மூன்று நாட்கள் முன்பாக கிரிமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் ஒரு பாலத்தின் சில பகுதிகளை உக்ரைன் வெடிகுண்டு வைத்து தகர்த்தது. இது தொடக்கம்தான் என்று உக்ரைன் பாதுகாப்பு ஆலோசகர் ஆரவாரமாக அறிவித்தார். “யார் அழிவின் தொடக்கம் இது?” என்று அப்போதே மனதில் ஒரு வரி ஓடியது.
இப்போது உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. உக்ரைனின் பல நகரங்கள் அழிந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியமும் நேடோவும் திணித்த போர் இது. அமெரிக்காவை நம்பாதே என்ற ரஷ்யாவை உதாசீனம் செய்து அமெரிக்காவின் உசுப்பேற்றலில் மதி மயங்கிய உக்ரைன் இப்போது விளைவுகளை சந்திக்கிறது.
உசுப்பேற்றி விட்ட அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏதுமில்லை. அதை நம்பி ரஷ்யாவை முறைத்துக் கொண்ட உக்ரைனுக்குத்தான் பாதிப்பு.
இந்த உண்மையை உலகம் உணர்ந்து கொள்ளுமா?
No comments:
Post a Comment