Saturday, October 22, 2022

மானங்கெட்ட பிழைப்பு ஏன் மோடி?

 


பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காக பிறந்தவை என்று சொன்னவர் மோடி. பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம்தான் மோடியின் ஊதாரிச் செலவுகள் செய்யப்படுகின்றன. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான எல்.ஐ.சி யின் மூன்றரை சதவிகித பங்குகள் விற்கப்பட்டன. இரண்டு பொதுத்துறை வங்கிகளும் ஒரு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமும் விற்பனைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏர் இந்தியா அடிமாட்டு விலைக்கு டாடாவிற்கு சமர்ப்பிக்கப் பட்டது.

விமான நிலையங்களின் பராமரிப்பு அதானிக்கு கொடுக்கப்பட்டது. எச்.ஏ.எல். நிறுவனத்திற்குப் பதிலாக பொம்மை ப்ளேன் கூட தயாரித்த அனுபவம் இல்லாத அனில் அம்பானியின் கம்பெனிக்கு ரபேல் விமான ஒப்பந்தம் தரப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் அதானிகளும் அம்பானிகளும் அவர்தம் கூட்டத்தாரும் வாங்கிய கடனெல்லாம் கோடிக்கணக்கில் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இப்படி பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்த படுபாவி மோடி.

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று வாக்குறுதி கொடுத்து நாற்காலியைப் பிடித்த மனிதனின் ஆட்சியில்தான் நாற்பது ஆண்டுகளில் காணாத அளவிற்கு வேலையின்மை விகிதம் உயர்ந்தது. இப்பிரச்சினைக்கு இந்த அற்ப மனிதன் கொடுத்த அற்புதமான தீர்வுதான் “பக்கோடா கடை வைப்பது”

இதெல்லாம் பழசுதானே, இப்போ எதுக்கு மறுபடியும் என்று கேட்கிறீர்களா?

இல்லை. புதிதாக ஒரு அராஜகம் நடக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் புதிதாக பணி நியமனம் பெற்ற ஊழியர்களிடம் இன்று மோடி உரையாற்ற உள்ளார்,

நிர்வாகங்களும் “யெஸ் பாஸ்” என்று தங்கள் விசுவாசத்தைக் காண்பித்து ஊழியர்கள் மோடி பேசுவதை கேட்கும் தண்டனையை கட்டாயமாக்கி உள்ளன, துரதிர்ஷ்டவசமாக எங்கள் நிறுவனம், எங்கள் கோட்டம் உட்பட. எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம் என்பது வேறு விஷயம்.

பொதுத்துறையை அழிக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு மனிதன் பொதுத்துறை நிறுவன ஊழியர்களோடு என்ன பேச முடியும்? பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது?

புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் எல்லாம் பட்டதாரிகள். மோடி போல இல்லாத “எம்.ஏ என்டயர் பொலிட்டிக்கல் சைன்ஸ்” படித்ததாக கதை விடும் தற்குறிகள் அல்ல,

அவர்கள் அனைவரும் இரண்டு தேர்வுகள் எழுதி பணிக்கு தேர்ச்சி பெற்றவர்கள். குஜராத்தில் ரத்த ஆற்றை ஓட வைத்து மக்களை பிளவு படுத்தி 15 லட்சம், 2 கோடி வேலை என்றெல்லாம் ஜூம்லா வாக்குறுதி கொடுத்து அதானியின் ஓசி ப்ளேனில் பறந்து பிரச்சாரம் செய்து வேலையில் சேர்ந்தவர்கள் அல்ல..

மோடியால் அவர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல முடியும்?

உங்கள் நிறுவனத்துக்கு கடுமையாக உழைத்து லாபத்தை பெருக்குங்கள். அப்போதுதான் நான் அவற்றை அடிமாட்டு விலைக்கு என் எஜமானர்களான முதலாளிகளுக்கு விற்பேன் என்று உண்மையை பேச முடியுமா? அவரின் குரங்குக் குளியல் (மன்கி பாத்) தான் நமக்கு தெரியுமே!

பொதுத்துறை நிறுவனங்களை கட்டாயுப்படுத்துவது போல இவரால் எந்த தனியார் நிறுவன ஊழியர்களிடமாவது பேச முடியுமா? இவரின் யோக்கியதை அறிந்த அவர்கள் இவரை கிட்டவே சேர்க்க மாட்டார்கள்.

பின் ஏன் இந்த மானங்கெட்ட  பிழைப்பு மோடி?

உங்களால் சீரழிக்கப்படுகிற பொதுத்துறை நிறுவனங்களை உங்களது விளம்பர மோகத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது அயோக்கியத்தனம் இல்லையா? அதிகார துஷ்பிரயோகம் இல்லையா?

யாரோ தயாரித்த உரையை இவர் டெலிப்ராம்ப்டரில் படிப்பதை காணும் அந்த ஊழியர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள். பிரதமரே எங்களோடு பேசினார் என்ற மாயையில் பலர் மயங்குவார்கள் என்பதும் யதார்த்தம்.

என்ன செய்ய வேண்டும்?

பாஜக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளதே என்று உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் “அந்த இடங்களில் பள்ளிக் கூடங்களை அதிகரிப்பேன்”  என்று கூறினார்.

அது போலத்தான் மோடியின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொழிற்சங்க வகுப்புக்களை விரைவில் எடுக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்களுக்கு உள்ளது. போராடாமல் எதுவும் கிடைக்காது என்ற உண்மையை சமீபத்திய யமஹா தொழிலாளர்களின் இரண்டாவது போராட்டத்தின் (முதல் போராட்டம் குறித்த 

 "மறக்க முடியாத மாலை அது" என்ற எனது அனுபவப் பதிவை இணைப்பின் மூலம் படியுங்கள் 

வெற்றியோடு சேர்த்து சொல்லித்தர வேண்டும்.                                                                                                                                                                

 

No comments:

Post a Comment