Thursday, December 7, 2023

இரண்டும் வேண்டாம் = வேலை நடக்கட்டும்.

 


நேற்று வெளியூர் பயணம். திரும்பி வருகையில் முகநூல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்கும் நிலை வந்து விட்டது.

திமுக உடன் பிறப்புக்களின் பதிவுகள் ஒரு மாதிரி . . .

சென்னையில் எல்லா நிவாரணப் பணிகள் முடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதாய் அவர்கள் பதிவுகள்.

சங்கிகளின் பதிவுகள் வேறு மாதிரி . . .

சென்னையில் ஒரு வேளை கூட நடக்கவில்லை. 2015 ல் ஜெயலலிதா ஆட்சிக் காலம் செயல்பட்டது போல இந்த அரசு செயல்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்கள் சென்னை மூழ்கிப் போய் அனைவரும் செத்துப் போய்விடுவார்கள்.  ஆட்டுக்காரனை முதலமைச்சராக்கினால்தான் இதெல்லாம் மாறும்.

இரண்டும் அதீதமானது.

இயல்பு நிலை இன்னும் வரவில்லை என்பதுதான் உண்மை. ஒன்றுமே நடக்கவில்லை என்பதும் சரியானதில்லை.

2015 ஆட்சிக்காலத்தை விட செயல்பாட்டில் முன்னேற்றம் உள்ளது என்பது உண்மை. எழுத்தாளர் இந்துமதி போன்றவர்கள் முதல்வரின் மனைவி மூலம் தான் பெற்ற உதவிகளை விலாவரியாக எழுதி அரசுக்கு சங்கடத்தை உருவாக்காமல் இருந்திருக்கலாம். 

கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, இரண்டு நாட்களில் அது சரியாகி விடும் என்று தலைமைச் செயலாளரே சொல்லியுள்ளார்.

இயல்பு நிலை வந்த பின்பு அதை திமுகவினர் சொன்னால் அதுதான் சரியாக இருக்கும். அப்படி முன் கூட்டியே சொல்வது சில இடங்களில் நிவாரணப்பணிக்கு யாரும் செல்லாமல் இருக்கும் அபாயம் உண்டு.

முகநூலில் அரசை குறை கூறுவதை மட்டுமே பிழைப்பாக கொண்டுள்ள சங்கிகள், நேரடியாக களத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவலாமே! அவர்கள் செய்ய மாட்டார்கள். பொய்களை பரப்ப மட்டுமே அவர்களுக்கு தெரியும். 

முதல்வருக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் ஒன்றுண்டு.

அது 

மாலை . . . 

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. சென்னையில் நடந்த வெள்ளத்துக்கு பிறகு பால் ,தண்ணீர்,கரண்ட் கேட்ட
    மக்களை சங்கிகள் என்று திமுக சொல்கிறது. ஆமாம் சென்னை மக்கள்
    முழுவதுமே சங்கிகள் ஆகிவிட்டார்கள் .

    ReplyDelete