இது கேரள ஆட்டுத்தாடி
ஆரிப் முகமது கான் பற்றிய பதிவு.
கேரள மாநில பல்கலைக்கழகங்களை ஆளுனரின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றும் மசோதாவை அம்மாநில சட்டப்பேரவை இயற்ற, அதற்கு அனுமதியும் வழங்காமல் மறுபரிசீலனை செய்யச் சொல்லி திருப்பி அனுப்பவும் இல்லை. பல்வேறு மாதங்களாக அவர் அதனை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
“மசோதாவை அனுமதிக்வும் செய்யாமல் திருப்பியும் அனுப்பாமல் காலம் தாழ்த்துவது சரியல்ல” என்று கேரள கல்வியமைச்சர் தோழர் பிந்து ஒரு ட்வீட் போட ஆட்டுத்தாடிக்கு கோபம் வந்து விட்டது.
“ஆளுனரின் மதிப்பை குறைப்பது போல அமைச்சர்கள் யாராவது நடந்து கொண்டால் நானே அவர்களை பதவி நீக்கம் செய்து விடுவேன்” என்$று அவரும் ஒரு ட்வீட் போட பற்றிக் கொண்டது கேரளா.
“அடேய் ஆட்டுத்தாடி, ஆளுனர் பதவியின் மதிப்பை நீ தான்யா குறைச்சிட்ட, உன்னாலதான் அந்த பதவிக்கு அசிங்ககம், அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரமெல்லாம் உனக்கு கிடையாது. உன் வேலை என்னவோ அதை மட்டும் ஒழுங்கா பாரு, முடியலைன்னா மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு உன் ஊருக்கே போயிடு”
என்று கேரள மாநில அரசியல் கட்சிகளும் மக்களும் போட்டு தாக்கி விட்டார்கள். வெறும் சமூக வலை தளங்களோடு நிற்கப் போவதாக தெரியவில்லை. ஆரிப் முகமது கான் எங்கே போனாலும் அவரை கருப்புக் கொடி துரத்தும் என்றே தெரிகிறது. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உடன் ரகசியமாக கைகோர்க்கும் காங்கிரஸ் கட்சி கூட ஆட்டுத்தாடியை கண்டிக்கிறது என்பது அங்கே ஒரு அரசியல் அபூர்வம்.
அமித்ஷாவின் உசுப்பேற்றலால் அசிங்கப்படுவது என்னமோ ஆரிப் முகமதுகான்தான். நல்ல வேளை வி.பி.சிங் இறந்து போய் விட்டார். தன்னுடைய வளர்ப்பின் கேவலமான நடவடிக்கையை அறிந்து அவர் நொந்தே போயிருப்பார்.
கேரள அமைச்சர்களை மிரட்டுவதாக நினைத்து இறுதியில் அசிங்கப் பட்டது என்னமோ ஆட்டுத்தாடிதான். அடுத்தவரை அசிங்கப்படுத்த நினைப்பவர் யாரானாலும் அவர்கள்தான் இறுதியில் அசிங்கப்படுவார்கள். அந்த உண்மையை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வன்மமும் வெறியும் ஊறிப்போனவர்கள் மீண்டும் மீண்டும் அசிங்கப்படுவதை யாரால் தடுக்க முடியும்!
தமிழக ஆட்டுத்தாடியும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் அடைந்த லேட்டஸ்ட் அசிங்கம் பற்றி பின்பு பார்ப்போம்.
//அடுத்தவரை அசிங்கப்படுத்த நினைப்பவர் யாரானாலும் அவர்கள்தான் இறுதியில் அசிங்கப்படுவார்கள். அந்த உண்மையை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வன்மமும் வெறியும் ஊறிப்போனவர்கள் மீண்டும் மீண்டும் அசிங்கப்படுவதை யாரால் தடுக்க முடியும்! //
ReplyDeleteஇது அனைவருக்கும் பொருந்தும் அல்லவா தோழரே!!
ஆமாம். அப்படி அசிங்கப்படும் ஆட்களை நான் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
Delete