நாய் வால் நிமிராது என்பதை புளிச்ச மாவு ஆஜான் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
அஞ்சலி குறிப்பு மூலம் இறந்தவரை அசிங்கப்படுத்துவது என்பது அவரது இயல்பாகி விட்டது.
சமீபத்தில் மறைந்த காலச்சுவடு பதிப்பாசிரியர் அரவிந்தன் பற்றி அவருடன் பழகிய எண்ணற்றவர்கள் தங்கள் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
ஜெயமோகன் மட்டும் வழக்கம் போல தன் வன்மத்தை கொட்டியுள்ளார். அவர் எழுதியதை படியுங்கள்.
தார்ஷியா என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிக்கொண்டிருந்த டி.ஐ.அரவிந்தனின் தந்தைதான் எனக்கு முதலில் அறிமுகம். அதன்பின்னர் அன்று மாணவராக இருந்த அவரை அறிமுகம் செய்துகொண்டேன். அச்சகங்களில் வெட்டிப்போட்டபின் மிஞ்சும் விளிம்புத்தாள்களை சேகரித்து குறிப்பேடுகள் தயாரிப்பவர்களிடம் விற்கும் தொழிலை அன்று செய்துகொண்டிருந்தார். அவர் கடுமையான உடலுழைப்புக்கு இயலாத சிறிய உடற்குறைபாடு கொண்டிருந்தாலும் அன்று மிகக்கடினமான அப்பணியைச் செய்யவேண்டியிருந்ததது.
நான் தொடர்பு கொண்டிருந்த விஜயபாரதம் அச்சகத்திற்கு காகிதம் சேகரிக்கும் பொருட்டு வந்தவர் நான் புதுமைப்பித்தனை கல்கியுடன் ஒப்பிட்டு எழுதிய ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு என்னிடம் உரையாடினார். அவர் கல்கியை அப்போதுதான் வாசித்திருந்தார். ஒரு நாள் சில கதைகளை என்னிடம் அளித்தார். அவற்றை செம்மை செய்து வெளியிட்டேன். அதன்பின் அவர் இந்தியா டுடேயில் அன்றைய நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார்.
ஓர் ஐந்தாண்டுக்காலம் அவருடன் அணுக்கமான நட்பும் உரையாடலும் இருந்தது. புதிய காலச்சுவடு அணியுடன் அவர் இணைந்த பின் அந்த தொடர்பு இல்லாமலாகி, என் மேல் அவர் முழுமையான ஓர் எதிர்மனநிலையில் நீடித்தார். எப்போதாவது ரயில் நிலையங்களில் தற்செயலாகச் சந்தித்துக்கொண்டால் ஒரு சில சொற்களை பெரும்பாலும் நானே சென்று பேசுவதுடன் தொடர்பு நின்றது. சென்ற டிசம்பரில் ரயிலில் சந்தித்தபோது நாகர்கோயிலில் இருப்பதாகச் சொன்னார்.
அவருடைய மறைவு திகைப்பையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இத்தகைய தருணங்களில் மிக இளைஞராக அவரைச் சந்தித்த முகம்தான் நினைவிலெழுகிறது. அஞ்சலி.
இறந்தவரின் பொருளாதார நிலை,
உடல் குறைபாடு,
அவர்களின் வாசிப்பனுபவம் பற்றிய அலட்சியம்,
அவர்களுக்கு தான் செய்த உதவிகள்,
அடுத்தவர் உதவியில்லாமல் அவர்கள் முன்னேற முடியாது,
அவர்கள் பகைவர்களாக இருப்பினும் தான் ரொம்ப நல்லவன் என்று காண்பிப்பது.
இவையெல்லாம் அவரது அஞ்சலி வன்மக் குறிப்புகளில் வழக்கமாக இருக்கும். அரவிந்தனுக்கான குறிப்பிலும் இதெல்லாம் இருக்கிறது. அவற்றை அடிக் கோடிட்டுள்ளேன்.
இன்னும் கூட ஒரு மோசமான விஷயத்தை முதலில் எழுதியிருந்தார். பிறகு அதனை மட்டும் நீக்கி விட்டார். மற்ற விஷமெல்லாம் அப்படியேதான் இருக்கிறது.
ஜெயமோகனை என்ன சொல்வது?
ஜெயமோகன் நீடூழி வாழட்டும். மற்ற இலக்கியவாதிகள், பதிப்பாளர்கள் ஆகியோரெல்லாம் ஜெயமோகனை விடவும் கூடுதல் காலம் வாழட்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஜெமோ அஞ்சலி குறிப்பு எழுதும் வாய்ப்பு கிடைக்காது.
பிகு 1 : அசோகமித்திரனை பேச அருகதையற்ற ஜெமோ - நாளை
பிகு 2 : ஜெயமோகனை விமர்சிப்பவர்களை வெட்டி ஆபீசர்கள் என்று சொல்கிறார் கவிஞர் போகன் சங்கர். அவரைப் போல முட்டு கொடுப்பவர்களை முட்டாள் ஆபீசர்கள் என்று சொல்லலாமா?

This comment has been removed by a blog administrator.
ReplyDelete