டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த தீ விபத்தின் போது சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் எரிந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.
அவரை இடை நீக்கம் செய்வதற்குப் பதிலாக அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றினார்கள்.
உச்ச நீதிமன்றம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது. அவரை பதவி நீக்கம் செய்யும் நடைமுறையை நாடாளுமன்றம் தொடங்கியது. இதில் ஏதோ சிக்கல் வர துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தாங்கர் பதவி விலகினார். அந்த மர்மம் என்ன என்பதை இன்று வரை தெரியவில்லை.
இப்போது தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தன் ஆத்திரத்தையும் வருத்தத்தையும் விவரித்து ஜனாதிபதிக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதால் காரணங்களை தெரிவிக்கவில்லை என்று அக்கடிதத்தில் எழுதியுள்ளாராம்.
இது அவர் தன்னை ஒரு புனிதனாக காண்பித்துக் கொள்ளும் முயற்சி. எந்த கேள்விக்கும் விசாரணைக்கும் உட்படாமல் தப்பித்துக் கொள்வதற்கான உத்தி.
ஜனாதிபதி இந்த ராஜினாமாவை நிராகரிக்க வேண்டும். ஏற்றுக் கொண்டால் யஷ்வந்த் வர்மாவின் புரவலர்கள் மோடி வகையறாக்கள், மோகன் பகவத் கூட்டத்தினர் என்பது தெளிவாகும்.

No comments:
Post a Comment