நாடாளுமன்றத்தில் இடை நீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி க்களின் எண்ணிக்கை இன்று 140 ஆக உயர்ந்து விட்டது.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோருகிற எதிர்க்கட்சிகளை வெளியேற்றி விட்டு, வண்ணப்புகை உமிழும் கருவியை கால் செருப்பில் மறைத்துக் கொண்டு வந்தவர்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளே வர பாஸ் கொடுத்த பாஜக எம்.பி யை பத்திரமாக நாடாளுமன்றத்துக்கு உள்ளே வைத்து பாதுகாக்கிறார்கள் லோக் சபா சபாநாயகரும் ராஜ்யசபா தலைவருமான துணை ஜனாதிபதியும்.
இந்த இடை நீக்க நடவடிக்கை மூலம் நாடாளுமன்றத்தின் புனிதத்தை பாதுகாக்கிறார்களாம். அப்படியானால் நாடாளுமன்றத்தில் போடப்பட்டது என்ன சாம்பிராணி புகையா என்று மிகச்சரியாகவே மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி தோழர் சு.வெ கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தில் என்ன செய்யப் போகிறார்கள்?
ஆளில்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறாய் என்று காமெடியாக அணுகும் பிரச்சினை அல்ல இது.
பொதுவாகவே நாடாளுமன்ற ஜனநாயகத்தை எச்.ராசாவின் ஐகோர்ட்டாக மதிப்பவர்கள் இந்த சங்கி ஆட்சியாளர்கள்.
எதிர்க்கட்சிகளே இல்லாத இந்த காலகட்டத்தில் எல்லா பிற்போக்கு, மக்கள் விரோத மசோதாக்களையும் அறிமுகம் செய்து கொஞ்சம் கூட எதிர்ப்பே இல்லாமல் சட்டமாக்குவதற்கான வாய்ப்பு நிச்சயம் உள்ளது.
நாடாளுமன்றத்தில் நடக்கப்போகும் அநியாயங்களை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. அதுவும் ஒற்றுமையாக . . .
No comments:
Post a Comment