"நெல் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு தனியாக ஊக்கத் தொகை அளிப்பதால் நெல் உற்பத்தி அதிகமாகிறது. அதனால் பல பிரச்சினைகள் வருகிறது. எனவே நெல்லுக்கு மாநில அரசு தரும் ஊக்கத் தொகையை நிறுத்த வேண்டும்"
என்று நிதியமைச்சகம் தமிழ்நாட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியதாக முதல்வர் குற்றம் சுமத்தினார்.
அப்படியெல்லாம் நான் ஒன்றும் எழுதவில்லை என்று நிர்மலா அம்மையார் சாதித்தார்.
நிதியமைச்சகம் அனுப்பிய கடிதத்தை முதல்வர் பகிரங்கப் படுத்தி விட்டார்.
இந்த கடிதம் நெல் மற்றும் கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மீது வன்மத்தை கக்குகிறது.
நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதால் அதிக தண்ணீர் செலவாகிறது, உரப்பயன்பாடு அதிகரிக்கிறது. மண்ணே நாசமாகிறது, வைக்கோலை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்றெல்லாம் அடுக்கி விட்டு பருப்பு பயிரிடு, பருத்தி நடு, எண்ணெய் வித்துக்கள் போடு என்று உபதேசிக்கிறது அக்கடிதம்.
வெங்காயம், பூண்டு சாப்பிட மாட்டேன், அதனால் அவற்றின் விலை உயர்வு பற்றி தெரியாது என்று நிர்மலா அம்மையாருக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்? எந்த மண்ணில் எந்த காலத்தை என்ன பயிரிடுவது என்று விவசாயிகளுக்கு தெரியுமா? இல்லை இந்த மக்கு மந்திரிக்கு தெரியுமா?
கோதுமை, நெல் பயிரிடாவிட்டால் உணவுக்கு மக்கள் என்ன செய்வார்கள்? பருத்தியை உண்ண முடியுமா? ரொட்டியோ, சோறோ இல்லாமல் பருப்பை வைத்து என்ன செய்ய?
விவசாயிகள் பற்றியோ மக்கள் பற்றியோ கவலையில்லாத மக்கு மந்திரி நிர்மல, தன் அமைச்சகம் அனுப்பிய கடிதத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? தன் அமைச்சகம் அனுப்பிய கடிதமே தனக்கு தெரியாமல் அனுப்பப்பட்டு விட்டது என்று மக்குத்தனமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பாரா அல்லது வழக்கம் போல ஆணவமாக குரைப்பாரா?


No comments:
Post a Comment