Monday, October 31, 2022

குரங்கான ஆட்டுக்காரன்

 


 ஆமாம். ஊடகக்காரர்களை குரங்கு என்று திட்டிய ஆட்டுக்காரன் ஏதோ ஒரு டுபாக்கூர் லெட்டர்பேட் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் ஊடக உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றியதன் மூலமாக அவரும் ஒரு குரங்காக மாறுகிறார்.

 


ஆமாம், யாரிடமிருந்து ஊடக உரிமைகளை மீட்கப் போகிறீர்கள்? இன்று ஊடகங்கள் தங்கள் உரிமைகளை மோடியிடம்தானே அடகு வைத்துள்ளது! அப்படியென்றால் இந்த போராட்டம் மோடிக்கு எதிராகவா?

இவ்விபத்தும் கடவுளின் செய்திதானா மோடி?

 



 மேற்கு வங்கத் தேர்தல் நேரத்தில் கொல்கத்தாவில் ஒரு பாலம் இடிந்து 21 பேர் கொல்லப்பட்ட போது “மேற்கு வங்க மக்களை ஆளும் கட்சியிடமிருந்து காப்பாற்ற கடவுள் அனுப்பிய செய்திதான் பாலம் இடிந்த விபத்து” என்று பிரச்சாரம் செய்தார் மோடி.

 


அதே லாஜிக்கின் அடிப்படையில் பார்த்தால் மோர்பி பாலம் இடிந்து 140 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது கூட பாஜக அரசிடமிருந்து குஜராத் மாநில மக்களை காப்பாற்ற சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் கடவுள் அனுப்பிய செய்திதானா மோடி?

 

ஓட்டை உடைசல் குஜராத் மாடல் . . .

 


குஜராத்தில் உடைந்து நொருங்கியது வெறும் தொங்கு பாலம் மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டுவதாக கதை சொல்லப்பட்ட குஜராத் வளர்ச்சி மாடலும்தான்.

புனரமைப்புப் பணிகளை தனியாரே செய்தாராம்,

பணி முறையாக நடந்ததா என்று சோதிக்கும் முன்னரே திறந்து விட்டார்களாம்.

Too much privatization என்று முன்னொரு காலத்தில் ரயில்வே விபத்தொன்றை பார்த்த பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேய்ர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

இங்கே தனியார் பாஜக கூட்டுக் களவாணித்தனம் 70 உயிர்களை பலி வாங்கி விட்டது.

தனியாருக்கு தீபாவளிக்கு முன்பு காசு பார்க்கும் வெறி.

பாஜகவிற்கு பாலத்தை திறந்து வைத்து வளர்ச்சி முகம் காட்டி ஓட்டுக்களை பறிக்கும் வெறி.

இந்த வெறிக்கு இரை 70 உயிர்கள்.

இனி எவனாவது குஜராத் மாடல் என்றால் ஆம் ஆத்மி தேர்தல் சின்னத்தால் அடியுங்கள். (அரவிந்த் கேஜ்ரிவாலும் அந்த அடிக்கு தகுதியானவர் என்பது இன்னொரு விஷயம்) 

Saturday, October 29, 2022

கோவை சம்பவம்- வினாக்களும் விடைகளும்

 கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக பாஜக கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறது, அவர்களின் உட்கட்சி மோதல் வேறு ஏதாவது செய்தே ஆக வேண்டிய சூழலில் பந்த் நாடகம் நடத்த வேண்டியுள்ளது. 

இச்சர்ச்சை தொடர்பாக எங்கள் சேலம் கோட்டத் தலைவர்,  தோழர் ஆர்.நரசிம்மன் எழுதிய பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அவசியம் முழுமையாக படியுங்கள். முக்கியமான ஒன்று. 



இன்று ஒரு சிலரால் திட்டம் மிட்டு பரப்பப்பட்டும் பிரச்சாரம்....அதை ஒட்டி மக்கள் மத்தியில் சாதாரணமாக வரும் கேள்விகள்? அதற்கான உண்மைகள்!

கேள்வி: கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பை தடுத்திருக்க முடியாதா ?
உண்மை : நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உளவுத்துறை சில நேரங்களில் விஷயங்களை கணிப்பதில் ஏற்படும் கால தாமதம் கூட இது போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தும். 90% முன்கூட்டியே தடுக்கப்படுவது தான் உண்மை. 10% மிஸ் ஆவதை யாரும் தவிர்க்க முடியாத ஒன்று. இருப்பினும் அதன் பாதிப்பு பெரியது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

கேள்வி:காவல் துறை தோல்வி என்று எடுத்து கொள்ளலாமா?
உண்மை: நிச்சயமாக இல்லை. கார் குண்டு வெடித்த இடத்தில் இந்த நிகழ்ச்சியில் நடக்க காரணமே காவல் துறை செக்போஸ்ட் அங்கு இருந்ததால் தான். செக்போஸ்ட் ஒரு வேலை அங்கு இல்லாமல் இருந்திருந்தால் இந்த கார் குண்டு வேறு எங்காவது மக்கள் கூட்டம் மத்தியில் வெடித்திருக்கும். செக் போஸ்டை பார்த்து பீதியில் தான் கார் சிக்கிக் கொண்டது. ஆகவே காவல்துறை எச்சரிக்கையாக இருந்திருக்கிறது. ஆனால் இந்த சம்பவத்தை சரியாக கணிக்க முடியவில்லை என்று பார்ப்பது தான் சரி.

கேள்வி: மாநில அரசு பிரச்சினையை மூடி மறைக்க பார்கிறதா ?
உண்மை: எப்படி சாத்தியம். எந்த ஒரு அரசும் அப்படியே மூடி மறைக்க முடியாது. மீடியா வெளிச்சம் எதிர் கட்சிகள் என இந்த விவகாரம் வெளியே வந்துவிடும் என்று கூடவா மாநில அரசுக்கு தெரியாது. ஆகவே அரசு இதை மென்மையாக சொல்ல வருவதாக சித்தரிக்கும் போக்கு கற்பனை. எந்த மாநில அரசும் டவுன் பிலே செய்ய முடியாது.

கேள்வி: திமுக அரசு முஸ்லிம் வாக்கு வங்கியை மனதில் கொண்டு இதை மென்மையாக கையாள்கிறது என்ற விமர்சனம்?
உண்மை: இது கற்பனை. எந்த ஒரு அரசும் அப்படி செய்ய முடியாது. காரணம் இது தீவிரவாத செயல். இதை மென்மையாக கையாண்டால் இது தொடரும். அதுவே மாநில அரசிற்கு தலைவலி ஆகும். ஏன் அரசே கூட கலைக்கப்பட்டு விடும் என்று மாநில அரசுக்கு தெரியாதா. 

மேலும் ஒரு வாதத்திற்கு அப்படியே வைத்துக் கொள்ளலாம்...காவல்துறை உளவுத்துறை எல்லாம் சம்மதிக்குமா. அப்படி அவை சம்மதிக்க முன்வந்தாலும் மத்திய அரசின் உளவுத்துறை விட்டு விடுமா. இதைத் தாண்டி பத்திரிகை எதிர் கட்சி என எல்லாம் இருக்கும் போது இது அபத்தமான சிந்தனை. மேலும் மாநில அரசு மென்மையாக இருந்தால் டிஜிபியே நேரில் போவாறா ? 12 மணி நேரத்தில் காவல்துறை குற்றவளாகிளை கைது செய்ய முடியுமா ? 

கேள்வி: முதலில் என்.ஐ.ஏ விசாரணை பற்றி சொல்லாத தமிழக அரசு திரு அண்ணாமலை கூறிய உடன் என்.ஐ.ஏ விசாரணைக்கு இறங்கி வந்தது ஏன்?
உண்மை: இது கிராமத்தில் சொல்லும் பழமொழி மாதிரி... காக்காய் உட்கார பணம் பழம் விழுந்த மாதிரி. மாநில அரசு முதல் கட்ட அடிப்படையான விசாரணையை செய்து அதில் தேவை இருந்தால் என்.ஐ.ஏ விடம் தருவது தான் நியாயம். எதுவுமே செய்யாமல் கேசை என்.ஐ.ஏ விடம் கொடுத்தால் அப்போது இதே அண்ணாமலை என்ன சொல்வார் பூர்வாங்க விசாரணை கூட செய்ய தவறிய மாநில அரசு என்று சொல்வார். 

தமிழக அரசு முதல் கட்ட விசாரணையில் இதில் தமிழகத்தை தாண்டிய தொடர்புகள் இருக்கும் என்று கணித்தவுடன் என்.ஐ.ஏ விடம் கேசை வழங்க முடிவு செய்துள்ளது. இது தான் சரி. ஒரு வேலை வெறும் தமிழக தீவிரவாத குழு என்றால் மாநில போலீஸே இதை கையாண்டு இருக்கும். ஆக தேவைக்கு ஏற்ப தான் முடிவு. 

இந்த தொடர்புகளை உறுதிப் படுத்த பத்து நாள் ஆகி இருந்தால் பத்து நாள் கழித்து இந்த முடிவு வந்திருக்கும். இரண்டு மூன்று நாளில் தெரிந்ததால் தற்போது வந்துள்ளது அவ்வளவே. இது தான் யதார்த்தம். சொல்லப் போனால் தமிழக காவைல்துறை ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு நிகரானது என்று பல்வேறு வழக்குகள் விசாரணையில் நிரூபித்துள்ளது. இந்த வழக்கில் கூட மிகவிரைவில் குற்றவாளிகள் பற்றி பல்வேறு தகவல்களை ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளது. என்.ஐ.ஏ. வசம் வழக்கு போனால் கூட தமிழக காவல்துறை உதவி தேவைப்படும் என்பது உறுதி.

கேள்வி: குண்டு வெடிப்பை ஒரு சிலர் எதிர் வினை என்று சொல்கிறார்களே ?
உண்மை: இது அபத்தமான சிந்தனை. ஆனால் இந்த கூற்றில் ஒரு பகுதி உண்மை. வேலை இல்லாத முஸ்லிம் இளைஞர்கள் சில மதவாத சக்திகளால் மூளைச்சலவை செய்து பணத்திற்காக...மதவெறி போர்வையில் தவறாக வழிநடத்தப்பட்ட தால் தான் இவை நிகழ்கிறது. இதற்கு அவர்கள் கைகாட்டும் காரணம் பெரும்பான்மை மதவாதத்தினால் அவர்கள் அடைந்த பாதிப்பு என்று.

ஆனால் ஒரு கொலைக்கு மற்றொரு கொலை தீர்வாகாது. எவ்வளவு தான் நியாயம் இருந்தாலும் தீவிரவாத செயல் தீர்வு அல்ல. ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பான்மை மதவெறி தீவிரவாதம் சிறுபான்மை மத வெறி தீவிரவாதம் இரண்டும் ஒடுக்கப்பட்ட வேண்டியதே. 

மக்கள் உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அப்படி வன்முறை மூலமாக அப்பாவிகளை கொன்று குவிக்கும் கூட்டம் எதுவானாலும் ஒடுக்கப்பட வேண்டியதே. தண்டிக்கப் பட வேண்டியதே.

எளிமையாக சொல்லப் போனால் இவர்கள் மதச் சாயம் பூசிய தீவிரவாதிகள். அவ்வளவே. 

கேள்வி: இது போன்ற தீவிரவாத செயல்களை ஆதரித்து பேசுவோர்?
உண்மை: சந்தேகம் இன்றி அவர்கள் தீவிரவாதிகளே. எந்த மதத் தீவிரவாதத்தை யார் ஆதரித்தாலும் அவர்கள் தீவிரவாதிகளே.  அவர்கள் இந்து முஸ்லிம் என்று சொல்லக்கூடாது தீவிரவாதிகள் என்றே சொல்ல வேண்டும். தீவிரவாதிகளுக்கு மதம் ஏது. அவர்கள் வன்முறையாளர்கள். மக்கள் உயிரை பறிக்கும் எமன்கள். இந்த எமன் எந்த மதமாக இருந்தாலும் எமன் எமன் தானே .

கேள்வி: இது போன்ற தீவிரவாத செயல்களை தடுக்கு சட்டம் கடுமையாக வேண்டும்?
உண்மை: சட்டத்தை  கொண்டு தவறு நடந்தவுடன் தண்டிக்க முடியும். ஆனால் தவறே நடக்காமல் தடுக்க முடியாது. தற்போது கூட தூக்கு தண்டனை வரை தீவிரவாத செயல்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் குற்றம் குறையவில்லையே ? தடுக்க இருக்கும் ஒரே வழி நல்ல மனிதர்கள் கையில் உள்ளது. மதங்களை தாண்டி மனித நேயம் காக்க வேண்டும். அடிப்படையில் அன்பு தான் இணைக்க முடியும். ஆகவே இரு தரப்பிலும் உள்ள நல்ல மனிதர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். சில நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறர் நம்பிக்கையை மதித்து நடக்க வேண்டும். ஒருவர் பண்டிகையில் மற்றோரு பகுதி கலந்து கொள்ள வேண்டும். இது போன்ற இணக்கமான செயல்பாடு தான் நீண்ட கால பலனை தரும். 

அரசு தரப்பில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதின் மூலமாக தீவிரவாதத்தை நோக்கி வேலை இல்லாத இளைஞர் பட்டாளம் செல்லாமல் தடுக்க முடியும்.

இல்லை என்றால் இளைஞர்கள் தவறாக வழிநடத்தும் நிலை தொடரும். இதனால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. ஒரு சில அரசியல் இயக்கங்களுக்கும் அதன் தலைவர்களும் தவிர...

கேள்வி: தீவிரவாத செயல்களே இல்லாத தேசம் சாத்தியமா ?
உண்மை: சாத்தியம். எல்லோருக்கும் வேலை கிடைத்தால் அவர் நல்ல முறையில் வாழ குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கவே விரும்புவார்கள். அது இல்லாத போது தான் சில குள்ளநரி கூட்டங்களிடம் சிக்கி கொள்கிறார்கள்.

இந்த குள்ளநரி கூட்டம் இந்த சாமானிய இந்தியனை தனது தேவைக்காக பலிகடா ஆக்கி விடும். 

 இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.‌ஆகவே வேலை வாய்ப்பு அவசியம். அடுத்த சமூகத்தில் இணக்கமான முறையில் வாழ அரசு வழிவகை செய்ய வேண்டும். எந்த மதவெறி தலைதூக்கினாலும் கடுமை காட்ட வேண்டும். அரசுகள் பாரபட்சம் இன்றி செயல்படுகின்றன என்ற நம்பிக்கை சாமானிய மக்களுக்கு வரவேண்டும். 
ஜனநாயக நாட்டில் அனைத்து மதநம்பிக்கைகளுக்கு ஏன் மதநம்பிக்கையே இல்லாத வர்களுக்கு ம் சம வாய்ப்பு தருவதும் அவர் அவர் நம்பிக்கைக்கு சட்டத்தின் படி  மதிப்பு அளிப்பதும் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதும் அரசின் கடமை.

இந்த முயற்சி ஒரளவு  வெற்றி பெற்றாலே தீவிரவாத அமைப்புகள் தங்கள் கூடாரத்தை மாற்றிக் கொள்ளும்.

மேலே உள்ள கேள்விகள் தவிர ஒரு முக்கிய கேள்வி இருக்கிறது...

வாதத்திற்கு மாநில உளவுத்துறை தோல்வி கண்டது என்று வைத்துக் கொள்வோம் !  சில நாட்கள் முன்பு பிஎப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன் எதிரொலி கோவையில் இருந்தது. இந்த பின்புலத்தில்  அறிந்த மத்திய உளவுத்துறை எப்படி கோட்டை விட்டது. தமிழக அரசு முஸ்லிம் தீவிரவாதிகள் மீது மென்மையான அணுகுமுறை கொண்டுள்ளது என்ற வாதத்தை வைப்போர் மத்திய அரசை பற்றி மத்திய உளவுத்துறை தோல்வி பற்றி ஏன் பேசவில்லை?  ஆக யதார்த்தமான உண்மை என்னவென்றால் இது போன்ற தீவிரவாத செயல்களை கணிப்பது எளிதல்ல. ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதை காட்டிலும் ஒரே அணியில் நின்று தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும். இதில் அரசியல் ஆதாயம் காண நினைப்பது எந்த வகையிலும் பயன் அளிக்காது.

 

இப்பவும் உதவாக்கரைதான் . . .

 


இவ்வளவு நாகரீகம் அவசியமில்லை தோழர்.

தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி உதவாக்கரைதான். உருப்படாத பேர்வழிதான். பெயரைப் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி ஆட்டுத்தாடி உதவாக்கரைதான், உதவாக்கரைதான். . .

Friday, October 28, 2022

ஆட்டுக்காரனிடம் குரங்கு வேலையை காண்பித்திருந்தால்

 


மேலே உள்ள தலை நினைவுக்கு வருகிறதா?

கடனை திருப்பிக் கேட்ட என் கட்சிக்காரனின் தலையை தன் குரங்கைக் கொண்டே இப்படி செய்துள்ளான் என்று வக்கீல் வண்டுமுருகன்(வடிவேலு)  கோர்ட்டில் முழங்கியது இப்போது நினைவுக்கு வருகிறதா?

தங்களை குரங்கு என்று சொன்ன ஆட்டுக்காரனின் தலையை நம் ஊடகக் காரர்கள் இப்படி குதறி வைத்து இருக்க வேண்டும். அப்படி செய்தால் அவன் இனி ஆணவத்துடன் பேச மாட்டான்.

 என்ன சாம்சங் போன் வாங்கியவர்களால் அப்படி சுயமரியாதையோடு செயல்பட முடியாது.

Thursday, October 27, 2022

மானமிருந்தால் ஆட்டுத்தாடி. . .

 


கேரள ஆட்டுத்தாடி ஆரிப் முகமது கான் ஏற்கனவே வில்லங்கம் செய்து கொண்டிருக்கிறார். 

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் அனைவரையும் பதவி விலகச் சொன்னார். அவர்கள் மறுத்து விட்டனர்..

உபி மாநில பல்கலைக் கழகங்களையே  பார்த்தவர்களுக்கு கேரள பல்கலைக்கழகங்களில் நிலவும் ஜனநாயகம் புரியாது என்று சொன்ன நிதியமைச்சர் தோழர் பாலகோபால் மீது கோபம் வந்து அவர் மீது நான் மகிழ்ச்சி இழந்து ( Loss of Pleasure)  விட்டேன். அதனால் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதினார்.

தோழர் பினராயி விஜயனோ " யார் அமைச்சராக இருக்க வேண்டுமென்பதெல்லாம் முதல்வரின் உரிமை. நீயெல்லாம் தலையிடக் கூடாது. இல்லாத அதிகாரத்தையெல்லாம் பயன்படுத்தக் கூடாது " என்று அரசியல் சாசன வகுப்பே எடுத்து விட்டார்.

காங்கிரஸ் கட்சி ஆட்கள் வேறு திட்டறாங்க.

மானமுள்ள மனுசனா இருந்தா  மதியாதார் தலைவாசல் மிதிக்க மாட்டேன்னு பதவியை ராஜினாமா செய்துட்டு ஓடனும். 

ஆனால் ஆரிப்புக்குத்தான் அதெல்லாம் கிடையாதே!

Wednesday, October 26, 2022

மோடியை திட்ட அலுப்பா இருக்கு

 

பொதுத்துறை நிறுவனங்களில் புதிதாக பணி நியமனம் பெற்றவர்களோடு மோடி உரையாடப் போவதாக முன்பே எழுதி இருந்தேன்.

யூட்யூப் லைவில் அவர் இந்தியில் ஆற்று ஆற்று என சொற்பொழிவாற்றியதால் எதுவும் புரியவில்லை சார் என்றார்கள். புரியாட்டியும் Feed back கொடுங்க என்ற கூத்து வேறு கதை.

மறுநாள் பேப்பர் படிக்கையில் உண்மை தெரிந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட எல்லோருக்கும் மோடி அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு புதிதாக பணி நியமன ஆணை என்பது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து!  

இந்த கோமாளித்தனத்திற்கு நிர்வாகங்களும்  உடந்தை என்பதுதான் எரிச்சலூட்டுகிறது.

இந்த பிழைப்பிற்கு பிச்சையெடுக்கலாமே மோடி என்று திட்டுமளவிற்கு கோபம் வருகிறது.

வெ.மா.ரோ.சூ.சொ இல்லாத ஜென்மத்தை என்ன திட்டி என்ன பயன் என்று அலுப்பாகவும் உள்ளது.

Monday, October 24, 2022

பக்கத்து இலைக்கு பாயசமா மாலன்?

 


மூமூமூத்த்த்த்தவரின் பதிவு கீழே.

 


அறிஞர் அண்ணாவை இழிவு படுத்திய பத்ரி சேஷாத்ரியை தமிழ்நாடு அரசு அவர் பதவியிலிருந்த குழுவிலிருந்து நீக்கியதற்கு மாலன் தெரிவித்துள்ள ஆலோசனை.

 பத்ரி சேஷாத்ரிக்கா பதவி கேட்கிறார் மாலன். நோ. பத்ரி சேஷாத்ரியை முன்னிருத்தி, உங்களை நான் வசை பாடினாலும் எனக்கும் ஒரு பதவி கொடுங்கள் என்று விண்ணப்பித்துள்ள மனு.

 

சாகித்ய அகாடமி பதவிக்காலம் முடிகிறதா என்ன மாலன்? பக்கத்து இலைக்கு     பாயசம் கேட்கிறீர்கள்!

 

உங்கள் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் வினாயக முருகன் சரியாகத்தான் சொல்லியுள்ளார்.

 

“கருப்பன் குசும்பன், பதவிக்கு அடிபோடறான்”

 

Sunday, October 23, 2022

முதல் தலைவருக்கு அஞ்சலி.

 


16.04.1986 - ஆயிரம் கனவுகளோடு எல்.ஐ.சி யில் பயிற்சி வகுப்புக்களுக்காக அடியெடுத்து வைத்த நாள். அவ்வளவு சுவாரஸ்யமாக செல்லவில்லை. மாலை பயிற்சி வகுப்பு முடியும் வேளையில் சிலர் உள்ளே வந்தனர். அவர்களை  பார்த்ததும் மைக்கையும் ஸ்பீக்கரையும் ஒருவர்  அவசர அவசரமாக அகற்றினார்.

வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்து கம்பீரமான தோற்றத்துடன் ஒருவர் பேச ஆரம்பித்தார்.

"மைக்கை வைத்து விட்டு செல்லுங்கள் என்று சொல்லியிருக்கலாம். எங்கள் குரல் இந்த அறையையும் தாண்டி ஒலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" 

என்று அவர் பேச பேச இன்சூரன்ஸ் ஊழியர்களின் போராட்ட வரலாற்றுக்குள் பயணித்து வந்தோம்.

அவர் அன்றைய தென் மண்டல இணைச் செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா.

வாழ்வில் எந்நாளும் மறக்க இயலா, எப்போதும் உற்சாகமாக இருந்தவர். 1996 ல் பணி ஓய்வு பெற்றாலும் அணி திரட்டப்படாத தொழிலாளர்களை திரட்டும் பணியில் வெற்றிகரமாக ஈடுபட்டவர்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவர் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

இன்னும் நான்கு வருடங்களில் ஓய்வு  பெறப் போகிறேன் என்ற போது " அப்படியா, ராமன் என்றால் நிறைய கேள்விகள் கேட்கும் நெய்வேலியிலிருந்து வரும் சின்னப்பையன் தான் நினைவுக்கு வருகிறார்" என்று சொல்லி சிரித்தது இப்போதும் நினைவில் உள்ளது.

இன்று காலையில் அவர் காலமான துயரச்செய்தி கிடைத்தது.

நான் சந்தித்த முதல் தலைவருக்கு
செவ்வணக்கம் 


Saturday, October 22, 2022

மானங்கெட்ட பிழைப்பு ஏன் மோடி?

 


பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காக பிறந்தவை என்று சொன்னவர் மோடி. பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம்தான் மோடியின் ஊதாரிச் செலவுகள் செய்யப்படுகின்றன. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான எல்.ஐ.சி யின் மூன்றரை சதவிகித பங்குகள் விற்கப்பட்டன. இரண்டு பொதுத்துறை வங்கிகளும் ஒரு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமும் விற்பனைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏர் இந்தியா அடிமாட்டு விலைக்கு டாடாவிற்கு சமர்ப்பிக்கப் பட்டது.

விமான நிலையங்களின் பராமரிப்பு அதானிக்கு கொடுக்கப்பட்டது. எச்.ஏ.எல். நிறுவனத்திற்குப் பதிலாக பொம்மை ப்ளேன் கூட தயாரித்த அனுபவம் இல்லாத அனில் அம்பானியின் கம்பெனிக்கு ரபேல் விமான ஒப்பந்தம் தரப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் அதானிகளும் அம்பானிகளும் அவர்தம் கூட்டத்தாரும் வாங்கிய கடனெல்லாம் கோடிக்கணக்கில் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இப்படி பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்த படுபாவி மோடி.

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று வாக்குறுதி கொடுத்து நாற்காலியைப் பிடித்த மனிதனின் ஆட்சியில்தான் நாற்பது ஆண்டுகளில் காணாத அளவிற்கு வேலையின்மை விகிதம் உயர்ந்தது. இப்பிரச்சினைக்கு இந்த அற்ப மனிதன் கொடுத்த அற்புதமான தீர்வுதான் “பக்கோடா கடை வைப்பது”

இதெல்லாம் பழசுதானே, இப்போ எதுக்கு மறுபடியும் என்று கேட்கிறீர்களா?

இல்லை. புதிதாக ஒரு அராஜகம் நடக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் புதிதாக பணி நியமனம் பெற்ற ஊழியர்களிடம் இன்று மோடி உரையாற்ற உள்ளார்,

நிர்வாகங்களும் “யெஸ் பாஸ்” என்று தங்கள் விசுவாசத்தைக் காண்பித்து ஊழியர்கள் மோடி பேசுவதை கேட்கும் தண்டனையை கட்டாயமாக்கி உள்ளன, துரதிர்ஷ்டவசமாக எங்கள் நிறுவனம், எங்கள் கோட்டம் உட்பட. எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம் என்பது வேறு விஷயம்.

பொதுத்துறையை அழிக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு மனிதன் பொதுத்துறை நிறுவன ஊழியர்களோடு என்ன பேச முடியும்? பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது?

புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் எல்லாம் பட்டதாரிகள். மோடி போல இல்லாத “எம்.ஏ என்டயர் பொலிட்டிக்கல் சைன்ஸ்” படித்ததாக கதை விடும் தற்குறிகள் அல்ல,

அவர்கள் அனைவரும் இரண்டு தேர்வுகள் எழுதி பணிக்கு தேர்ச்சி பெற்றவர்கள். குஜராத்தில் ரத்த ஆற்றை ஓட வைத்து மக்களை பிளவு படுத்தி 15 லட்சம், 2 கோடி வேலை என்றெல்லாம் ஜூம்லா வாக்குறுதி கொடுத்து அதானியின் ஓசி ப்ளேனில் பறந்து பிரச்சாரம் செய்து வேலையில் சேர்ந்தவர்கள் அல்ல..

மோடியால் அவர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல முடியும்?

உங்கள் நிறுவனத்துக்கு கடுமையாக உழைத்து லாபத்தை பெருக்குங்கள். அப்போதுதான் நான் அவற்றை அடிமாட்டு விலைக்கு என் எஜமானர்களான முதலாளிகளுக்கு விற்பேன் என்று உண்மையை பேச முடியுமா? அவரின் குரங்குக் குளியல் (மன்கி பாத்) தான் நமக்கு தெரியுமே!

பொதுத்துறை நிறுவனங்களை கட்டாயுப்படுத்துவது போல இவரால் எந்த தனியார் நிறுவன ஊழியர்களிடமாவது பேச முடியுமா? இவரின் யோக்கியதை அறிந்த அவர்கள் இவரை கிட்டவே சேர்க்க மாட்டார்கள்.

பின் ஏன் இந்த மானங்கெட்ட  பிழைப்பு மோடி?

உங்களால் சீரழிக்கப்படுகிற பொதுத்துறை நிறுவனங்களை உங்களது விளம்பர மோகத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது அயோக்கியத்தனம் இல்லையா? அதிகார துஷ்பிரயோகம் இல்லையா?

யாரோ தயாரித்த உரையை இவர் டெலிப்ராம்ப்டரில் படிப்பதை காணும் அந்த ஊழியர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள். பிரதமரே எங்களோடு பேசினார் என்ற மாயையில் பலர் மயங்குவார்கள் என்பதும் யதார்த்தம்.

என்ன செய்ய வேண்டும்?

பாஜக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளதே என்று உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் “அந்த இடங்களில் பள்ளிக் கூடங்களை அதிகரிப்பேன்”  என்று கூறினார்.

அது போலத்தான் மோடியின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொழிற்சங்க வகுப்புக்களை விரைவில் எடுக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்களுக்கு உள்ளது. போராடாமல் எதுவும் கிடைக்காது என்ற உண்மையை சமீபத்திய யமஹா தொழிலாளர்களின் இரண்டாவது போராட்டத்தின் (முதல் போராட்டம் குறித்த 

 "மறக்க முடியாத மாலை அது" என்ற எனது அனுபவப் பதிவை இணைப்பின் மூலம் படியுங்கள் 

வெற்றியோடு சேர்த்து சொல்லித்தர வேண்டும்.                                                                                                                                                                

 

Friday, October 21, 2022

கடவுள்தான் காமராமேனா மோடி?

 


 மோடியின் கேதார்நாத் கோயில் போட்டோ ஆங்கிள்களை பாருங்கள்.






 கர்ப்பகிரகத்தில்  உள்ள கடவுளின் சிலையின் மீது நின்று கொண்டோ, அமர்ந்து கொண்டோதான் இந்த படங்களை எடுத்திருக்க முடியும்.

 

ஒருவேளை     மோடிக்காக கடவுளே போட்டோ எடுத்திருப்பாரோ?

 

பிகு 1 : மோடியை போட்டோ எடுக்க கர்ப்பகிரகத்தில் போட்டோகிராபரை அனுமதித்துள்ளனர். அதை பொது நடைமுறையாக அனைவருக்கும் அமலாக்கினால் உண்மையிலேயே நான் அந்த கோயில் நிர்வாகத்தை பாராட்டுவேன். சனாதனத்திற்கு எதிராக சமத்துவம் மேலோங்கும் முடிவு.

 

எச்சரிக்கை 1 : ஒருவேளை மோடிக்காக சி.சி. டிவிக்கள் அமைக்கப் பட்டு இருந்தால் அவற்றை அகற்றி விடுவது நல்லது. தேவநாதன் மாதிரியான ஆட்களால் கோயில் அசிங்கப்படக் கூடாதல்லவா!

 

என்ன எழவிற்கு கிழக்கில் தமிழ்

 


கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி ஜாதி வெறிப் பித்து தலைக்கேறி மன நிலை பாதிக்கப்பட்டு அபத்தமாக உளறிக் கொண்டு இருக்கிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அமெரிக்காவில் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தது என்று சொன்ன மனிதன் தானே!



அறிஞர் அண்ணாவை IDIOT என்று திட்டிய மனிதன்.




சமஸ்கிருதம் போல தமிழில் இலக்கியம் இல்லை என்று தொடர்ந்து தமிழ் மீது வக்கிரத்தை கக்கிக் கொண்டிருக்கிற பேர்வழி.





வரும்படி இல்லாத பதவி போனால் நஷ்டமில்லை என்று திராட்சை கிட்டாத நரியாய் புலம்பும் ஜந்து.

எனக்கு ஒரே ஒரு கேள்விதான். உனக்கு மிகவும் உயர்ந்ததாக, உன்னதமாக தோன்றும் சமஸ்கிருதத்தில் புத்தகங்களை வெளியிட வேண்டியதுதானே!

என்ன எழவுக்கு தமிழில் நூல்களை வெளியிடுகிறார் இந்த வெறியர்?

கசு, துட்டு, பணம், Money, Money

Thursday, October 20, 2022

நம்மூர் ஆட்டுத்தாடியின் அசிங்கமிது.

 



நேற்று முன் தினம் கேரள ஆட்டுத்தாடி அசிங்கப்படுவது பற்றி எழுதியிருந்தேன். இது நம்ம ஊர் ஆட்டுத்தாடி அசிங்கப்பட்ட கதை இது.

 

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தகவல் பலகையிலிருந்து.

 

*தகவல் பலகை (61): 18.10.2022*

#########################

 

*கோட்டை கனவில் கணக்கில் கோட்டை விட்ட கவர்னர்*

 

தமிழ்நாட்டின் பட்டியல் இனத்தவர்  கல்வி விகிதம் பற்றிய உண்மைக்கு மாறான தகவல்களுடன் தமிழ்நாடு கவர்னர் பேசியுள்ளார்பட்டியலின மக்களை ஏமாற்றத் துடிக்கும் கவர்னரின் செயல்

கடும் விமர்சனத்திற்கு உரியது.

 

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது 

 

"தமிழகத்தின் பள்ளிக் கல்வியில் மொத்த நுழைவு விகிதம் (GER) 51 சதவீதமாக இருக்கிறது. இது தேசிய சராசரியான 28 சதவீதத்தை விட அதிகம் ஆகும். ஆனால் பட்டியல் சாதியினர் மத்தியில் இது 13 அல்லது 14 சதவீதமாகவே உள்ளது. இது தேச சராசரியில் பாதிதான்... நாம் சமூக நீதி பற்றி பேசுகிறோம். நாம் வளர்ச்சி மாடல் பற்றி பேசுகிறோம். எல்லாம் வெறும் கூச்சல்தான்."

 

என்று பேசியுள்ளார். ( "இந்து" நாளிதழ் அக்டோபர் 18, 2022)

 

உண்மையிலேயே கவர்னருக்கு அக்கறை இருக்குமேயானால் சமூக நீதியைப் பேசாத வட மாநிலங்களுடன் ஒப்பிட்டு சொல்லி இருப்பார். இது சமூக நீதி கருத்தாக்கத்திற்கு அவர் வைக்கும் குறி. அரசியல் விளையாட்டுக்கு அவர் போடும் அச்சாரம். அவ்வளவுதான்

 

ஆனால் அவர் அவசரத்தில் கணக்கில் கோட்டை விட்டு விட்டார். இந்து இதழ் நிருபர் பொன் வசந்த் செய்தியிலேயே அதை குறிப்பிட்டுள்ளார்.  

 

*முதல் கோட்டை,* இந்த 51 சதவீதம், 28 சதவீதம் என்கிற மொத்த நுழைவு விகிதம் (GER) பள்ளிக் கல்வி குறித்ததல்ல. அது 2019 - 20 உயர் கல்வி குறித்த ஆய்வின் புள்ளி விவரங்கள். அதில் தமிழ்நாடு விகிதம் 51.4 சதவீதம். தேசிய அளவு 27.1 சதவீதம்

 

*இரண்டாவது கோட்டை,* தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் மத்தியில் உயர் கல்வி விகிதம் (GER) 13 அல்லது 14 சதவீதம் அல்ல. அது 39.6 சதவீதம். அதற்கான தேசிய சராசரி 23.4 சதவீதம். தமிழகம் அதிலும் தேசிய சராசரியை விட அதிகம்தான்

 

யாருக்காகவோ கோட்டையில் கண் வைத்தால், இப்படி கோட்டை விடுவது இயல்புதான். அரசியல் கணக்கு தப்பாக இருந்தால் இப்படி கூட்டல் கழித்தல்களும் தப்பாகத்தான் வரும் கவர்னர் அவர்களே

 

கல்வியில் "சாதிய   இடைவெளி" இருப்பது உண்மை. ஆனால் அதற்காக கவர்னர் கண்களில் இருந்து வழிகிற "கண்ணீரில்உண்மை இல்லை. உண்மை உள்ளத்தில் இருந்தால் அவர் என்ன பேசியிருக்க வேண்டும்

 

சமூக நீதி பேசும் மண்ணிலும் சனாதனம் இன்னும் அலைக் கழிக்கிறது என்றல்லவா பேச வேண்டும்! சமூக நீதியைப் பேசாத மாநிலங்களில் சனாதனம் எப்படி இன்னும் மோசமாக, குரூரமாக ஆட்டம் போடுகிறது என்பதையும் சேர்த்து அல்லவா சொல்ல வேண்டும்! இதற்கு தீர்வு, நிலவுடைமை உள்ளிட்ட அடிப்படை அம்சங்களில் தேவைப்படும் மாற்றங்கள் என்பதை அல்லவா சொல்ல வேண்டும்

 

ஆனால் கவர்னர் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை

 

ஏற முடியவில்லை என்றால் ஏணியை சரி செய்யலாம். ஆனால் பரிதாபப்படுவது போல ஏணியைத் தட்டி விடும் சூட்சுமம் இது. ஏமாறமாட்டார்கள் போலி முகங்களை காலமெல்லாம் பார்த்துப் பழகிய பட்டியல் சாதி மக்கள்

 

*.செல்லக்கண்ணு*

தலைவர்

 

*கே.சாமுவேல்ராஜ்

பொதுச்செயலாளர்

 

தீண்டாமை ஒழிப்பு முன்னணி