Friday, December 22, 2023

சூல் தர்மன் அதர்மம் மாலனுக்காகவா?

 


திரைக்கலைஞர் கவிதா பாரதி அவர்களின் முக நூல் பதிவை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அதை படிப்பதற்கு முன்பாக பொறாமையில் காமெடியா தர்மன் ஐயா என்ற பதிவை மீண்டும் ஒரு முறை படித்து விடுங்கள். 

இப்போது தோழர் கவிதா பாரதியின் பதிவை படியுங்கள். மாலனுக்காக சோ.தர்மன் காய் நகர்த்தியது புரியும். சங்கிகளின் அயோக்கியத்தனத்திற்கு இதுவும் ஒரு சான்று.

தேவிபாரதி நூலை சாகித்திய விருதுக்குத் தேர்ந்தெடுத்த
நடுவர்குழுக்கு வாழ்த்தும்,நன்றியும்..

கீழே உள்ளது சாகித்ய அகாதமியின் விருதுப்பரிசீலனையில் இருந்த இறுதிப்பட்டியல்..

இதில் நமக்கு விருப்பமான தோழர்கள் சிலரின் பெயர்களும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி..

ஆனால் அதில்
மாலன் பெயரும் இடம்பெற்றிருப்பது வியப்பாக உள்ளது..



கடந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த நூல்களைப் புறந்தள்ளிவிட்டு பட்டியலில் இடம் பிடிக்குமளவுக்கு   மாலன் எழுதிய அந்த வால்யூம்-1 அம்மாம் பெரிய இலக்கிய வரலாறா..?  இல்லை அவர்தான் அவ்வளவு தரமான இலக்கியவாதியா..

மொழிபெயர்ப்பாளர் என்றவகையில் ஏற்கனவே அவர்பெற்ற சாகித்ய அகாதமி விருதே சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும் உள்ளானது..

சிறந்த எழுத்தாளர் பட்டியலில் வைக்கத்தக்க அளவுக்கு மாலன் எதையும் படைத்துவிடவில்லை..


உண்மையைச் சொன்னால் சுஜாதாவுக்குக்கூடக் கிடைக்காத இலக்கியவாதி அஸ்தஸ்து மாலனுக்கு எப்படிக்கிடைத்தது என்பது கேள்விக்குரியது

தற்போது மாலன் என்பவர் சுமந்த்ராமன், திருப்பதி நாராயணன், கரு.நாகராஜன் வரிசையிலிருக்கிற வலதுசாரி சமூகவலைதளப் பதிவர்.. அதைக்கூட மாலனைக்காட்டிலும் மற்றவர்கள் சுவாரசியமாகச் செய்கிறார்கள்

இருந்தாலும் அவர் இலக்கியவிருதுகளுக்கான பட்டியலில் இருக்கிறார், அல்லது தேர்ந்தெடுக்கும் குழுவில் இருக்கிறார்..
அதாவது எந்தக் கல்யாணம் நடந்தாலும் அதில் புரோகிதராக இருக்கிறார், இல்லையென்றால் புதுமாப்பிள்ளையாக இருக்கிறார்..
வேண்டுமானால்   இந்த இலக்கியலாபி விருது எதாவது இருந்தால் அதற்கு அவரை போட்டியின்றி தேர்வு செய்யலாம்

தேவிபாரதியை சதித்துவிட்டு இரண்டாமிடத்தில் உள்ளவருக்கு விருதை அறிவிக்க வேண்டுமென்று ஒரு கோரிக்கை சூல் கொண்டதே,  
அந்த இரண்டாமிட எழுத்தாளர் மாலன்தான் என்று சந்தேகிக்கிறேன்..

திரைமறைவில் நடந்த அந்தத்திட்டம் அம்பலமாகிவிட்டதால் கைவிடப்பட்டதாக நம்புகிறேன்..
#
இறுதியாக ஒரே ஒரு கேள்வி

சாகித்ய அகாதமியின் பரிசீலனைப்பட்டியல்
யாரால், எந்த அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது? 

பிகு :கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் வாங்கிக் கொண்டிருந்த குமுதம் (அது குப்பை என்றாலும் கூட பழக்கத்தை விட முடியாததால்) இதழை நிறுத்தியதே மாலன் எழுதிய தொடரால் ஏற்பட்ட எரிச்சலால்தான் நிறுத்தினேன். அதற்கெல்லாம் விருது என்றால் அந்த விருதையே  . . . . . (அந்த எழவை வேற எதுக்கு என் வாயால சொல்லிக்கிட்டு . . .)


No comments:

Post a Comment