Sunday, October 23, 2022

முதல் தலைவருக்கு அஞ்சலி.

 


16.04.1986 - ஆயிரம் கனவுகளோடு எல்.ஐ.சி யில் பயிற்சி வகுப்புக்களுக்காக அடியெடுத்து வைத்த நாள். அவ்வளவு சுவாரஸ்யமாக செல்லவில்லை. மாலை பயிற்சி வகுப்பு முடியும் வேளையில் சிலர் உள்ளே வந்தனர். அவர்களை  பார்த்ததும் மைக்கையும் ஸ்பீக்கரையும் ஒருவர்  அவசர அவசரமாக அகற்றினார்.

வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்து கம்பீரமான தோற்றத்துடன் ஒருவர் பேச ஆரம்பித்தார்.

"மைக்கை வைத்து விட்டு செல்லுங்கள் என்று சொல்லியிருக்கலாம். எங்கள் குரல் இந்த அறையையும் தாண்டி ஒலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" 

என்று அவர் பேச பேச இன்சூரன்ஸ் ஊழியர்களின் போராட்ட வரலாற்றுக்குள் பயணித்து வந்தோம்.

அவர் அன்றைய தென் மண்டல இணைச் செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா.

வாழ்வில் எந்நாளும் மறக்க இயலா, எப்போதும் உற்சாகமாக இருந்தவர். 1996 ல் பணி ஓய்வு பெற்றாலும் அணி திரட்டப்படாத தொழிலாளர்களை திரட்டும் பணியில் வெற்றிகரமாக ஈடுபட்டவர்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவர் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

இன்னும் நான்கு வருடங்களில் ஓய்வு  பெறப் போகிறேன் என்ற போது " அப்படியா, ராமன் என்றால் நிறைய கேள்விகள் கேட்கும் நெய்வேலியிலிருந்து வரும் சின்னப்பையன் தான் நினைவுக்கு வருகிறார்" என்று சொல்லி சிரித்தது இப்போதும் நினைவில் உள்ளது.

இன்று காலையில் அவர் காலமான துயரச்செய்தி கிடைத்தது.

நான் சந்தித்த முதல் தலைவருக்கு
செவ்வணக்கம் 


1 comment: