Thursday, December 7, 2023

உங்களையும் சொல்ல வைக்காதீர் முதல்வரே

 

2015 சென்னை வெள்ளத்திற்கு பிறகு 8,ஜனவரி, 2016 அன்று  எழுதிய பதிவு. சென்னையை சரி செய்ய இப்போதும் பல மாவட்டங்களளிலிருந்து தூய்மைப் பணியாளர்கள் வந்துள்ளனர்.

அவர்களையும் புலம்ப வைத்து அந்த அம்மாவை சொன்னது போல உங்களையும் சொல்ல வைக்காதீர்கள் முதல்வரே!

அவர்களில் யாரெல்லாம் தற்காலிக ஊழியர்களோ, அவர்கள் பணிகளை நிரந்தரப்படுத்துங்கள்.

ஆயிரக்கணக்கானவர்கள் உங்களை வாழ்த்துவார்கள். 

படா பேஜாரா போச்சு சார்!




வழக்கமாக எங்கள் சாலையை சுத்தம் செய்யும் துப்புறவுத் தொழிலாளி அந்த தோழர். பல நாட்கள் அவரை பார்க்கவில்லை. இன்றுதான் கண்ணில் பட்டார்.

என்னங்க, கொஞ்ச நாளா காணோமே, எங்க மெட்ராஸ் போயிருந்தீங்களா என்று உரையாடலைத் தொடங்கினேன்.

ஆமாம் சார், ரொம்பவே அவஸ்தையாயிடுச்சு, பதினஞ்சு நாள் பெண்டு நிமித்திட்டாங்க. விடியக் காலயிலே எழுந்து துப்புறவு வேலைக்கு கூட்டிட்டு போயிடுவாங்க, ராத்திரில நிவாரணப் பொருளயெல்லாம் பேக் பண்ண வேற எடத்துக்கு கூட்டிட்டுப் போய்டுவாங்க. தூங்கக் கூட நேரமில்லை என்றார் அவர்.

தங்க வைச்ச இடமெல்லாம் எப்படி இருந்தது?

ஆட்டு மந்தை மாதிரி அடச்சு வைச்சுட்டாங்க. கொசுக்கடி வேற. ஒன்னு ரெண்டு நாள் குளிக்க தண்ணி கூட சரியா வரல.

சாப்பாட்டு வசதியெல்லாம்.

பக்கத்துல எங்க அம்மா ஓட்டல் இருக்கோ, அங்க போய் சாப்பிட்டுக்கோனு சொல்லிட்டாங்க. துட்டு எங்களதுதான்.

சரி, இவ்ளோ கஷ்டப்பட்டீங்களே. எவ்வளவு ரூபா கிடைச்சது?

அத கேக்காத சார், சொன்னா வெட்கக்கேடு. படா பேஜாராப் போச்சு சார்.

பார்த்துக் கொள்ளுங்கள், இதுதான் அம்மா ஆட்சியின் லட்சணம். உழைப்புச் சுரண்டலுக்கு இலக்கணம்.



1 comment:

  1. ராத்திரில,
    பொதுமக்கள் கொடுத்த நிவாரண பொருள பேக் பண்ணி ஸ்டிக்கர் ஓட்ற வேலைய பார்த்தோம் என்று சொல்லியிருப்பார்.

    ReplyDelete