Wednesday, April 15, 2026

மோடிக்கு வாரிசாகும் தகுதியுள்ள மோசடிப்பேர்வழி

 


கீழேயுள்ள புகைப்படத்தில் உள்ள முகத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.


ராஜ்யசபாவிற்கு துரத்தப்பட்ட நிதீஷ்குமாருக்குப் பதிலாக பீகார் முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ள சாம்ராட் சவுத்ரி.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டரேட் பட்டம் பெற்றதாக,

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றதாக இவர் தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினை என்னவென்றால் ஐயா, பத்தாம் க்ளாஸே பாஸ் செய்யவில்லை. 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிஜமாகவே இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்களா? எதற்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.

பனிரெண்டாம் வகுப்பு கூட படிக்காதவர்கள், திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பட்டப்படிப்பு  படிக்க தொடங்குவதற்கு முன்பாக ஒரு அடிப்படை வகுப்பில் பங்கேற்க வேண்டும். அதில் கலந்து கொண்டது மட்டுமே இவரது உயர் தகுதி.

எம்.ஏ (எண்டயர் பொலிட்டிக்கல் சைன்ஸ்) படித்ததாக கதை விடும் மோடிக்கு பொருத்தமான வாரிசு இவர்தானே!

பிரதமராக, முதல்வராக படிப்பு அவசியமா என்ற கேள்வியோடு சில மேதாவிகள் வருவார்கள். 

மோடியும் சௌத்ரியும் படிக்காதது பிரச்சினை இல்லை. படித்ததாக பொய் சொன்னதுதான் பிரச்சினை. 

No comments:

Post a Comment