Wednesday, October 19, 2022

புரிஞ்சுக்குங்க மேடம்

 


ரூபாய் மதிப்பிழக்கவில்லை. டாலர்தான் வலிமையாகி விட்டது என்ற நிர்மலா அம்மையாரின் மொக்கை விளக்கத்தை அநேகமாக கலாய்க்காதவர்கள் யாருமில்லை.

நான் கொஞ்சம் சீரியஸாக அம்மையாருக்கு விளக்கம் சொல்ல முயற்சிக்கிறேன்.

ரூபாய் மதிப்பு குறைவா? டாலர் மதிப்பு அதிகமா என்பதல்ல பிரச்சினை. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா என்பதுதான் பிரச்சினை.

82 ரூபாய் ஒருவரிடம் இருந்தால்தான் அவரால் அதனை ஒரு டாலராக மாற்ற முடியும்.

நீங்கள் ஒரு சட்டையை டாலர் மதிப்பில் வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அந்த சட்டையின் விலை பத்து டாலர் என்றால் நீங்கள் 820 ரூபாய் கொடுக்க வேண்டும். அதுவே டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என்றால் 650 ரூபாய் செலவழித்தால் போதும்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைவதன் மூலம் நாட்டின் இறக்குமதிச் செலவினம் அதிகமாகும். நம்முடைய அன்னியச் செலாவணி கையிருப்பு குறையும். அது பொருளாதாரத்தில் பாதிப்பை உருவாக்கும். பொருளின் மதிப்பு அதிகரிக்காது. ஆனால் விலை அதிகரிக்கும்.

இது பொருளாதார பால பாடம். இந்த எளிய அடிப்படையைக் கூட புரிந்து கொள்ள முடியாத நீங்கள் எல்லாம் நிதியமைச்சர் என்பது அந்த பதவிக்குத்தான் அசிங்கம்.

ஆனால் என்ன செய்ய?

உங்கள் கட்சியின் அத்தனை பேரும் முட்டாளாக இருக்கையில் நீங்கள் மட்டும் புத்திசாலியாகவா இருக்கப் போகிறீர்கள்!

இதுதான் தேசத்தின் துயரம்.

பிகு: அம்மையார் சொன்னதில் தவறில்லை என்று சில சங்கிகள் விரிவாக, அதே நேரம் படு முட்டாள்தனமாக முட்டு கொடுத்த பதிவுகளை பார்த்தேன். சில அயோக்கியர்கள் தாங்கள் செய்த அயோக்கியத்தனம் அம்பலமானதும் அது போல தாங்கள் செய்யவே இல்லை என்று சாதித்து அடுத்தவர்கள் மேலேயே பழியை திருப்பி விடுவார்கள். அதற்கு சங்கிகளின் முட்டு மேல் என்று தோன்றியது.

No comments:

Post a Comment