் தில் இடது முன்னணி ஊழியர்களைக் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் களைக் குறி வைத்து கொலை செய்தனர். 2000க்கும் அதிகமான ஊழியர்களைக் களப்பலி கொண்ட வெறி அன்றைய காங் கிரஸ் தலைமையிலான ஆட்சியிடம் இருந்தது. இந்த இழிவான கொலைச் செயலுக்கு அன்று மார்க்சிய அதிதீவிரம் பேசியவர்களும் உடந்தையாக இருந்தனர். அன்றைய அரைப்பாசிச ஆட்சியை, மகா ஸ்வேதா தேவி மற்றும் சில இடது அதிதீவிர சிந்தனையாளர்கள், பார்த்தவர் கள்தான். கடந்த கால வரலாற்றை அறிந்த இந்த இடது அதிதீவிர அறிவுஜீவி கள் தவறிழைத்து விட்டதாக புலம்புவது, ஏற்புடையதாக இல்லை. அன்று, காங் கிரஸ் ஆட்சியில் ஜனநாயகத்தைப் பறித் தார்கள். இன்று ஜனநாயக ஆட்சியை கீழிறக்க மம்தாவுடன் கூட்டுசேர்ந்தனர். 


இத்தகைய அறிவு ஜீவிகள் செய்திருப்பது, சாதாரண மனிதர்கள் செய்ததைப் போன்ற சாதாரணத் தவறல்ல. ஐந் நூறுக்கும் அதிகமான மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள், மம்தா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடனேயே கொல்லப் பட்டனர். ஜனநாயக ரீதியில் செயல் பட்டு வந்த அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. அப் போது இந்த அறிவாளிகளின் கண் களுக்கு, புதைக்கப் படும் ஜனநாயகம் மற்றும் மனித உயிர்கள் தெரியவில்லை.எப்படி இருந்தாலும் மம்தா தான் ஒரு ஜனநாயக விரோதி என்பதை அம்பலப் படுத்தியுள்ளார். கூடவே மாவோயிஸ்டுகள் எனத் தங்களைக் கூறிக் கொண்டவர்களும், தாங்கள் மார்க் சிய விரோதிகள் என்பதை அம்பலமாகி இருக்கிறார்கள். இப்போதாவது ஜனநாயக சக்திகள், மக்கள் சக்தியை அராஜகவாதி களுக்கு எதிராகத் திரட்டுவதும், மேற்கு வங்க இடது சாரிகளுக்கு நேசக்கரம் நீட்டுவதும் அவசியம். இல்லையென் றால் பாஸ்டர் நீல் மார்ட்டின் கவிதையின் இறுதி வரிகளான “ இறுதியில் என்னைத் தேடி வந்தார்கள், யாருமே இல்லை ஏன் என்று கேட்பதற்கு” என்பது உண்மை யாகி விடும்.

 நன்றி 

தீக்கதிர்  நாளிதழ் 

No comments:

Post a Comment