இன்னும் நான்கு நாட்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து விடும்.
இரண்டு தேசிய கட்சிகளும் இன்னும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி அடம் பிடித்து அரசியல் செய்து அடுத்தவர்கள் பங்கையும் பெற்று 28 தொகுதிகளை பெற்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பின்னும் அவர்களால் வேட்பாளர்களை இறுதிப்படுத்த முடியவில்லை. அவர்கள் எப்போது முடிவு செய்து எப்போது அறிவித்து எப்போது உட்கட்சி குழப்பங்களை சரி செய்து எப்போது பிரச்சாரத்திற்கு செல்வார்கள்/
பாஜகவும் அதன் குழப்பங்களிலிருந்து வெளியே வர முடியவில்லை. அது பற்றி நமக்கு கவலையில்லை. நாசமாகப் போகட்டும். அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது.
ஆனால் காங்கிரஸ் பின்னடைவு பெற்றால் அதன் தாக்கம் கூட்டணியை பாதிக்கும்.
ஒரு மாதமாகியும் வேட்பாளர்களை முடிவு செய்ய முடியவில்லையென்றால் அந்த கட்சிக்கு எதற்கு தேர்தல்? 28 தொகுதிகள்? அதிகாரத்தில் பங்கு?

No comments:
Post a Comment